ஜோகோ கன்வெர்டர் மற்றும் ஜிமெயில் லேப் நிறுத்த மற்றும் நிறைய மென்பொருட்கள்

நண்பர்களே இணையம் இல்லாத வீடு கிடையாது என்று மாறி வருகிறது.  இது போல் இருக்கையில் இணைய மையம் ( Internet Browsing Centre) செல்வது குறைவே.   சில நேரங்களில் நம் இணைய மையம் செல்லும் பொழுது அங்கே இணையத்தில் உலாவும் பொழுது ஏற்கனவே முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.  ஆனால் அது குறித்த பதிவு இல்லை.  இணைய மையங்களில் எப்பொழுது மைக்ரோசப்ட்  ஆபிஸ்  மட்டுமே நிறுவி இருப்பார்கள்.

உங்களுக்கு நண்பர் அல்லது அலுவலகத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல் வருகிறது.  அதை பார்க்கிறீர்கள்  அதில்  ஒபன் ஆபிஸில் உருவாக்கிய ஒரு வேர்ட் அல்லது பவர் பாயிண்ட் பிரசண்டேசன் அல்லது ஒரு எக்ஸல் கோப்பு வருகிறது.  odt, ods, odp என்ற எக்ஸ்டென்சனோடு தாங்கி வரும் அந்த கோப்பினை நநீங்கள் என்ன நினைப்பீர்கள். அது வைரஸாக இருக்குமோ என்று நினைப்பீர்கள்.  ஏன் என்றால் இந்தியாவில் அனைவரும் மைக்ரோசாப்ட் வேர்ட் உபயோகப்படுத்துவதால் doc, xls, ppt  என்ற எக்ஸ்டென்சன்கள் மட்டுமே தெரியும்.  சரி இதை எவ்வாறு தெரிந்து கொள்வது.   ஒவ்வொரு பொதுவான எக்ஸ்டென்சன்கள் குறித்த தகவல்கள் அனைத்தையும் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம். சுட்டி



சரி இந்த மாதிரி கோப்பும் வந்து விட்டது.  அங்கு இணைய மையத்தில் வேர்ட் மட்டுமே வந்துள்ளதோ ஒபன் ஆபிஸில் உருவாக்கிய கோப்பு எவ்வறு பார்ப்பது.  அந்த இணைய மையத்தில் மென்பொருட்கள் நிறுவ தடை செய்திருப்பார்கள் அப்படி செய்யாமல் இருந்தால் இந்த ஒபன் ஆபிஸ் பிளக் இன் நிறுவலாம்.  சுட்டி  சரி அப்படி அவர்கள் தடை செய்திருந்தால் என்ன செய்வது அதற்கு இணையத்தினையே நாட வேண்டும்.

Zoho என்ற நிறுவனம் குறித்து கேள்விபட்டிருப்பிர்கள்  இந்த நிறுவனத்தினர் ஆன்லைன் மூலம் அனைத்து விதமான மென்பொருள்களை நிறுவமால இணையம் மூலம் இயக்க இலவசமாக வழங்குகின்றனர்.  இதை இலவசமாகவும் பணம் செலுத்தியும் பெறலாம்.   மின்னஞ்சல், உடனடி உரையாடல் ( Instant Messenger),  விக்கிபீடியா போன்ற விக்கி இது போன்ற ஏராளமன வசதிகள் அளிக்கிறது.

இந்த நிறுவனம் நம்மிடம் உள்ள ஒபன் ஆபிஸ் கோப்பினை மைக்ரோசாப்ட் வேர்டு கோப்பாகவும்.  அல்லது நேரடியாக பார்க்கவும் அதன் வழியாக எடிட் செய்து தரவிறக்கவும் வழி வகை செய்துள்ளனர்.  Zoho நிறுவனத்தின் வலைத்தள சுட்டி 
கோப்புகளை பார்க்க மற்றும் வேறு வகை கோப்புகளாக மாற்ற கன்வெர்டர் வலைத்தள சுட்டி

ஜிமெயில் லேப் நிறுத்த தொடங்க

சில நேரங்களில் உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் சரியாக இருந்தும் ஜிமெயில் திறக்கவில்லை எனில்.   அல்லது ஜிமெயில் திறக்க நேரம் ஆனாலோ உங்களுடை ஜிமெயில் லேப் நிறுத்திவிட்டு திறந்தால் உடனே திறக்கும்.  இதன் மூலம் ஜிமெயிலினுள் அறிமுகப்படுத்தப்பட்ட லேப் அதாவது  ஆடு ஆன்கள் நிறுத்தப்பட்டு திறக்கும்.  இதை எப்படி செயல்படுத்துவது.
கீழே கொடுத்திருக்கும் சுட்டியை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.

https://mail.google.com/mail/?labs=0

தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளுங்கள்.

சரி இப்பொழுது ஜிமெயில் எப்பொழுதும் போல திறக்கிறது மறுபடியும் ஜிமெயிலின் லேப் நிறுத்தி வைத்திருக்கிறோம்.  அதை மறுபடியும் எப்படி தொடங்குவது  உங்கள் அக்கவுண்டில் திறக்கும் பொழுது labs=0  என்பதனை நிக்கி விடுங்கள் முடிந்தது.


நீங்கள் ரயிலில் முன்பதிவு செய்து காத்திருக்கிறீர்களா.  காத்திருக்கும் நிலையில் உள்ளதா உங்கள் டிக்கெட்.  உங்கள் ரயில் டிக்கெட் நிலையினை அடிக்கடி இணையத்தில் சென்று பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா.  கவலை வேண்டாம் உங்களிடம் உள்ள டிக்கெட் PNR எண் மற்றும் உங்கள் கைபேசி எண் இருந்தால் போதும் ஒவ்வொரு முறை உங்கள் டிக்கெட்டின் தற்போதைய நிலை என்ன என்று உங்கள் கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்து கொண்டிருக்கும்.

வலைத்தள சுட்டி

குறிப்பு :  தற்போதைய நிலவரத்தின் படி இந்த வலைத்தளம் மூடபட்டிருக்கிறது சில மணி நேரங்களில் திறக்கப்படும் என்று தெரிகிறது.


ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்த நேரத்தில் தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனம் மட்டுமே எனக்கு சிறு உதவி செய்து வருகிறது.  என் படைப்புகளை வெளியிட்டு அதன் மூலம் வரும் சிறு தொகையை எனக்கு அளித்து வருகின்றனர்.    நானும் கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.

அத்துடன் வலைப்பதிவின் வடிவமைப்பினை மாற்றியிருக்கிறேன் எப்படி இருக்கிறது என்று கருத்து சொல்லுங்கள்.   வலைப்பூ திறக்கு நேரம் எப்படியிருக்கிறது. பழைய தேவையில்லத விட்ஜெட் அனைத்தையும் தூக்கி கடாசி விட்டேன்.  சில தினங்களில் வலைப்பதிவின் தலைப்பினையும் மாற்றலாம் என்று யோசித்திருக்கிறேன் நீங்களும் உங்களுக்கு பிடித்த தலைப்பினை கூறலாம்.  அத்துடன் உங்கள் கருத்துக்களையும். 

How to Sync Creation Tally.erp 9 step by step


நன்றி மீண்டும் வருகிறேன்

11 ஊக்கப்படுத்தியவர்கள்:

sivaG said...

Thanks for ur great work... keep go... i clicked the ads... thanks

sakthi said...

வணக்கம் நண்பரே ,
கண்டிப்பாக செய்கிறோம்
நட்புடன் ,
கோவை சக்தி

எஸ்.கே said...

சிம்பிளாவும் நன்றாகவும் இருக்குங்க டெம்ப்ளேட்!

S.முத்துவேல் said...

மிக அருமையான தகவல் +
தங்கள் அறிவிப்பும்

நன்றி ......

திருமூர்த்தி said...

Very good. Keep going. We are with you.

Regards,
Thiru

Unknown said...

வடிவேலன்
விளம்பரங்களை கிளிக் செய்து என்னால் ஆன உதவி செய்கிறேன்.

வாழ்க வளமுடன்.

மாணவன் said...

வழக்கம்போலவே பயனுள்ள தகவல்கள் மற்றும் மென்பொருள் பகிர்வுக்கு நன்றி நண்பரே

தொடரட்டும் உங்களின் வலைப்பணி

Vani said...

அருமையான தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி
அத்துடன் உங்களுடைய டெம்ப்ளேட் சிம்ப்லி சூப்பர் :))

Krishna said...

அருமையான மற்றும் பயன் உள்ள தகவல்.உடனே பயன்படுத்திப் பார்த்துவிட்டேன்.
நன்றி

Sapprajan said...

I not clearly view tamil letter in u r blog pl help me
i used Linux Mint OS and Mozilla Firefox Browser

ADMIN said...

என்னால் முடிந்த வரைக்கும் ஆட்ஸ்களை 'கிளிக்' விட்டேன்.. உலகத்தில் ஒரு சிலரை மட்டுமே இப்படி நேரிடையாக பேசுபவர்களை காண முடியும்.. வெளிப்படையாக தங்களின் நிலையை 'பளிச்' என சொல்லிவிட்டீர்கள்.. தங்களின் நேர்மை மிகவும் பிடித்திருக்கிறது. தங்களின் பதிவுகளைப் போலவே..! தொடருங்கள் திரு. வடிவேலன் அவர்களே..! எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு..!

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை