நண்பர்களே நாம் ஒவ்வொரு முறை பிடிஎப் கோப்புகளை படிப்பதற்கு அடோப் அல்லது பாக்ஸிட் ரீடர் போன்ற மென்பொருள்களை நாடுகிறோம். ஆனால் நாம் வெளியில் இண்டெர்நெட் பிரவுஸிங் சென்டரில் இருக்கும் போது சில நேரம் இந்த மாதிரி மென்பொருள் இல்லாமல் இருக்கும். அப்பொழுது இந்த மாதிரி ஆன்லைன் தளங்கள் மிகவும் உதவியாக இருக்கு. அது மட்டுமில்லாமல் ஒரு தளத்தில் ஒரு பிடிஎப் கோப்பு இருக்கும் அந்த கோப்பினை தரவிறக்கி படிக்காமல் நேரடியாக இந்த தளங்களில் உள்ளீடு செய்து படிக்கலாம். வேண்டும் என்றால் தரவிறக்கி கொள்ளலாம்.
யாஹூ நிறுவனம் தனது சாட்டிங் மென்பொருளான யாஹூ மெஸெஞ்சர் புதிய பதிப்பு 10 வெளியிட்டுள்ளது. இந்த புதிய பதிப்பில் வெகு தெளிவான வீடியோ சாட்டிங் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய பதிப்பு தரவிறக்க சுட்டி
போர்டபிள் விண்டோஸ் மீடியா ப்ளேயர் 12 (விண்டோஸ் எக்ஸ்பி
மற்றும் விஸ்டாவில் உபயோகிக்கலாம்) உங்களுக்காக மீடியா ப்ளேயர்
நண்பர்களே அனைவரும் விநாயகர் சதுர்த்தியை மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் கொண்டாடியிருப்பீர்கள் அந்த மகிழ்ச்சியுடன் இந்த வார முதல் நாளை தொடங்குவோம். இன்று நான் அறிமுகப்படுத்தப்படும் மென்பொருள் ஒரு பிடிஎப் கருவி ஆங்கிலத்தில் All in One PDF Tools இதன் பெயரும் இதுதான்.
இந்த மென்பொருள் மூலம் செய்யக்கூடியவை
ஒரு பிடிஎப் கோப்பை Encrypt (என்கிரிப்ட்) செய்ய முடியும்.
என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பை (டிகிரிப்ட்) Decrypt செய்ய முடியும்.
பல பிடிஎப் கோப்புகளை ஒரே கோப்பாக மாற்ற முடியும்.
ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள பக்கங்களை தனித்தனி பிடிஎப் கோப்புகளாக பிரிக்க முடியும்.
பிடிஎப் கோப்பில் ஸ்டாம்ப் செய்ய முடியும் (ஒரு வார்த்தையை பிடிஎப் கோப்பின் பக்கங்களின் மேல் ஸ்டாம்ப் போல குத்துவது)
XML எக்ஸ்எம்ல் கோப்புகள் வழியாக பிடிஎப் கோப்புகள் உருவாக்க முடியும். (வேர்ட், எக்ஸல் கோப்புகளை XML எக்ஸ்எம்ல் கோப்புகளாக உருவாக்க முடியும்)
நிறைய நண்பர்கள் தங்களுடைய லேப்டாப்கள் பேட்டரி எந்த நிறுவனத்தினருடையது அந்த பேட்டரி எந்தளவு சார்ஜ் ஆகும். முழு பேட்டரியும் சார்ஜ் ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள. பேட்டரி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள என்று நிறைய விஷயங்களை இந்த மென்பொருள் செய்கிறது சுட்டி
நண்பர்களே மீண்டும் ஒரு விருது கிடைத்திருக்கிறது நம் நண்பர் சூர்யகண்ணன் மூலம் அவர் தனக்கு கொடுத்த விருதினை பத்து பேருக்கு கொடுத்திருக்கிறார். அதில் அடியேனும் ஒருவன் என்பதால் எனக்கு பிடித்த பத்து பதிவர்களுக்கு விருதுகள் அளிக்கிறேன்.
நண்பர்களே உங்கள் அனைவரது ஆதரவினால் நம்முடைய வலைப்பூ விகடனில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளி வந்துள்ளது. இதற்காக விகடன் நிறுவனத்திருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முழு காரணமும் நம் நண்பர்கள் ஆதரவும் அவர்களின் தினசரி பங்களிப்பும்தான் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இன்று நண்பர்களே ஆன்லைனில் புகைப்பட கோப்புகளை எடிட் செய்ய பத்து வகையான இணையத்தளங்கள் கொடுக்க போகிறேன்.
இணையத்தளங்களிலிலும் குப்பைகள் இருக்கிறது என்று கூறுகிறது ஆன்டிவைரஸுக்கு புகழ் பெற்ற நிறுவனமான நார்டன் அவர்கள் குப்பையான இணையத்தளங்கள் என்று சிலவற்றை பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளது. பட்டியலில் சில தளங்கள்
உங்கள் கணிணியை வேறு யாருக்காவது கொடுக்க அல்லது விற்பனை செய்வதற்கு முன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியி சுத்தமாக துடைத்து விடுங்கள் மிகவும் நல்லது சுட்டி
இந்த மென்பொருள் குறித்த வீடியோ
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் அனைவரும் அனைத்தும் பெற விநாயகரை பிரார்த்திக்கிறேன்.
குறிப்பு - படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
பதிவுகள் பிடித்திருந்தால் தமிழிசிலும் தமிழ்10லும் தமிழ்மணத்திலும் ஒட்டுக்களை குத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். சில பல விளம்பரங்களை கிளிக் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.