நண்பர்களே வலைஉலாவிகளின் போட்டியில் புதிய வலை உலாவி குதித்திருக்கிறது இந்த வலை உலாவி மிகவும் வேகமாக இயங்கும் என்றும் இவர்கள் கூறுகின்றனர் இவ்வலை உலாவி 2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு அந்த ஆண்டின் நவம்பர் இறுதியில் வெளியிடப்பட்டது.
வெளியிடும் பொழுது இதனுடைய பதிப்பு 1.2 ஆக இருந்தது இப்பொழுது அனைத்து பழுதுகளையும் நீக்கி இப்பொழுது 2.0.53 வெளியிடப்பட்டிருக்கிறது
இதனுடன் மற்ற வலை உலாவிகளையும் சேர்த்து பரிசோதித்து அதனுடைய முடிவுகள் வெளியிடப்பட்டதில் இது பயர்பாக்ஸுடன் பயங்கர போட்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் முடிவுகளின் சுட்டி
இந்த புதிய வலை உலாவியில் உங்களின் வலைப்பக்கங்களை பரிசோதிக்கவும் வழிவகை செய்துள்ளார்கள்
மென்பொருளின் தரவிறக்க சுட்டி
இதை மேன்மேலும் சிறப்பாக விரும்பும் டெவலப்பர்கள் இங்கே தொடர்பு கொள்ளவும் சுட்டி
நண்பர்களே பதிவுலகத்தில் குரு என்று நினைக்கும் பிகேபி அவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால் இது இருநூறாவது பதிவு இது வரை வந்து தினமும் ரீடர்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் நேரடியாக வந்து படித்து தங்களுடைய கருத்துக்கள் மூலமும் உரிமையாக திட்டியவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள் இதுபோல் தினமும் உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கும் உங்கள் ஆருயிர் பதிவுலக நண்பன் வடிவேலனின் நன்றியை ஏற்றுக் கொண்டு என்னை வாழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரை வருவதற்கு காரணம் நண்பர் முத்துக்குமார், தமிழ்நெஞ்சம், வால்பையன், ஆதில், கார்த்திகேயன் ஆகியோர்தான் அவர்களின் அவ்வப்போது ஆலோசனைகளும் என் பதிவில் வந்த விளைவுகளை சுட்டிக் காட்டியதாகட்டும் அவர்களுக்கு எனது பல நன்றிகள் உரித்தாகுக.
(விடுபட்டு போனவர்கள் என்னை மன்னிப்பார்களாக)
பதிவுலகத்தில் எழுதி வரும் அனைவரும் இதுவரை எழுத்தாளர்கள் சந்தித்த சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை ஏழ்மை. அவர்கள் வாழ்வில் ஏழ்மை இருந்தாலும் அவர்கள் எழுத்தில் ஏழ்மை இருந்ததில்லை அவர்கள் வாழ்வு சிறிது வளம்பெற அவர்களுடைய பதிவை படிக்கும் போது ஒரு விளம்பரத்தை கிளிக் செய்தால் அதன் மூலமும் பணம் சம்பாதிக்க முடியும். ஆகையால் அனைவரும் யாருடைய பதிவை படித்தாலும் ஒரு முறை அந்த பதிவில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து அவர்களுடைய வாழ்வில் சிறு ஒளியேற்றுங்கள். அவர்கள் அனைவரும் இதன்மூலம்தான் வருவாய் ஈட்ட வேண்டும் என்றில்லை இருந்தாலும் இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அவர்களுக்கு ஏதோ சிறு செலவுக்கு உபயோகமாக இருக்கும் அல்லவா என்னையும் சேர்த்துதான் கூறுகிறேன்.
வரும் மே மாதம் நான்காம் தேதி 2009ஆம் வருடம் என் மகனுடைய மூன்றாவது பிறந்தநாளையும் கொண்டாடுகிறார் அதற்கும் உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறார்.
இன்றைய பதிவிற்குச் செல்வோம்
நண்பர்களே சில குறுகிய காலத்திற்குள் அனைவரும் லோக்கல் வன் தட்டுகளை நம்பிராமல் அனைவரும் இணைய இணைப்பை நம்பும் காலம் வரபோகிறது. ஆம் எந்த மென்பொருளும் நிறுவாமல் வெறும் பிரவுஸர் வைத்துக் கொண்டே அனைத்தும் நடைபெறுகிறது.
நீங்கள் வைத்திருக்கும் எந்த வகை கோப்பானாலும் இந்த தளத்தில் தரவேற்றினால் போதும் உங்களுக்க் எந்த பார்மெட்டில் வேண்டுமானலும் பெற்றுக் கொள்ளலாம். சுட்டி
இது மட்டுமில்லை யூட்யுபில் இருந்து கோப்புகளின் URL மட்டும் காப்பி செய்து பேஸ்ட் செய்தால் போதும் உங்களுக்கு தேவையான கோப்புகளாக தரவிறக்கி கொள்ளலாம்.
மற்ற தளங்களில் தரவேற்றினால் கோப்புகள் வெறும் 24 மணி நேரங்கள் மட்டும் வைத்து இருப்பர் இந்த தளத்தில் 7 நாட்கள் வைத்திருந்து நமக்கு கொடுக்கின்றனர்.
இந்த தளம் மூலம் எந்தெந்த வகை கோப்புகளை தரவேற்றி நமக்கு தேவையான கோப்புகளாக பெற முடியும் என்று ஆங்கிலத்தில் பார்ப்போம்.
(கோப்பின் வகை அதிகமாக இருப்பதாலும் நேரமின்மை காரணத்தாலும் ஆங்கிலத்தில் மன்னிக்கவும்)
ARCHIVE
RAR to TAR, ZIP, TGZ, TAR.GZ
TAR to RAR, ZIP, TGZ, TAR.GZ
TGZ to TAR, RAR, ZIP
TAR.GZ to TAR, RAR, ZIP
ZIP to TAR, RAR, TGZ, TAR.GZ
DOCUMENT
DOCX to DOC, ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
DOC to ODT, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
ODT to DOC, RTF, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
RTF to ODT, DOC, SWX, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
SXW to ODT, RTF, DOC, TXT, HTML, XHTML, PDF, PDB, ZIP
TXT to ODT, RTF, SWX, DOC, HTML, XHTML, PDF, PDB, ZIP