கணினியின் ஆன் மற்றும் ஆப் செய்த நேரம் தெரிய மற்றும் யூட்யூபின் புதிய இடைமுகப்பு

நண்பர்களே உங்கள் பின்னூட்டமும் உற்சாகமும் எவ்வளவு வேலைகளுக்கிடையிலும் ஒரு பதிவு போட வேண்டும் என்று போட்டு வருகிறேன் இதற்கு உங்கள் உற்சாகமும் வேண்டும் அத்துடன் முடிந்த்வரை படிப்பவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.  முடிந்த்வரை விளம்பரக் கணைகளை தொட்டு பாருங்கள்.  நன்றி  இனி பதிவிற்கு செல்வோம்.

 புதிய யூட்யூப் இன்டெர்பேஸ்

இதுவரை கூகிள் நிறுவனம் தன்னுடைய ஜிமெயில் மற்றும் கூகிள் ரீடருக்கு மட்டும் இடைமுகப்பை (Interface) மாற்றியிருந்தது.  அடுத்ததாக தன்னுடைய வீடியோ தளமான யூட்யூப் தளத்திற்கும் புதிய பொலிவினை வழங்குகிறது.  ஆனால் இது இன்னும் நடைமுறைக்கு வர இன்னும் சிறிது நாட்களாகும் என்று தெரிகிறது.  சில கோடிங் மாற்றத்தின் மூலம் நாமும் அந்த புதிய இடைமுகப்பை பெற முடியும்.  இதற்கு நீங்கள்  உங்கள் கூகிள் மூலம் யூட்ய்பில் நுழைந்து கொள்ளுங்கள்.

பிறகு நீங்கள் பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்கள் என்றால் Ctrl+Shift+K  அழுத்தினால் பயர்பாக்ஸ் மேலே டெவலப்பர்களுக்கான Console Box வரும் அங்கு கீழுள்ள வார்த்தையை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.  பிறகு ஒரு என்டர் தட்டுங்கள்.  உங்கள் youtube பக்கத்தினை F5  கொடுத்து Refresh செய்து பாருங்கள்.


document.cookie="VISITOR_INFO1_LIVE=ST1Ti53r4fU";
        


இதே நீங்கள் கூகிள் குரோம் உபயோகிப்பவர்கள் என்றால்  Ctrl+Shift+J  கொடுத்து Console Box செல்லலாம்.

உங்களின்  புதிய அனுபவத்திற்கு தயாரகுங்கள்.  

ஒரு குறுஞ்செய்தி

அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடப் போவது விண்டோஸ் 8 இதில் இலவசமக மைக்ரோசாப்டின் விண்டோஸ் செக்யூரிட்டி எஸ்ஸென்டியல்ஸ் ஆன்டி வைரஸ் இணைத்து வழங்க போவதாக அறிவித்துள்ளது.  இது மைக்ரோசாப்ட் உபயோகிப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த செய்தி ஆன்டிவைரஸ் தயாரித்து வழங்கும் நிறுவனத்திற்கு அதிர்ச்சியான செய்தியும்  ஆகும்.




கீழே Grand Theft Auto V Trailer உங்களுக்காக

Grand Theft Auto என்பது மிகவும் அனைவராலும் விரும்பபடக்கூடிய ஒரு விளையாட்டாக இருக்கிறது.  இதன் ஐந்தாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.  இந்த விளையாட்டின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.  செம சூப்பராக இருக்கிறது கிராபிக்ஸ்.




கணினி ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது எப்பொழுது

உங்கள் கணினி எந்த நேரத்தில் இருந்து உங்கள் ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இது கடந்த மூன்று வாரங்கள் வரை உங்கள் கணினி எந்த நேரத்தில் ஆன் செய்து வைக்கப்பட்டது எந்த நேரம் உபயோகப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது என்ற தகவல்கள் காட்டும்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி







 நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

தேவதை பிறந்தநாள் மற்றும் பல மென்பொருட்கள்

நண்பர்களே யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் யுஎஸ்பி சம்பந்தப்பட்ட பொருட்களை நிறுத்துவதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இது ஒரு திறந்த நிலை மென்பொருள் என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.  அத்துடன் இது விண்டோஸ் அனைத்திலும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது..  இதை இன்னும் மேம்படுத்த நினைப்பவர்கள் இவர்கள் தளத்தில் இருந்து Source Code எடுத்து மாற்றங்கள் செய்தும் கொள்ளலாம்.  இந்த மென்பொருள் வெறும் 1 எம்பிக்குள் அடங்கிவிடும்.  அத்துடன் இது ஒரு போர்ட்டபிள் மென்பொருளாகும்.  இந்த மென்பொருளின் பெயர் USB Disk Ejector இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

இன்று மொபைல் போன்கள் இல்லாதவர்களை பார்ப்பது அரிதான ஒன்றாக இருக்கும் நேரத்தில் இதுவரை வெளிவந்த மொபைல் போன்களில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்த மொபைல் போன்கள் குறித்த வரலாற்று தகவலகள் இந்த புகைப்படத்தில் உள்ளது.  இதில் 1973ல் வெளிவந்த மொபைலில் இருந்து தற்பொழுது வெளியான எல்ஜியின் 3டி ஸ்மார்ட் போன் வரை பட்டியலிடப்பட்டுள்ளது.     1999ல் வெளி வந்த 3210 மொபைல் எனக்கு பிடித்த மாடலாகும். 


இப்பொழுதுதான் பயர்பாக்ஸின் உலாவி புதுப்பிக்கப்பட்டு Firefox 8.0 வெளிவந்தது.  அதற்குள் அடுத்த பதிப்பு வெளியிட தயாராகி வருகிறது பயர்பாக்ஸ் நிறுவனம்.  அடுத்த Firefox 9.0 பீட்டா வெர்சனை உபயோகித்து பார்க்க சுட்டி  இது ஒரு பீட்டா வெர்சன் என்பதினை மனதில் கொண்டு தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்தவும்.

நவம்பர் பதினைந்து என் வாழ்வில் மறக்கவே முடியாத நாள்  நான் மிகவும் எதிர்பார்த்த விசயம் நடந்தேறிய நாள் அன்று என்ன நாள் என்று நினைக்கீறீர்கள் போன வருடம் நவம்பர் 15 2010 அன்று எனக்கு பெண் குழந்தை வடிவில் தேவதை அவதரித்த நாள் ஆம் என் பெண்ணின் முதல் வருட பிறந்தநாள் நண்பர்களின் ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் என் பெண்ணை இந்த உலகில் தைரியத்துடன் மகிழ்ச்சியுடனும் வாழ வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.  அண்ணனும் தங்கையும் எவ்வளவு மகிழ்வாக இருக்கும் புகைப்படம் இவர்களுக்காகவே என் அனைத்து கஷ்டங்களையும் தாங்கும் பக்குவம் வந்துவிட்டது.
 



படங்களை பெரிதாக பார்க்க கிளிக் செய்து பார்க்கவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

விஎல்சிக்கு மாற்று நூவ் ஹலோவின் சலுகைகள் உங்களுக்காக

நண்பர்களே தீபாவளி எல்லாம் நன்றாக கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  அக்டோபர் 31 அன்று அமெரிக்காவின் மிகவும் பிரபலமான விழாவான ஹாலோவின் என்ற விழா கொண்டாடுகிறார்கள்.  இதற்காக நிறைய நிறுவனங்கள் மென்பொருட்களை சில குறிப்பிட்ட தேதிகள் வரை இலவசமாக கொடுத்து வருகிறார்கள்.  இந்த முறை மூன்று மென்பொருட்கள் கிடைத்துள்ளது. 

WinX HD Video Converter  இது எந்த ஒரு வீடியோ கோப்பினையும் வேறு ஒரு வீடியோ கோப்பாக மாற்ற கூடியது.  Halloween Special Offer தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருள் இலவசமாக இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே!!!

WonderFox DVD Ripper இந்த மென்பொருள் உங்களுடைய டிவிடி கோப்பினை பின்வரும் கோப்புகளாக மாற்ற உதவுகிறது.  AVI, MP4, VOB, MKV, MPEG, MOV, FLV, WMV, 3G  இதுமட்டுமல்லாமல் டிவிடியிலிருந்து AVI கோப்பாக மாற்ற வெறும் 50 முதல் 100 நிமிடங்களில் முடித்து கொடுக்கிறது.  வேகம் விவேகம் சூப்பர் பாஸ்ட் அதுக்கு இதுதான் பெயர்.

Halloween Special Offer தரவிறக்க சுட்டி


uRex Video Converter Platinum இதுவும் ஒரு வீடியோ கன்வெர்ட்டர்தான்.   மிகவும் நன்றாக இருக்கும் ஒரு மென்பொருள்.  இந்த மென்பொருள் நவம்பர் 10 க்குள் தரவிறக்கி ஆக்டிவேட் செய்தால் மட்டுமே முழு உபயோக்ப்படுத்த முடியும்.

தரவிறக்க சுட்டி



கணினியில் எந்த ஒரு வீடியோவையும் பார்க்க நிறைய நண்பர்கள் உபயோக்ப்படுத்துவது விஎல்சி மீடியா ப்ளேயர் ஆகும்.  இந்த மென்பொருளை ஏன் உபயோகப்படுத்துகிறார்கள் என்றால் உபயோகப்படுத்துவதில் எளிது நிறைய பயன்கள் மற்றும் அதன் தரம்.  அதே போல விஎல்சி மீடியா ப்ளேயர் ஒரு போட்டியாளர் களத்தில் குதித்திருக்கிறார்கள். 

இவர்கள் வெளியிட்டிருக்கும் மென்பொருள் பெயர் நூவ் ( noow)  இந்த மென்பொருள் விஎல்சி விட நிறைய வேலைகள் செய்கிறது. எந்த ஒரு வீடியோ கோப்புகளையும் சுலபமாக கையாள்கிறது.  உயர்தர கோப்புகளை நல்ல தரத்துடன் காண்பிக்கிறது.


எந்த ஒரு வீடியோ தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்க இந்த மென்பொருள் மூலம் செய்ய முடிகிறது.


டொரண்ட் கோப்புகளையும் இந்த மென்பொருள் கையாளுகிறது.

உங்கள் கணினியில் உள்ள வீடியோ கோப்புகளை தேடவும் இந்த மென்பொருளால முடியும்.

இந்த மென்பொருளை காஸ்பர்ஸகை ஆன்டி வைரஸ் நிறுவனம் சோதித்து நம்பகமான மென்பொருள் என்று சான்றளித்துள்ளது.  இதனால் பயம் இல்லாமல் கணினியில் நிறுவலாம்.

காஸ்பர்ஸ்கை ஆன்டிவைரஸ் மென்பொருள் நிறுவனம் Noow மென்பொருளை சோதித்து சான்றளித்தது குறித்த சுட்டி

Noow மென்பொருளை தரவிறக்க சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

மின்னஞ்சல் முகவரி வேலை செய்கிறதா?? தீபாவளி சிறப்பு பதிவு

நண்பர்களே தீபாவளிக்கு எல்லாரும் புதிய துணிகள் பட்டாசுகள் வாங்கியாச்சா குழந்தைகளை பத்திரமாக பட்டாசுகளை வெடிக்க சொல்லுங்க.  தீபாவாளியன்று வெடி வெடிக்கும் பொழுது மேற்கொள்ள வேண்டிய பாதுகப்பு வழிமுறைகள் கீழே கொடுத்துள்ளேன் அதன்படி பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள்.  இனி பதிவுகள்

நீங்கள் உங்கள் பழைய நண்பருக்கோ உறவினருக்கோ மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள்.  அந்த மின்னஞ்சல் அனுப்பிய அடுத்த் நிமிடம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பிய மின்னஞ்சல் முகவரி தவறேன்று திரும்ப வந்து விட்டால் என்ன செய்வீர்கள்.  அப்படி வராமல் இருக்க முடிந்தவரை பழைய மின்னஞ்சல் உபயோகிக்கும் முன் இந்த வலைத்தளம் சென்று இந்த முகவரி வேலை செய்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எந்த ஒரு மின்னஞ்சல் முகவரியும் சுலபமாக வேலை செய்கிறதா என்று கண்டறிய வலைத்தளச் சுட்டி


டாம்ப் ரைடர் என்ற விளையாட்டினையும் அதன்பிறகு வந்த படத்தினையும் யாரும் மறக்க முடியாது.  அந்த விளையாட்டின் உயர்தர வால்பேப்பர்கள் (High Resolution Wallpapers) உங்களுக்காக சில Tomb Raider Game Wallpapers






நீங்கள் உங்கள் கணினியில் ஒரு போல்டர் உருவாக்கி வைத்திருக்கிருக்கிறீர்கள் அந்த போல்டரில் ஆயிரக்கணக்கான எம்பி3 பாடல்கள் அல்லது கோப்புகள் இருக்கிறது இந்த ஆயிரக்கணக்கான கோப்புகளின் பெயர்களை பிரிண்ட் எடுக்க வேண்டுமானல் நீங்கள் ஒவ்வொரு கோப்பின் பெயரையும் நோட்பேடில் டைப் செய்து அதை பிரிண்ட் எடுக்க வேண்டும்.  இதையே நீங்கள் டாஸ் மோடில் சுலபமாக செய்ய முடியும்.  எப்படி என்றால்


Start மெனு கிளிக் செய்து அதில் ரன் கட்டளையை தேர்வு செய்யுங்கள்.

அதில் தோன்றும் பெட்டியில் CMD என்று டைப் செய்து என்டர் செய்யுங்கள்.

பிறகு எந்த போல்டர் வேண்டுமோ அந்த போல்டருக்குள் சென்று dir > print.txt அல்ல்து உங்களுக்கு பிடித்தெ பெயர் கொடுத்து பிரிண்ட் எடுங்கள் முடிந்தது.   ஆனால் இதில் உங்களால் எட்டு எழுத்துக்கள் உள்ள கோப்புகளின் பெயர்கள் முழுதாக கிடைக்கும் அதற்கு மேல் இருந்தால் 12345678~.exe இப்படிதான் இருக்கும். 

இதை விண்டோஸில் சுலபமாக இந்த மென்பொருள் மூலம் தெளிவாகவும் பிரிண்ட் எடுக்க முடியும்..

அதற்கு இந்த மென்பொருளை உபயோகியுங்கள்.  சுட்டி

போன வருட தீபாவளிக்கு வெளியூரில் இருந்ததால் பதிவு போட இயலவில்லை.  அதற்கு முந்தைய வருடம் தீபாவளிக்கு வெளியிட்ட பதிவு


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.  பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்.

» Read More...

இண்டிப்ளாக்கரின் கலந்துரையாடல் மற்றும் புகைப்படங்கள்

நண்பர்களே இன்டிப்ளாக்கரின் 2வது கலந்துரையாடல் சென்னையில் Hyatt Residency Hotel ல் கோலகலமாக நடந்து முடிந்தது.  அங்கு என் கேமரா மொபைல் மூலம் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

தமிழ்பதிவர்கள் ஜாக்கிசேகர்,  அடலேறு, கேபிள்ஷங்கர், அதிஷா, யுவகிருஷ்ணா, வலைமனை சுகுமார் சுவாமிநாதன் போன்ற பல பதிவுலக ஜாம்பாவான்கள் மத்தியில் நானும் கலந்து கொண்டேன் என்பதில் பெருமையாக இருக்கிறது.

நல்ல மாலை உணவும் கலந்து கொண்ட பதிவர்கள் அனைவருக்கும் ஒரு இலவச டி ஷர்ட் வழங்கிய இன்டிப்ளாக்கர்கும் TATA Grande நிறுவனத்தினர் அவர்களுக்கும்  நன்றி.  இந்த விழாவில் சென்னை பதிவர்கள் மட்டுமல்லாமல் பெங்களூர், ராஜஸ்தான், டெல்லி போன்ற வட நாட்டு பதிவர்களும் கலந்து கொண்டது இன்டிப்ளாக்கரின் ஒற்றுமையை காட்டுகிறது.
 
புதிய தமிழ் பதிவர்கள் www.indiblogger.in சென்று தங்களை ரெஜிஸ்டர் செய்து கொண்டால்  அடுத்த முறை கலந்துரையாடல் ஏற்பாடு செய்யும் பொழுது இன்னும் அதிகமான தமிழ் பதிவர்களை இன்டிப்ளாக்கர் கலந்துரையாடலில் காண முடியும்.

படங்கள் அனைத்தும் என்னுடைய மொபைல் Nokia 5130 Xpress Music மூலம் எடுக்கப்பட்டது.

நன்றி மீண்டும் வருகிறேன்.

















 

 

» Read More...

ஐபாடு ஸ்டீவ் ஜாப் மறைந்தார்

நண்பர்களே நம்முள் இன்னொரு கை போல இருக்கும் ஐபேடு ப்ளேயரை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப் மறைந்தார்.  இவர் மறைந்தாலும் இவர் பெயரை இவர் உருவாக்கிய தொழில்நுட்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை உலகம் இவர் பெயரை உச்சரிக்கும்.  இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.



 Steve Jobs 1955 - 2011

Design is not just what it looks like and feels like. Design is how it works.   Steve Jobs

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எம்பி3 வேகமாக தரவிறக்க பயர்பாக்ஸ் 7.0 புதிய பதிப்பு

நண்பர்களே தொடர்ந்து அலுவலக நிமித்தமாக வெளியூரில் வேலை இருந்ததால் இந்த மாதத்தில் இது மூன்றாவது பதிவாக இந்த பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்த பதிவு எழுத ஆசை இருந்தாலும் நேரம் இல்லாதது பெரும் கஷ்டமாக இருக்கிறது. 

சரி இன்றைய பதிவிற்கு செல்வோம்.

பயர்பாக்ஸ் உலாவியின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு இன்னும் இரண்டு நாளைக்குள் வெளிவரும் என்று நினைக்கிறேன்.  இப்பொழுது உள்ள பதிப்பு 6.0.2 ஆகும்.  மேம்படுத்தப்பட்ட பதிப்பு 7.0 ஆக வெளிவருகிறது. 

இதில் மெமரி மிகவும் குறைவாக எடுத்துக் கொண்டு வேலை செய்யும் விதத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

அதிகபட்சம் 50 சதவீதம் இணையப்பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர்.

நிறைய பாதுகாப்புகள் மேம்படுத்தப்படிருக்கின்றன.

புக்மார்க்குகள் உடனடியாக பயர்பாக்ஸ் உலாவியின் மூலமாக Sync செய்யும் வசதியும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

விண்டோஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English - US  Tamil Version Download

லின்க்ஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English - US   Tamil Version Download

மேக் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version Download English - US  Tamil Version Download



கூகிளின் புதிய வசதிகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் தனது 13ஆம் ஆண்டின் பிறந்தநாளினை கொண்டாடுகிறது கூகிள்.
 
 இந்நேரத்தில் பழைய ஆட்சென்ஸ் முகப்பினை விரைவில் மூடப்போவதாகவும் அதற்காக புதிய ஆட்சென்ஸ் முகப்பிற்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Many More Happy Returns of the Day Google

Happy 13th Birthday Google

இதுகுறித்து கூகிள் வெளியிட்டுள்ள செய்தி சுட்டி


உங்களுடைய டெஸ்க்டாப்பில் உங்களால் ஒரு வால்பேப்பர் மட்டுமே வைக்க முடியும்.  அந்த வால்பேப்பரின்  மேலே இன்னும் ஒரு வால்பேப்பர் வைக்க முடியுமா? என்று கேட்டால் நீங்கள் இல்லையென்று சொல்வீர்கள்.  
 
இணைய உலகில் எதுவும் சாத்தியமே என்பது போல இந்த மென்பொருளினை நீங்கள் தரவிறக்கிக் கொண்டால் ஒரு வால் பேப்பரின் மேல் இன்னும் ஒரு வால்பேப்பர் வைக்கலாம்.  அந்த வால்பேப்பரில் உங்களுடைய முக்கியமான நிகழ்வுகள், மீட்டிங்குகள் குறித்து பதிந்து வைக்க சுலபமாக இருக்குமே.  தரவிறக்க சுட்டி

செய்தி துளிகள்

கேரளாவில் முதலமைச்சரின் அறையில் நடக்கும் அனைத்து கலந்துரையாடல்கள் அனைத்தும் அனைவரும் பார்க்கும் படியாக இருக்க வேண்டும் என்று தன் அறையில் கேமரா வைத்திருக்கிறார்.  இந்த கேமரா உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவருடைய அறையில் என்ன நடக்கிறது அனைவரும் தெரிந்து கொள்ளதானாம்.

அத்துடன் முதலமைச்சரின் அறை மட்டுமல்லாம அவருடைய அலுவலகத்தில் நடக்கும் அனைத்தும் தெரிந்து கொள்ளவும் ஒரு கேமரா வைக்கப்பட்டிருக்கிறது.  இந்த வசதி இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடங்கி வைக்கப்பட்டது ஜுலை ஒன்றாம் தேதி அன்று.

நான் ஒரு முறை பார்க்கும் பொழுது முதலமைச்சர் வெளியூர் சென்றிருக்கிறார் என்று வந்தது அடுத்த நாள் பார்த்த பொழுது அவர் அலுவலகத்தில் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.  இந்த பதிவு எழுதும் பொழுது அவர் அறையில் முதலமைச்சர் இல்லை.  நீங்கள் கேரள முதலமைச்சர் அலுவலகத்தை நேரடியாக பார்க்க சுட்டி

இணையத்தில் இருந்து mp3 பாடல்கள் தரவிறக்க   ஒரு புதிய மென்பொருள் music2pc மிக அருமையாக இருக்கிறது இந்த மென்பொருள்.  வேகமாக தேடவும் வேகமாக தரவிறக்கவும் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இந்த மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவியும் உபயோகிக்கலாம். இல்லை போர்டபிள் மென்பொருளாகவும் உபயோகிக்கலாம்.

மேலதிக தகவல்கள் தெரிந்து கொள்ள இணையத்தள சுட்டி

music2pc மென்பொருள் தரவிறக்க சுட்டி

music2pc போர்டபிள் மென்பொருள் தரவிறக்க சுட்டி


தொடர்ந்து நீங்கள் கொடுத்து வரும் ஆதரவால் என்னை பின் தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை 800ஐ தொட இருக்கிறது.   இதை சாதிக்க உங்களால் மட்டுமே என்னால் சாதிக்க முடிந்தது அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன்.  விளம்பரங்களை பாருங்கள் படியுங்கள் பிடித்திருந்தால் கிளிக் செய்து செல்லுங்களேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

விண்டோஸ் எக்ஸ்பியின் புதிய புகைப்படம் மற்றும் ஸ்டார் ட்ரெக் வரலாறு

நண்பர்களே Start Trek படத்தின் வரலாறு குறித்த புகைப்படம்.  இந்த Star Trek சீரியல் மிகவும் பிடிக்கும்.  அடுத்த படம் 2012ல் அல்லது 2013ல் வெளியாகும் என தகவல் .





விண்டோஸ் எக்ஸ்பியில் நாம் முதலில் இன்ஸ்டால் வரும் டெஸ்க்டாப் படம் பச்சை பசேலன இருக்கும் புல்வெளி தோற்றம்.  இத் மிகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.  இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட பருவம் வசந்த காலம் ஆகும்.   வசந்த நேரம் தவிர மற்ற காலத்தில் இந்த படம் போல் தான் இருக்கும்.

மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஆன்டி வைரஸில் எது அதிகமாக உலகம் முழுவதும் உபயோகப்படுத்தபடுகிறது என்பதை விளக்கும் படம். கீழே இந்தபடத்தை தந்தவர்கள் நம் பதிவில் முன்னர் அறிமுகப்படுத்திய 19 ஆன்டி வைரஸ்கள் கொண்டு சோதிக்கும் ஆன்லைன் ஸ்கேனர் தளத்தினர் தான் 19 ஆன்டிவைரஸ்கள் கொண்டு சோதிக்க சுட்டி

மைக்ரோசாப்ட் ஆபிஸ்க்கு மாற்று & ஏவிஜி 2012 ஆன்டிவைரஸ் இலவசமாக தரவிறக்க சுட்டி

வெளிநாட்டில் மற்றும் உள்நாட்டில் நமது வலைத்தளத்தினை படிப்பவர்கள் முடிந்தவரை வலைத்தளத்தினை பற்றி அடுத்தவருக்கு சொல்லவும்.  விளம்பரங்களையும் கிளிக் செய்தால் உதவியாக இருக்கும்.  இதுவரை நம் தளத்தினை பின் தொடர்பவர்கள் 790 பேர்  ரீடர்கள் மூலம் படிப்பவர்கள் 2270 பேர் வலைத்தளத்தினை பின் தொடரும் அனைவருக்கும் மிக்க நன்றி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் கோப்புகளை சோதிக்க 19 வகையான ஆன்டி வைரஸ்

நண்பர்களே டிவிடியிலிருந்து ISO கோப்பாக மாற்றவும் ISO கோப்பிலிருந்து டிவிடிக்கு எழுதவும் ஒரு இலவச மென்பொருள்.  இந்த மென்பொருள் CD, DVD5, DVD9, BD25 and BD50 இந்த வகைகளில் எழுத முடியும்.   
என்கிரிப்ட் செய்யப்பட்ட டிவிடிக்களையும் இந்த மென்பொருள் மூலம் நிறைய டிவிடி நகல்கள் உருவாக்க முடியும்.  இந்த மென்பொருள் அனைத்து விண்டோஸ் வெர்சன்களிலும் வேலை செய்யும். 


மென்பொருளின் பெயர் BDlot DVD ISO Master

இந்த மென்பொருள் அளவு 2.5எம்பி மட்டுமே

இந்த மென்பொருள் குறித்து மேலும் அறிந்து கொள்ள சுட்டி

மென்பொருளை தரவிறக்க சுட்டி

உங்களிடம் உள்ள ஒரு கோப்பை நீங்கள் நிறுவியிருக்கும் வைரஸ் உள்ளதா என்று சோதிப்பீர்கள்.  அந்த சோதனை முடிவில் வைரஸ் இல்லை என்று வந்த பிறகு உங்கள் நண்பருக்கு பென் ட்ரைவ் அல்லது மின்னஞ்சல் மூலம் கோப்பினை அனுப்புகிறீர்கள்.  அதை அவர் தரவிறக்கும் பொழுது அவருடைய ஆன்டி வைரஸ் வைரஸ் இருக்குது என்று தெரிவித்தால் எப்படி இருக்கும்.  நாம் வைரஸ் சோதனை செய்த பிறகு  அவருடைய கணினியில் மட்டும் நமது கோப்பில் வைரஸ் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா??


ஒரு நிமிடம் பொறுங்கள் அனைத்து ஆன்டிவைரஸ்களும் எல்லா வைரஸ்களுக்கு எதிராக போராடுவதில்லை சில வைரஸ்களை தவறவிடுகின்றனர்.  அதனால் அவர்களை நொந்து கொள்வதில் பிரயோஜனம் இல்லை.  இதற்கு வழி இல்லையா என்றால் வழி இருக்கிறது.  மல்டிபிள் வைரஸ் ஸ்கேனர் கொண்டு சோதிப்பது.  இது மாதிரி மல்டிபிள் ஆன்டிவைரஸ் ஸ்கேனர் மென்பொருள் இல்லை என்று நினைப்பீர்கள் உண்மைதான்.  நிறுவும் வகையிலான பொருள் இல்லை ஆனால் ஆன்லைன் மென்பொருள் உண்டு.  ஆம்  இந்த வலைத்தளம் பெயர் மெட்டஸ்கேன் META SCAN
இந்த வலைத்தளம் 19 வகையான ஆன்டி வைரஸ்களை கொண்டு சோதித்து அறிகிறது.

AVG
Eset
F-Prot
Avira
McAfee
Quick Heal
Avast
Bit Defender
Bullgard
Calmwin
Emisoft
Kingsoft
Norman
Sophos
Norton
Virusbuster
Fortinet
F-Secure
GFI

மேலுள்ள அனைத்து வைரஸ் என்ஜின்கள் கொண்டும் சோதித்து அறியப்படுகிறது

இந்த வலைத்தளத்தில் 40 எம்பி வரை உள்ள கோப்புகளை சோதித்து அறியலாம்.

வலைத்தள முகவரி சுட்டி


அனைவருக்கும் ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை