நண்பர்களே உங்கள் கணிணியில் வைத்திருக்கும் எழுத்துருக்களை காண்பதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருள் வெவ்வேறு அளவுகளில் உங்கள் எழுத்துருவை காண்பிக்கிறது. இந்த மென்பொருளில் உங்கள் எழுத்துருவை Bold, Italics, Underline செய்தால் எப்படியிருக்கும் என்பதையும் இதன் மூலம் பார்க்க முடியும். மென்பொருள் சுட்டி
நீங்கள் இணையம் வழியாக அடிக்கடி தரவிறக்கம் செய்யக்கூடியவரா அதுவும் முக்கியாமாக கீழ்கண்ட தளங்களில் அடிக்கடி தரவிறக்கம் செய்பவரா
Bitroad.net, DepositFiles.com, EasyShare.com, FileFactory.com, Hotfile.com, Klurk.com, Letitbit.net, Load.to, MegaUpload.com, Rapidshare.com, SendSpace.com, Uploading.com and zShare.net அப்படியென்றால் உங்களுக்குதான் பிடியுங்கள் இந்த மென்பொருளை
சுட்டி
படிக்கும் அனைவருக்கும் ஒர் வேண்டுகோள் தாங்கள் சில பல விளம்பரங்களை கிளிக் செய்தால் இன்னும் நிறைய உற்சாகம் கிடைக்கும் நண்பர்களே உதவுங்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சரி ஒரு பதிவு போட்டு விடுவோம் என்று இன்று உடனே வந்து விட்டேன்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் விண்டோஸ் 7 இன்னும் முழுமையாக வெளியிடவில்லை அதற்குள் விண்டோஸ் 8 ன் வேலைகளை ஆரம்பித்து விட்டனர். 2012 மத்தியில் வெளிவரும் என்று தகவல்.
விஎல்சி மீடியா ப்ளேயரின் புதிய பதிப்பு 1.0 வெளிவந்து விட்டது. இதில் நிறைய குறைகள் களையப்பட்டு வெளிவந்துள்ளது. தரவிறக்கி நிறுவி செயல்படுத்தி பாருங்கள். விஎல்சி தரவிறக்க சுட்டி
விஎல்சி இணையத்தளம் சுட்டி
பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவ்களை இந்த முறையில் பார்மெட் செய்து பாருங்கள் கட்டாயம் கைமேல் பலன் கிடைக்கும்.
முதலில் ஸ்டார்ட் மெனு Start Menu கிளிக் செய்யுங்கள்.
ரன் Run தேர்வு செய்யுங்கள். அந்த பெட்டியில் CMD என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்.
பிறகு
Format/x J: என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள். இதில் J: என்பது உங்கள் யுஎஸ்பி ட்ரைவின் எழுத்தாகும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே 150வது பாலோயராக திரு. ஷண்முகப்பிரியன் இணைந்து நம் வலைப்பதிவை பெருமைப்படுத்திருக்கிறார் இவர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இவர் ஒரு திரைப்பட எழுத்தாளன்! இயக்குனர்! வெற்றிவிழா, சின்னத்தம்பி பெரிய தம்பி, பிரம்மா போன்று 30 படங்களை எழுதியதும், ஒருவர் வாழும் ஆலயம் போன்று நான்கு படங்களை எழுதி இயக்கியதும் இவரது அனுபவங்கள்.
ஷண்முகபிரியனின் படித்துறை என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறார். அவருக்கு நன்றி. இவரை போன்ற பெரியவர்கள் என்னை பின் தொடர்வதற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. தொழில்நுட்ப பதிவுகளுக்கு இப்படி ஒரு பெருமையா என்று புளகாங்கிதம் அடைகிறேன். மிகவும் குறுகிய நாட்களில் அலெக்ஸா ரேங்கில் நான்கு லட்சத்துக்குள் நம் வலைப்பதிவும் வந்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது நன்றி. பின் தொடர்ந்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கூகிள் ரீடர் மூலமும் மற்ற திரட்டிகளின் மூலம் படிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் ஒரு லட்சத்துக்குள் வர உங்கள் பேராதரவை தொடர்ந்து அளிக்கவும். நாளை என்னுடைய முப்பதாவது பிறந்த நாள் அனைவரும் வாழ்த்துங்கள் வளர்கிறேன்.
நாம் இதுவரை யூட்யுப் தரவிறக்க எத்தனை இணையதளங்கள் பயன்படுத்தியிருப்போம். அதில் இதுவும் ஒன்று ஆனால் இதில் ஒரு சிறப்பு இந்த இணையத்தளத்தின் மூலம் Facebook, MySpace போன்ற சமூகதளங்களிலிருந்தும் வீடியோக்களை தரவிறக்கலாம் என்பதே அது.
இந்த தளத்திற்கு செல்லுங்கள்
சுட்டி
நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் சுட்டியை கொடுங்கள். அந்த சுட்டிகள் இப்படி இருக்க வேண்டும்.
Youtube Link
http://www.youtube.com/watch?v=wcdl0BOwpeQ
MySpace Link
http://vides.myspace.com/index.cfm?fuseaction=vids.individual&videoid=58793690
Facebook Link
http://www.facebook.com/video/video.php?v=37511833824
இணையத்தள
சுட்டி
இதுவரை விமான பயணம் எல்லோருக்கும் கிடைத்திருக்குமா! என்பது சந்தேகமே சிலர் விமான பயணச்சீட்டைக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. ஆனால் உங்கள் பெயரிலே ஒரு விமான பயணச்சீட்டை வாங்க வேண்டும் என்றால் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
அதற்காக போலி விமான பயணச்சீட்டை உருவாக்க இந்த தளம் உங்களுக்கு உதவுகிறது. உங்கள் நண்பர்களிடம் போலி விமான பயணச்சீட்டு அச்சடித்து காட்டலாம் ஆனால் இதை வைத்து விமான நிலையத்திற்குள் செல்ல முயற்சிக்காதீர்கள் அது பெரிய பிரச்சனைக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு உருவாகலாம். பார்ப்பதற்கு விமான பயணச்சீட்டு போலவே இருக்கும் விமான பயணச்சீட்டை உருவாக்க ஒரு தளம்
சுட்டி
உங்கள் புகைப்படத்தை கண்ணாடியில் பிம்பம் தெரிவது போல மாற்ற இங்கே செல்லவும்
சுட்டி
கண்ணாடி எபெக்டில் மாற்றிய என் மகனின் புகைப்படம்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நான் எத்தனையோ திரையை படம்பிடிக்கும் மென்பொருள் கொடுத்திருந்தாலும் இந்த மென்பொருள் சில புதிய விஷயங்களையும் செய்வதால் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
நீங்கள் திரையை படம்பிடிக்கும் கோப்புகள் அனைத்தும் .AVI கோப்பாக மட்டுமே படம்பிடித்துத் தரும். ஆனால் இந்த மென்பொருள் .FLV, .WMV, .SWF போன்ற கோப்புகளாக படம் பிடித்து தரும் வசதி உள்ளது.
மென்பொருள் தரவிறக்க
சுட்டி
நீங்கள் உங்களிடம் SWF வகை கோப்புகள் உள்ளதா அதில் இருந்து உங்களுக்கு தேவையான படங்களை மட்டும் பிரித்து எடுக்க வேண்டுமா? ஆனால் முடியாது என்பர் சிலர் முடியும் என்று சொல்லுங்கள் இதோ அதற்கு என்று ஒரு மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் SWF கோப்புகளில் உள்ள புகைப்படங்களை தனியாகவோ மொத்தாமாகவோ பிரித்து எடுத்து கையாள முடியும். மென்பொருள் தரவிறக்க
சுட்டி
உங்களிடம் USB என்பதற்கு அர்த்தம் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் உடனே Universal Serial Bus என்று கூறுவீர்கள். இது போன்ற ஒவ்வொரு சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் கொண்ட டேட்டாபேஸ் மென்பொருள் ஒன்று தனி மனிதர்கள் ஒன்று கூடி உருவாக்கி இலவசமாக தந்திருக்கிறார்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் பணமும் கொடுக்கலாம்.
இந்த மென்பொருளில் 17,105 சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் உள்ளன. இது அவ்வப்பொழுது புதிய வார்த்தைகள் பதியப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மென்பொருளை அவ்வப்போது நீங்கள் அப்டேட் செய்தால் போதும். Smiley உபயோகபடுத்த ஒரு அகராதியும் இதில் உண்டு.
மென்பொருள் தரவிறக்க
சுட்டி
உங்களிடம் யுஎஸ்பி டிரைவ் அது 8ஜிபி அளவுள்ளதா உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி விஸ்டா டிவிடி உள்ளதா அந்த டிவிடிக்களை ஒவ்வொரு முறையும் நிறுவ உபயோகப்படுத்துவீர்களா. ஆம் என்றால் உங்களுக்குதான் இந்த மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் சிடியிலிருந்து யுஎஸ்பி டிரைவிற்கு உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி டிஸ்கினை சேமித்துக் கொடுக்கும் இதனால் நீங்கள் உங்கள் விண்டோஸ் பார்மெட் செய்து நிறுவ சிடியை தேவையில்லை இந்த யுஎஸ்பி டிரைவினை வைத்து பூட்டபிளாக நிறுவ வேண்டும். மென்பொருள்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்.
உங்கள் ஒட்டுக்களை தமிழிசிலும் தமிழ்10 லும், தமிழ்மணத்திலும் குத்துங்கள்.
» Read More...