கூகிளின் ஆன்ட்ராய்டு லைவ் சிடி உங்களுக்காக

நண்பர்களே சிடி அல்லது டிவிடியில் பேக் அப் எடுத்து விட்டு சில நாட்கள் அல்லது வருடங்கள் கழித்து அதை எடுத்து பார்க்கலாம் என்றால் சிடி சரியாக வேலை செய்யாது பார்த்தால் ஏதாவது கீறல் விழுந்து உபயோகப்படுத்த இயலாமல் போய் இருக்கும்.  அந்த மாதிரி நேரத்தில் சேர்த்து வைத்த பொருள் வீணாக போனால் எந்த மனநிலை கிடைக்குமோ அந்த மனநிலைக்கு தள்ளிவிடும். இதை தவிர்க்க இந்த சிடி அல்லது டிவிடியில் இருந்து திரும்ப உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க இந்த மென்பொருள் உபயோகமாக இருக்கும்.  இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளாகும்.  இது புது வரவான ப்ளூ ரே டிவிடியையும் ஆதரிக்கின்றது என்பது தனிச்சிறப்பு.



மென்பொருள் சுட்டி


கூகிள் மொபைலில் ஆன்ட்ராய்டு என்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தை உங்கள் கணிணியில் இயக்கு ஒரு வாய்ப்பு கூகிள் வழங்குகிறது.  இங்கு சென்று தரவிறக்கம் செய்யுங்கள். நீங்கள் தரவிறக்கம் செய்யும் கோப்பு ISO கோப்பாக இருக்கும். அந்த கோப்பை சிடியில் காப்பி செய்து கொள்ளுங்கள்.  இந்த் சிடி பூட்டபிள் சிடியாக உங்களுக்கு கிடைக்கும். ஒரு பூட்டபிள் சிடி எப்படி பூட் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.  இந்த சிடி ஒரு லைவ் சிடியாக வேலை செய்யும். 



மென்பொருள் தரவிறக்க சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்




» Read More...

ஜிமெயில், ட்விட்டர், ஆர் எஸ் எஸ் செய்தியோடை அனைத்தும் ஒரே மென்பொருளில்

நண்பர்களே உங்கள் நெருப்பு நரி உலாவியை மேக் அல்லது சபாரி போல மாற்ற இந்த தீம் உங்களுக்கு உதவும். இந்த தீமை தரவிறக்க சுட்டி



உங்களுடைய ஜிமெயில் திறக்கமாலேயே மெயில் வந்திருப்பதை தெரிந்து கொள்ளவும்.  ட்விட்டர் வலைத்தளத்திற்கு செல்லமால் உங்கள் ட்விட்டர் குறுஞ்செய்திகளை தெரிந்து கொள்ளவும் இந்த அப்2டேட் மென்பொருள் பயன்படும். 

இந்த மென்பொருள் மூலம் பல (Gmail) ஜிமெயில் கணக்குகளையும் பலதரப்பட்ட (Twitter) ட்விட்டர் கணக்குகளையும் நிர்வகிக்க முடியும்.  மேலும் உங்களுடைய ஆர்எஸ்எஸ் செய்தியோடைகளையும் நிர்வகிக்க இயலும்.  நீங்கள் மட்டுமே உபயோகிக்கும் வண்ணம் கடவுச் சொல் (Password) கொடுத்து பாதுகாக்க முடியும்.  எவ்வளவும் நேரத்திற்கு ஒரு முறை மெயில் வந்திருக்கிறதா என்று சோதிக்க நேரம் கொடுத்துக் கொள்ளலாம்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளின் வலைத்தளம் சுட்டி




இலவசமாக அதிக ரெசொல்யூசன் கொண்ட கடற்கரை வால்பேப்பர்கள் உங்களுக்காக சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்




» Read More...

உங்கள் உலாவிகளை பேக் - அப் செய்து ரீஸ்டோர் செய்ய சுலபமான வழி

நண்பர்களே நீங்கள் இணையங்களில் உலா வரும் போது உங்களுக்கு பிடித்த தளங்களை புக்மார்க் செய்து வைப்பீர்கள் அது மட்டுமல்லாமல் உங்கள் உலாவியின் ஹிஸ்டரி மற்றும் ப்ரெபரண்ஸ் (Preference), (Cookies) குக்கீஸ் போன்றவற்றை பேக் - அப் எடுக்க சிறந்த மென்பொருள் ஃபேவ் பேக் - அப் FAV Backup. இந்த மென்பொருள் அனைத்து உலாவிகளிலும் இருந்து மேற்கூறியவறை பேக் - அப் எடுத்துக் கொடுக்கிறது.  உங்கள் கணிணி பார்மெட் செய்த பிறகு இந்த மென்பொருள் கொண்டே ரீஸ்டோர் (Restore) செய்யலாம். இந்த மென்பொருளை கணிணியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை நேரடியாக மென்பொருளை இயக்கலாம்.



மென்பொருள் சுட்டி
மென்பொருளின் வலைத்தளச் சுட்டி

இந்த மென்பொருள் ஆதரிக்கும் வலை உலாவிகள்

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6, 7, 8

நெருப்பு நரி உலாவி 2, 3, 3.5
ஒபரா 9
சபாரி 3, 4
கூகிள் குரோம் 1, 2, 3


படிக்கின்ற நண்பர்கள் அனைவரும் பிடித்திருந்தல் தமிழிசிலும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  நிறைய விளம்பரங்களை கிளிக் செய்து உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்



» Read More...

இணைய உலாவிகளில் மூடிய தளங்களை உடனே திறக்க

நண்பர்களே நாம் நெருப்பு நரி உலாவி உபயோகப்படுத்தும் போது சில நேரங்களில் தவறுதலாக உலாவியில் முக்கிய தளம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தெரியமால் டேபை மூடிவிடுவோம். பிறகு அந்த டேபில் எந்த தளம் பார்த்தோம் என்ற ஞாபகம் இருக்காது.  அதனால் நேர விரயம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள்.  இதற்கு தீர்வு என்ன அந்த திரும்ப பெற்றால் எப்படியிருக்கும்.  அதற்கு ஒரு வழி உண்டு

உங்கள் நெருப்பு நரி உலாவி திறந்திருக்கும் போது தெரியாமால் எந்த டேபை மூடினோமோ அந்த டேபை திரும்ப பெறுவதற்கு நெருப்பு நரி உலாவியில் History தேர்வு செய்து Recently Closed Tabs என்பதனை தேர்வு செய்தால் அதில் நீங்கள் கடைசியாக மூடிய பத்து டேப்கள் கிடைக்கும்.

அப்படி இல்லை எனக்கு கடைசியாக மூடிய தளம் மட்டும் உடனே வேண்டுமென்றால் உங்கள் கீபோர்டில் கண்ட்ரோல் கீயையும் சிப்ட் கீயையும்  பிடித்துக் கொண்டு டி தட்டுங்கள் Ctrl + Shift + T தட்டினால் உடனே கடைசியாக மூடிய டேப் கிடைக்கும்.



இதையே தொடர்ந்து பத்து முறை செய்தால் கடைசியாக மூடிய பத்து டேப்கள் திறக்கும்.

இதையே கூகிள் க்ரோமில் செய்ய Ctrl + H கொடுத்தால் History பக்கம் திறக்கும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் எந்த தளம் திறக்க வேண்டுமென்று. அதே New Tab என்பதனை தேர்வு செய்தால் வலது பக்கமூலையில் கீழே மூன்று டேப்கள் காட்டும் இதுவே நீங்கள் கடைசியாக மூடிய மூன்று தளங்கள்.


இதையே மைக்ரோசாப்டின் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் செய்ய

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 உபயோகிப்பவர்கள் - Ctrl+Shift+H கொடுத்தால் இடது பக்கம் History பக்கம் திறக்கும் அதில் இருந்து நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.  இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 மற்றும் 6 உபயோகிப்பவர்கள் Add-on உபயோகிக்க வேண்டும்.  அதற்கு இங்கு இருந்து தரவிறக்கிக் கொள்ளுங்கள் சுட்டி 




இதையே ஒபராவில் பிரவுசரில் செய்ய Ctrl +Z கொடுத்தால் கடைசியாக மூடிய தளங்கள் கிடைக்கும்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை