நண்பர்களே முதலில் ஒரு நல்ல செய்தி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. 15-11-2010 திங்கட்கிழமை அன்று இரவு 8:50 க்கு பிறந்தது. குழந்தை பிறந்தது ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனையில் மிக அருமையான கவனிப்புகள் அரசு மருத்துவமனையில். என் மனைவிக்கு பனிக்குடம் ஞாயிறு இரவு 11:30 மணிக்கு உடைந்து விட்டது. அது அவருக்கு தெரியவில்லை. பனிக்குடம்தான் உடைந்திருக்கிறது என்று என் மனைவிக்கு பனிக்குடம் உடைந்திருகிறது என்று தெரிந்தவுடன் பக்கதிலுள்ள தனியார் மருத்துவமனையில்தான் முதலில் சேர்த்தேன் அவர்கள் சிசேரியன் தான் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.
உடனே என் மனைவி செவிலி தோழி ஒருவர் உடனே ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறினார். உடனே நானும் மதியம் ஒரு மணிக்கு மருத்துவமனியில் சேர்த்து விட்டேன். அவர்களும் சிசேரியன் தான் செய்ய வேண்டும் என்று கூறினாலும் அது கடைசி கட்டம் என்றும் முதலில் உங்கள் மனைவிக்கு இயற்கையான பிரசவ வலி வர மருந்துகள் தருகிறோம் என்று அழைத்து சென்றார்கள்.
அது போல மருந்துகள் கொடுத்த பின் இயற்கையான பிரசவ வலி இரவு 8 மணிக்கு வந்து 8:50 என் பெண் இந்த பூமியில் அவதரித்து விட்டாள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் என்னுடைய சக பதிவர்கள் செய்த உதவி மிகவும் பெரியது நம் நண்பர் வேலன் நலம் பெற பிரார்த்திப்போம் வாருங்கள் என்று ஒரு பதிவிட்டு என் குழந்தையும் மனைவியும் நலம் பெற பிரார்த்தித்தார்கள் இந்த நேரத்தில் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி இன்றைய பதிவிற்கு போவோம்.
நம் கணினியில் மால்வேர்கள் வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது உடனே இந்த தளத்திற்கு சென்று இந்த மென்பொருளை தரவிறக்குங்கள். இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஸ்கேன் செய்து எங்கு மால்வேர்கள் மற்றும் சந்தேகத்துக்குரிய மால்வேர்கள் இருந்தாலும்.கண்டுபிடித்து கொடுத்துவிடும். இந்த மென்பொருள் காஸ்பர்ஸ்கை நிறுவனத்தினரால் தரப்படுவதால் இந்த மென்பொருள் மிகவும் நம்பிக்கையானது. மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருள் குறித்த வலைப்பக்கம் சுட்டி
உங்களிடம் உள்ள மைக்ரோசாப்ட் வேர்ட் 6.0 முதல் 2010 வரை உள்ள கோப்புகளை மைரோசாப்ட் நிறுவாமல் வெறும் விவர் வழியாக பார்க்க இந்த Viewer உங்களுக்கு உதவும். இதே போல் இவர்கள் எக்ஸல் கோப்புகளை பார்க்கவும் ஒரு மென்பொருள் தந்துள்ளார்கள்.
மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் எக்ஸல் கோப்புகளை வெறும் விவர் வழியாக பார்க்க மற்றும் பிரிண்ட் எடுக்க மட்டும் இதை பயன்படுத்தலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி
சில பல விளம்பரங்களை கிளிக் செய்யுங்க நீங்க படிக்கீறீங்க அதுக்கு நாங்க ரொம்ப உழைக்கிறோம் எங்கள் உழைப்பிற்கு உங்களால் முடிந்த கூலி கொடுக்கலாமே. விளம்பரங்களை கிளிக் செய்யுங்க அதோட ஓட்டும் போட்டுங்க..
நன்றி மீண்டும் வருகிறேன்
மால்வேர்களை கண்டுபிடிக்க காஸ்பர்ஸ்கையின் சட்டரீதியான சூப்பர் மென்பொருள்
Nov 22, 2010
எழுதியவர்
Vadielan R
Labels:
Excel,
XLS,
சட்டரீதியான,
மால்வேர்
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே உங்களிடம் உள்ள பிடிஎப் கோப்புகளை வேர்ட் கோப்பிற்கு மாற்ற மிகவும் சுலபமான மென்பொருள் PDF TO Word Converter இந்த மென்பொருள் சட்ட...
-
நண்பர்களே இதுவரை எழுதிய பதிவுகள் அனைத்தையும் காண ஒரு சுட்டி உருவாக்கி வலது பக்கம் கொடுத்து வைத்துள்ளேன் புதியதாக நம் வலைத்தளத்திற்கு வரும் ...
-
நண்பர்களே தொடர்ந்து அலுவல் பணி காரணமாக வெளி இடங்களுக்கு பயணங்கள் தொடர்ந்து இருப்பதால் தொடர்ச்சியாக பதிவுகள் எழுத முடியவில்லை மன்னிக்கவும்....
-
நண்பர்களே அனைவருக்கும் உதவகூடிய 101 தொழில்நுட்ப தளங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன். அனைவருக்கும் இந்த தளங்கள் உபயோகமாக இருக்கும் என்பது த...
-
உங்களுக்கு ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யத்தெரியும் இன்ஸ்டால் செய்த சில நாட்களுக்கு பிறகு ஆண்டிவைரஸ் சரியில்லை என்று நினைக்கிறீர்கள் ஆனால் அன் இ...
-
நண்பர்களே இதுவரை வெளிவந்த தேடுபொறிகளை விட மிக அதிக வசதிகளுடன் புதிய தேடுபொறி ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட தீர்மானித்துள்ளது. அதுதான் ...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 480க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்...
-
நண்பர்களே உங்களுக்கு கணனியில் நிறைய மாற்றங்களை கொண்டு வர இந்த சுட்டி உதவும் கடைசியில் உள்ளது. அதற்கான நீளமான குறிப்புகள் #DataVault, Irc...
14 ஊக்கப்படுத்தியவர்கள்:
மிகவும் அருமையான மென்பொருள்
பகிர்வுக்கு நன்றி
என் பெண் இந்த பூமியில் அவதரித்து விட்டாள்.//
வாழ்த்துகள், மிகவும் மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் வடிவேலன்.
இந்த பிசியான நேரத்திலும் அருமையான மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.
அருமையான மென்பொருள்
பகிர்வுக்கு நன்றி
//நண்பர்களே முதலில் ஒரு நல்ல செய்தி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது//
வாழ்த்துக்கள் நண்பரே,
உங்கள் மகளும் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
வாழ்க வளமுடன்
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
வாழ்த்துகள் வேலன் :-)
வாழ்த்துக்கள் நண்பரே.
வாழ்த்துக்கள் வடிவேலன்.
மங்கலானி பவந்து
இரா. சுந்தர் ராமன்
வாழ்த்துக்கள் வடிவேலன்.
மங்கலானி பவந்து
இரா. சுந்தர் ராமன்
நல்ல மென்பொருளை தேடி வழங்கிவரும்,உங்களின் சேவைகள் தொடற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துக்கள் தாயும் சேயும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.........
வாழ்த்துக்கள்
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்