கூகிள் வெப் ஹிஸ்டரி நீக்க கடைசி நாள்

நண்பர்களே கூகிள் வெப் ஹிஸ்டரி குறித்த நண்பரின் பதிவு இன்று வெளியாகியுள்ளது.    நண்பர்க் கிரி அவர்கள் எழுதிவரும் தளத்தில் விரிவாக எழுதியுள்ளார்  நம் தளத்தின் நண்பர்களுக்கு தெரிந்து கொள்ள  வேண்டும் என்ற நோக்கிலே இங்கே அவருடைய பதிவினை இங்கே மறுபதிப்பிக்கிறேன்.


அனைவருக்கும் ஒரு விண்ணப்பம் நம் தளத்தில் www.gouthaminfotech.com என்று டைப் செய்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.  http://gouthamifnotech.com என்று டைப் செய்து வந்தால் photos.gouthaminfotech.com வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.  அது இன்னும் சில நாட்களில் சரி செய்யப்பட்டு விடும்.  மன்னிக்கவும்



மார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இருப்பீர்கள் பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள் ஆனால் கூகுள் உங்களிடம் இதை மாற்றப்போவதாக அறிவித்து உங்களுக்கு தகவலை அறிவித்து இருக்கும் நீங்களும் வழக்கம் போல ஓகே கொடுத்து போய் இருப்பீர்கள் icon smile கூகுள் வெப் ஹிஸ்டரியை (Web History) நீக்க நாளையே கடைசி நாள் நாம என்னைக்கு இதை எல்லாம் படித்து இருக்கிறோம். கணக்கு துவங்கும் போது ஒரு பெரிய Agreement வரும் 99 % மக்கள் அதை படிக்காமலே Accept செய்து விடுவோம். இது போல ஒன்றில் தான் ஒரு சிலர் நமக்கு வேட்டு வைத்து விடுகிறார்கள்.


நீங்கள் கூகுள் சேவை பயன்படுத்துபவராக இருந்தால் சமீபத்தில் நீங்கள் நிச்சயம் இதை கவனிக்காமல் இருந்து இருக்க முடியாது. தன்னுடைய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்போவதாக அறிவித்து இருந்தது அதாவது தன்னுடைய சேவைகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான விதிமுறைகளை கொண்டு வரப்போவதாகவும் இதை மார்ச் 1 முதல் செயல்படுத்தப்போவதாகவும் கூகுள் அறிவித்து இருந்தது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் Google Web History ஆகும். இது தான் தற்போது இணையம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

Google Web History என்றால் என்ன?

நீங்கள் எந்த உலவியை (Browser) பயன்படுத்தினாலும் நீங்கள் எந்தெந்த தளங்கள் சென்றீர்கள் என்பது பற்றிய தகவல்கள் உலவியின் History யில் சேமிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் வைத்து இருக்கும் settings ஐ பொறுத்து. யாராவது விஷயம் தெரிந்தவர் என்றால் இதை நோண்டினால் நீங்கள் எந்தெந்த தளம் சென்றீர்கள் இணையத்தில் என்னென்ன பார்த்தீர்கள் என்று எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்.

இதையே கூகுள் எப்படி செய்கிறது என்றால்…கூகுள் சேவைகளில் நாம் என்னென்ன தளம் போகிறோம் எதை தேடுகிறோம் நம்முடைய விருப்பங்கள் என்னென்ன என்பது அனைத்தையும் சேமித்துக்கொண்டே இருக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் கூகுள் தளத்தில் உங்கள் பயனர் கணக்கு கொடுத்து உள்ளே சென்று இருக்கும் போது கூகுள் தேடுதலில் என்னென்ன செய்கிறீர்களோ அனைத்தும் சேமிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும். நீங்கள் How to remove the google web history என்று தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் பின் அந்தப் பக்கத்தை மூடி விட்டு புதிய பக்கத்தில் திரும்ப இதே வரியை தட்டச்சு செய்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே இதை தட்டச்சு செய்து இருந்ததால் அதுவே ஏற்கனவே நீங்கள் தட்டச்சு செய்த பழைய வரியைக் காட்டும். இது போல பல சேவைகளில் நீங்கள் செய்தது எல்லாம் சேமிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்.
இதில் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஏதாவது விவகாரமா தேடி இருந்தால் அதுவும் இதில் இருக்கும். மொத்தத்தில் உங்கள் ஜாதகமே இதைப் பார்த்தால் தெரியும். நாளை உங்கள் கணக்கை யாராவது ஹேக் செய்து ஆட்டையப்போட்டு இதில் போய்ப் பார்த்தால் உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி விடும். எதை எதை தேடினீர்கள் என்று புட்டு புட்டு வைத்து விடும். கூகுளும் உங்கள் தேடுதலை அடிப்படையாக வைத்து செய்திகளை விளம்பரங்களை அனுப்பிக்கொண்டு இருக்கும்.

இதை எல்லாம் நீக்க நாளையே (29 Feb 2012) கடைசி நாள் அதனால் மறக்காமல் ஒத்திப்போடாமல் உடனே செய்து விடுங்கள். மார்ச் 1 க்கு பிறகு முடியாது. கூகுள் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து விடும்.

இதை எப்படி நீக்குவது?

https://www.google.com/history/ தளம் செல்லுங்கள் உங்கள் பயனர் கணக்கு கடவுச்சொல்லை (Password) கொடுத்தவுடன் பின்வரும் படம் போல வரும் இதில் நீங்கள் “Remove all web history” என்பதை க்ளிக் செய்தால் அனைத்து History யும் நீக்கி விடும் அதோடு இனி இது போல சேமிக்காது Pause செய்து விடும் உங்களுக்கு தேவை என்றால் On செய்து கொள்ளலாம் ஆனால் On (Resume) செய்ய வேண்டாம். கூகுள் தொடர்ந்து உங்கள் தகவல்களை எடுக்க முடியும் ஆனால் அனானிமஸ் ஆகத்தான் எடுக்க முடியும் உங்களையுடைய தகவல்கள் என்று கூற முடியாது.

இதை செய்ய 2 நிமிடம் கூட ஆகாது வழக்கம் போல சோம்பேறித்தனப்பட்டு மறந்து விடாதீர்கள். நீங்கள் பல்வேறு கூகுள் கணக்குகளை வைத்து இருந்தால் அனைத்திற்கும் இது போல தனித்தனியாக செய்ய வேண்டும்.
நாளை தான் கூறலாம் என்று நினைத்தேன் இது பற்றி தெரியாதவர்கள் கடைசி நாளில் கவனிக்காமல் இருந்து விட வாய்ப்புண்டு என்பதால் இன்றே கூறி விட்டேன். என்னுடைய தளத்தை படிப்பவர்களுக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி icon smile கூகுள் வெப் ஹிஸ்டரியை (Web History) நீக்க நாளையே கடைசி நாள் உங்கள் நண்பர்களிடமும் இந்த செய்தி பற்றி தெரிவித்து அவர்களையும் எச்சரிக்கை செய்து விடவும்.

ஆங்கிலத்தளங்கள் இது பற்றி அதிகம் எழுதிக்கொண்டு இருக்கின்றன தமிழில் ஏன் முக்கியத்தளங்கள் இது பற்றி அமைதி காக்கின்றன என்று புரியவில்லை.


இந்த பதிவு மற்றும் படங்கள் அவரின் சம்மதத்துடன் இங்கே வெளியிடப்படுகிறது.  நன்றி கிரி கிரி Blog



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

3டி தொழில்நுட்ப மென்பொருட்கள் அனைவருக்கும் சட்டரீதியான இலவசம்

நண்பர்களே அனைவருக்கும் முதலில் வணக்கம் இன்று இந்த பதிவு எழுதிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு விஷயங்கள் சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருந்தது ஒன்று வெளியாக போகும் அம்புலி 3டி படம் அடுத்து வேகமான படப்படிப்பினை தொடங்கியிருக்கும் கோச்சடையான் 3டி இரண்டும் 3டி படங்கள் என்பதே அதன் சிறப்பு.  இது போன்ற 3டி படங்கள் உருவாக்குபவர்களுக்கு என சில பிரத்யேக மென்பொருட்கள் உள்ளன.  இது போன்ற மென்பொருட்களை உருவாக்கும் நிறுவனம்  இப்பொழுது சில தொழில்நுட்ப மென்பொருட்களை இலவசமாக வழங்குகிறது.  இதன் மதிப்பு சர்வேதச விலையான 829$ ஆகும்.  இந்திய மதிப்பு ஒரு டாலருக்கு ஐம்பது ரூபாய என்று வைத்து கொண்டாலும் 829 x 50 = 41450 விலை மதிப்பு மிக்க மூன்று மென்பொருட்களை இலவசமாக வழங்குகிறது DAZ Studio நிறுவனம்.

Daz Studio Pro ( விலை $429.95)


உங்களுக்கு பிடித்த உருவங்கள் அவதார்கள் போன்றவைகளை சுலபமாக உருவாக்க முடியும். இந்த மென்பொருள் மூலம் 3டி யில் உருவாக்கிய உருவங்களுக்கு லைட் எபெக்ட்ஸ் மற்றும் உடைகள் போன்ற அனைத்து விதமான வேலைகளும் செய்ய முடியும். நீங்களாகவே ஒரு CG படங்களை உருவாக்க முடியும்.  இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு சுட்டி

Bryce 7 Pro (worth $249.95)



இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உருவாக்கிய உருவங்களை கடல், வானம், மேகம் மற்றும் தரை போன்றவற்றில் உலாவ விட்டு லேன்ஸ்கேப்பில் படங்களை உருவாக்க முடியும். 

இது குறித்த மேலும் அறிய சுட்டி

Hexagon 2.5 (worth $149.95)


 இதிலும் நிறைய சொல்ல தக்க தகவல்கள் அதிகம் உள்ளதால் நேரடியாக தளத்திற்கு சென்று அறிந்து கொள்வதே நல்லது.  சுட்டி


சரி இந்த மூன்று மென்பொருட்களையும் இலவசமாக தரவிறக்குவது எப்படி?

இந்த சுட்டியை கிளிக் செய்து முதலில் இந்த வலைத்தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள்.

சுட்டி   பிறகு



புதிய பயனாளர் கணக்கினை இங்கே சென்று தொடங்குங்கள் சுட்டி


கீழுள்ள படத்தில் உள்ள பெட்டிகளில் உங்கள் தகவல்களை நிரப்புங்கள்




உங்கள் மின்னஞ்சல் முகவரியின் வழியாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்

பிறகு இந்த சுட்டியினை கிளிக் செய்து கொள்ளுங்கள்  சுட்டி கீழுள்ள படத்தில் கண்ட பக்கம் திறக்க படும்.  அதில் உள்ள  மூன்று பொருட்களையும் add to cart கிளிக் செய்யுங்கள்.


பிறகு கீழுள்ள படத்தில் உள்ளபடி ஒரு பாப் அப் தோன்றும் அதில் Checkout என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு கீழுள்ள பக்கத்தில் இருப்பது போல நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய தேவையில்லை தோன்றும் பிறகு Place Order  என்ற பச்சை நிற பட்டனை அழுத்தினால் போதும்




 

கீழுள்ள பக்கம் வந்துவிடும்.  அதில் Downloads are available in your Account Profile என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கான் மென்பொருள் தரவிறக்க லிங்குகள் தோன்றும். 

 
 நீங்கள் சரியான மின்னஞ்சல் முகவரி குறிப்பிட்டிருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மூன்று மென்பொருட்களின் Serail எண்கள் அனுப்பியிருப்பார்கள்.  இந்த மென்பொருட்கள் விண்டோஸ் மேக் கணினிகளில் வேலை செய்யும்.

இது ஒரு குறுகிய கால சலுகை என்பதால் எப்பொழுது வேண்டுமானலும் மென்பொருள் இலவசமாக தரப்படுவது நிறுத்தலாம்.  அல்லது நீட்டிக்கபடலாம் விரைவில் தரவிறக்கிக் கொள்ளவும்.

விரைவில் வேறு ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். நம் பதிவை படிக்கும் நண்பர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் படிக்கும் மாணவர்கள், உறவினர்களிடையே பகிரவும்.  முடிந்த்வரை அனைத்து திரட்டிகளிலும் ஒட்டு போடுவதால் இந்த பதிவுகள் அனைவரையும் சென்றடைய உதவும்.  விம்பரங்களையும் கிளிக் செய்து படிக்கவும். 


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை