சட்டரீதியான அனிமேசன் மென்பொருள் இலவசம்

நண்பர்களே சட்டரீதியான அனிமேசன் மென்பொருள் இலவசமாக கொடுக்கின்றனர். அந்த மென்பொருளை பெற சில எளிய வழிமுறைகள் மட்டுமே.  படிப்படியாக விளக்குகின்றேன்.

 
முதலில் இந்த சுட்டியை சொடுக்குங்கள் சுட்டி


இது போல் வலைத்தளம் தோன்றும் அதில் இடது பக்கம் Anime Studio 5 என்பதற்கு கீழ் Mac / WIN என்று இருக்கும்.  அதில் உங்கள் தேவை மேக் என்றால் MAC, விண்டோஸ் என்றால் WIN என்பதை தேர்வு செய்யவும்.
  
மேலே உள்ள படத்தை போல அடுத்த பக்கத்திற்கு செல்லும் இங்கு நீங்கள் Continue Checkout என்பதை தேர்வு செய்யவும்.


மேலுள்ள படம் போல் அடுத்த வலைப்பக்கத்திற்கு இட்டு செல்லும். இங்கு உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரி, கடவுச்சொல் ( இதில் உங்கள் இமெயில் முகவரியாவது உண்மையாக இருக்கட்டும்) பிறகு கீழே Submit என்பதை தேர்வு செய்யவும்.


மேலுள்ள படம் அடுத்த வலைப்பக்கம் தோன்றும் இங்கு நீங்கள் கொடுத்த தகவலக்ள் எல்லாம் சரி என்று உறுதிபடுத்த கேட்கிறது.  சரி என்றால் Submit தேர்வு செய்யவும். இல்லை என்றால் மேலே Edit கொடுத்து பின்னால் சென்று சரியான தகவல்கள் கொடுக்கவும்.

  
மேலுள்ள படம் போல் வலைத்தளத்தில் உங்கள் தரவிறக்க சுட்டி மற்றும் அந்த மென்பொருளுக்குரிய சாவி (Serial No.) கொடுக்கப்பட்டிருக்கும். 
Begin HTTP Download இது போல் உள்ளதை கிளிக் செய்தால் உங்கள் மென்பொருள் தரவிறக்கம் தொடங்கும்.  அதற்கு கீழே உள்ள சீரியல் எண்ணை தேர்வு செய்து நோட்பேடில் சேமித்துக் கொள்ளுங்கள். இதை எத்தனை முறை வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். 
குறிப்பு - உங்கள் இ மெயில் முகவரி சரியானதாக இருந்தால் மட்டுமே உங்களுடை இமெயில் முகவரிக்கு உங்கள் சீரியல் எண்ணை மின்னஞ்சல் செய்வார்கள். இமெயில் தவறனாதக இருந்தால் வேறு ஒருவருக்கு சென்று விடும். 
தவறமால் உங்கள் ஒட்டுக்களை தமிழிசிலும் தமிழ்மணத்திலும் போடவும்.  வருகின்ற அனைவரும் விளாம்பரங்களை கிளிக் செய்யவும். பின்னூட்டமிடவும்.  உங்கள் பின்னூட்டம் மட்டுமே உற்சாக பானம் எனக்கு.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கூகிளின் ஆன்ட்ராய்டு லைவ் சிடி உங்களுக்காக

நண்பர்களே சிடி அல்லது டிவிடியில் பேக் அப் எடுத்து விட்டு சில நாட்கள் அல்லது வருடங்கள் கழித்து அதை எடுத்து பார்க்கலாம் என்றால் சிடி சரியாக வேலை செய்யாது பார்த்தால் ஏதாவது கீறல் விழுந்து உபயோகப்படுத்த இயலாமல் போய் இருக்கும்.  அந்த மாதிரி நேரத்தில் சேர்த்து வைத்த பொருள் வீணாக போனால் எந்த மனநிலை கிடைக்குமோ அந்த மனநிலைக்கு தள்ளிவிடும். இதை தவிர்க்க இந்த சிடி அல்லது டிவிடியில் இருந்து திரும்ப உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க இந்த மென்பொருள் உபயோகமாக இருக்கும்.  இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளாகும்.  இது புது வரவான ப்ளூ ரே டிவிடியையும் ஆதரிக்கின்றது என்பது தனிச்சிறப்பு.



மென்பொருள் சுட்டி


கூகிள் மொபைலில் ஆன்ட்ராய்டு என்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தை உங்கள் கணிணியில் இயக்கு ஒரு வாய்ப்பு கூகிள் வழங்குகிறது.  இங்கு சென்று தரவிறக்கம் செய்யுங்கள். நீங்கள் தரவிறக்கம் செய்யும் கோப்பு ISO கோப்பாக இருக்கும். அந்த கோப்பை சிடியில் காப்பி செய்து கொள்ளுங்கள்.  இந்த் சிடி பூட்டபிள் சிடியாக உங்களுக்கு கிடைக்கும். ஒரு பூட்டபிள் சிடி எப்படி பூட் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.  இந்த சிடி ஒரு லைவ் சிடியாக வேலை செய்யும். 



மென்பொருள் தரவிறக்க சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்




» Read More...

ஜிமெயில், ட்விட்டர், ஆர் எஸ் எஸ் செய்தியோடை அனைத்தும் ஒரே மென்பொருளில்

நண்பர்களே உங்கள் நெருப்பு நரி உலாவியை மேக் அல்லது சபாரி போல மாற்ற இந்த தீம் உங்களுக்கு உதவும். இந்த தீமை தரவிறக்க சுட்டி



உங்களுடைய ஜிமெயில் திறக்கமாலேயே மெயில் வந்திருப்பதை தெரிந்து கொள்ளவும்.  ட்விட்டர் வலைத்தளத்திற்கு செல்லமால் உங்கள் ட்விட்டர் குறுஞ்செய்திகளை தெரிந்து கொள்ளவும் இந்த அப்2டேட் மென்பொருள் பயன்படும். 

இந்த மென்பொருள் மூலம் பல (Gmail) ஜிமெயில் கணக்குகளையும் பலதரப்பட்ட (Twitter) ட்விட்டர் கணக்குகளையும் நிர்வகிக்க முடியும்.  மேலும் உங்களுடைய ஆர்எஸ்எஸ் செய்தியோடைகளையும் நிர்வகிக்க இயலும்.  நீங்கள் மட்டுமே உபயோகிக்கும் வண்ணம் கடவுச் சொல் (Password) கொடுத்து பாதுகாக்க முடியும்.  எவ்வளவும் நேரத்திற்கு ஒரு முறை மெயில் வந்திருக்கிறதா என்று சோதிக்க நேரம் கொடுத்துக் கொள்ளலாம்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளின் வலைத்தளம் சுட்டி




இலவசமாக அதிக ரெசொல்யூசன் கொண்ட கடற்கரை வால்பேப்பர்கள் உங்களுக்காக சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்




» Read More...

உங்கள் உலாவிகளை பேக் - அப் செய்து ரீஸ்டோர் செய்ய சுலபமான வழி

நண்பர்களே நீங்கள் இணையங்களில் உலா வரும் போது உங்களுக்கு பிடித்த தளங்களை புக்மார்க் செய்து வைப்பீர்கள் அது மட்டுமல்லாமல் உங்கள் உலாவியின் ஹிஸ்டரி மற்றும் ப்ரெபரண்ஸ் (Preference), (Cookies) குக்கீஸ் போன்றவற்றை பேக் - அப் எடுக்க சிறந்த மென்பொருள் ஃபேவ் பேக் - அப் FAV Backup. இந்த மென்பொருள் அனைத்து உலாவிகளிலும் இருந்து மேற்கூறியவறை பேக் - அப் எடுத்துக் கொடுக்கிறது.  உங்கள் கணிணி பார்மெட் செய்த பிறகு இந்த மென்பொருள் கொண்டே ரீஸ்டோர் (Restore) செய்யலாம். இந்த மென்பொருளை கணிணியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை நேரடியாக மென்பொருளை இயக்கலாம்.



மென்பொருள் சுட்டி
மென்பொருளின் வலைத்தளச் சுட்டி

இந்த மென்பொருள் ஆதரிக்கும் வலை உலாவிகள்

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6, 7, 8

நெருப்பு நரி உலாவி 2, 3, 3.5
ஒபரா 9
சபாரி 3, 4
கூகிள் குரோம் 1, 2, 3


படிக்கின்ற நண்பர்கள் அனைவரும் பிடித்திருந்தல் தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  நிறைய விளம்பரங்களை கிளிக் செய்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்



» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை