மைக்ரோசாப்டின் புதிய தேடுபொறி

நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் பிங் (Bing) என்ற தேடுபொறி.

இந்த தேடுபொறி 2009 ஜூன் மூன்றாம் தேதி அன்று திறக்கப்படுகிறது சுட்டி


 Bing


வடிவேலன் ஆர்.
வலைப்பதிவு http://gouthaminfotech.blogspot.com


» Read More...

பன்றிக்காய்ச்சல் குறித்த வலைப்பதிவர்களின் சந்திப்பு

நண்பர்களே சென்னையில் கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடியில் நடந்த பன்றிக்காய்ச்சல் குறித்த கருத்தரங்கு மிக பெரும் வெற்றியடைந்தது. மருத்துவர் புருனோ அவர்கள் வலைப்பதிவர்களின் சந்தேகங்களை மிக எளிமையான உதராணங்கள் மேற்கோள் காட்டி விளக்கினார்.  இந்த கருத்தரங்கிற்கு கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடி கொடுத்த சக்சேனா அவர்களுக்கு நன்றி.  அனைத்து வலையுலக ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.

அவர்களின் புகைப்படங்கள் கீழே கொடுத்துள்ளேன்





நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

நமீதாவின் கணணி அறிவு - புதிய TV தளம்

நண்பர்களே படிக்க வர்றிங்க எல்லோரும் உடனே வெளியே போயடாதீங்க ஏன் சொல்றேன்னா நம்ம வலைப்பதிவுலேய என்ன தப்பு இருக்கு என்ன நல்லா இருக்கு எத மாத்தலாம் எப்படி பதிவு எழுதலாம்னூ ஆலோசனை கொடுங்க சரியா!!!!

இன்னைக்கு அறிமுகப்படுத்த போகிற தளம் புது தொலைக்காட்சி வாங்கப் போற அனைவருக்கும் இந்த தளம் ரொம்ப உதவியாயிருக்கும். தொலைக்காட்சியில் முக்கிய ஒளி அதுக்கு ஏற்ற தளம்.   இந்த தளத்தில் இரண்டு டிவி மாடல் வைத்து  நீங்க எந்த தொலைக்காட்சி வாங்க போறிங்களோ  நீங்கள் வாங்கும்  தொலைக்காட்சி அளவினை உள்ளீடு செய்தால் போதும் அந்த தொலைக்காட்சியின் பட அளவை காட்டிவிடும்.  சுட்டி

நீங்கள் டைப் செய்யும் வேகம் கணக்கிட இந்த தளம் உதவும். இந்த தளத்தில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய தேவையில்லை. மென்பொருள் தரவிறக்க தேவையில்லை.  நேரடியாக பயிற்சி செய்யலாம்.  சுட்டி

தினமும் ஒவ்வொரு முறையும் கணனியை ஆன் செய்யும் பொழுதும் நிறுத்தும் பொழுதும் மைக்ரோசாப்டின் ஒரே சத்தத்தை கேட்டு போரடித்து விட்டதா.  சுலபமாக மாற்றலாம் இந்த இசையை.

எப்படி மாற்றுவது????

உங்களுக்கு இரண்டு கோப்புகள் மாற்ற வேண்டும்
ஒன்று விண்டோஸ் தொடங்கும் இசை   - Windows XP Startup.WAV
இரண்டு விண்டோஸ் முடியும் இசை     -  Windows XP Shutdown.WAV

நீங்கள் வைத்திருக்கும் எந்த வித இசையானாலும் அதை .WAV என்ற கோப்பாக மாற்றிக் கொள்ளவேண்டும் பின்னர் அதை 15 விநாடிகளுக்கு தேவையான அளவு கட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.  இவ்வாறு செய்ய உங்களுக்கு ஒரு மென்பொருள் தேவை என்னுடைய சிபாரிசு சுட்டி

நீங்கள் தேர்வு செய்த கோப்புகளை விண்டோஸ் தொடங்கும் போது வேண்டிய இசைக்க கோப்பினை "Windows XP Startup.WAV"   என்றும்

விண்டோஸ் நிறுத்தும் போது வேண்டிய இசைக்க வேண்டிய கோப்பினை  "Windows XP Shutdown.WAV", என்றும் பெயர் மாற்றம் செய்யுங்கள்.

அதன் பிறகு நீங்கள் உங்கள் கணணியில் எங்கு விண்டோஸ் நிறுவியிருப்பீர்கள் என்று உங்களுக்கு தெரியும்.

( உதாரணமாக எப்பொழுதுமே விண்டோஸ் C:\   ட்ரைவில் மட்டுமமே நிறுவி இருப்பார்கள்)

அப்படி என்றால் நாம் அங்கு செல்ல வேண்டும்

முதலில் C:\ திறக்கவும்

பின்னர் Windows போல்டரை திறக்கவும்

பின்னர் Media என்ற போல்டரை திறக்கவும்.

(உதராணம் C:\Windows\Media) இதைத்தான் நாம் திறக்க வேண்டும்

அங்கு "Windows XP Startup.WAV" மற்றும் "Windows XP Shutdown.WAV",  ஆகிய இரண்டு கோப்புகளை தேடி அதை

"Windows XP Startup-Old.WAV" and "Windows XP Shutdown-Old.WAV", என்று மாற்றிக் கொள்ளுங்கள்.

பின்னர் முதலில் நீங்கள் தேர்வு செய்து பெயர் மாற்றம் செய்த கோப்புகள் இரண்டினையும் இங்கு காப்பி செய்து பேஸ்ட்  செய்துவிடுங்கள்.

முடிந்தது இனி ஒவ்வொரு முறை உங்கள் கணணியில் விண்டோஸ்  தொடங்கும்போதும் நிறுத்தும் போதும் நீங்கள் தேர்வு செய்த இசை மட்டுமே ஒலிக்கும்.



குறிப்பு (நமீதா என்றால் உடனே வருகிறார்கள்அதனால் நமீதா படத்தை போட்டுள்ளேன் தலைப்பும் அதற்காகதான்.)



பிடித்திருந்தால் பின்னூட்டமும் விளம்பரங்களையும் கிளிக் செய்யவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்





» Read More...

ஐபோனுக்கு ரிங்டோன் உருவாக்கலாம் வாங்க

நண்பர்களே இப்பொழுது நிறைய செல்பேசி மாடல்கள் வந்துவிட்டது. அதில் ஐபோன் என்ற மாடல்கள் ஒன்று.  இந்த மாடலுக்கு ரிங்டோன்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. நிறைய பேர் இந்த மாடலை விலை கொடுத்து வாங்கி விடுவார்கள் அவர்களுக்கு உபயோகிக்க தெரியாமல் அந்த ஐபோன் திண்டாடிவிடும். ஆனால் உபயோகிக்க தெரிந்தவர்களுக்கு ரிங்டோன் உருவாக்க தெரியாது. இந்த ஐபோன் மேக் கணனியில் மட்டுமே ரிங்டோன் மட்டுமே உருவாக்க இயலும்.  விண்டோஸிலும் உருவாக்க இயலும் என்பதற்காகவே இந்த பதிவு!!




நான் எழுதியது புரியவில்லை என்றால் நேரடியாக தளத்திற்கு சென்றும் தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் சுட்டி


ஐபோனுக்கு ரிங்டோன் எவ்வாறு உருவாக்குவது.

முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.  சுட்டி

பின்னர் BROWSE என்ற சுட்டியை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த MP3 இசையை தேர்வு செய்யுங்கள்.

அடுத்து முழுவதுமாக கீழே உள்ள Slider ஐ இழுத்து விடவும். 

கீழே Export to I Phone என்ற பாக்ஸில் டிக் செய்யவும்.

பின்னர் Generate பட்டனை கிளிக் செய்யவும்

முடிந்தது.  உங்கள் ஐபோனுக்கு ஏற்ற ரிங்டோன் தயார்.

நான் எழுதும் பதிவில் ஏதாவது தவறு இருந்தால் கட்டாயம் சுட்டி காட்டுங்கள் என்னுடைய தவறை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.

படித்து முடித்தவர்கள் ஒரு வார்த்தை பின்னூட்டமிடுங்கள் உங்கள் பின்னூட்டமே எங்கள் உற்சாக பானம். 
விளம்பரங்களை கிளிக் செய்தீர்கள் நான் தன்யானேன். நன்றி



 



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை