நண்பர்களே நமது கைத்தொலைபேசியில் தேவையில்லாத எஸ் எம் எஸ் வந்து நம்மை நிறைய தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும். இணைய மின்னஞ்சலில் வரும் சில ஸ்பெம் மின்னஞ்சலை போல உங்கள் தொலைபேசி எண் இத்தனை லட்சங்கள் வென்றிருக்கிறது போன்ற செய்திகள் வரும் இதே போல் உங்களுக்கு காலர் ட்யூன் வேண்டுமா. இந்த ஆபர் வேண்டுமா இந்த பாடலை ஆக்டிவேட் செய்யுங்கள் என்பது போன்ற தேவையில்லாத SMSகள் வரும் இது போன்ற செய்தி SMS களை நிறுத்த இந்தியர் ஒருவர் ஒரு மென்பொருள் கண்டுபித்திருக்கிறார். இந்த மென்பொருள் நம்மில் பலருக்கும் ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம்.
தேவையில்லாத Spam SMS களை தானாக தடை செய்யும்.
தடை செய்த SMSல் நமக்கு தேவையான SMS இருந்தால் அதை திரும்ப பெறும் வசதி. (இந்த சேவை வேறு எந்த மொபைல் மென்பொருளிலும் இல்லை)
இதன் விலை 2$ கள் இந்திய மதிப்பில் 99 ரூபாய் மட்டுமே/ - புதிய கண்டுபிடிப்பு என்பதால் இந்த மாத இறுதி வரை இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
இந்த சுட்டியில் உங்கள் மொபைலுக்கான IMEI எண் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
உங்கள் மொபைல் மாடல் மற்றும் நிறுவனம். உங்கள் மொபைல் எண் போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்.
இதில் நிறைய வசதிகள் உண்டு அதுகுறித்து அறிய இங்கே செல்லவும். சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
6 ஊக்கப்படுத்தியவர்கள்:
அனைவருக்கும் உபயோகமான பதிவு.
இன்றைய உலகில் பெரும்பலான மக்கள் செல்போனில் இம்மாதிரியான பிரச்சனைகளை சந்தித்துகொண்டிருப்போருக்கு இது ஒரு நல்ல பதிவு
நன்றி
:))
வரும் அனைத்து எஸ்.எம்.எஸ் களையும் இவர்கள் கண்காணிக்க வாய்புண்டு, முழு தகவல் அறிந்து சொல்லவும் ப்ளீஸ்!
நன்றிகள் வேலன் ஸார்..!
இப்போதுதான் டவுன்லோடு செய்துள்ளேன்..!
எப்படி வேலை செய்கிறது என்று பார்த்துவிட்டுச் சொல்கிறேன்..!
வணக்கம்.
என்னுடைய NOKIA 2700 Classic மொபைலில் வேலை செய்யவில்லை. File Format Not Supported என்று வருகிறது. மாற்றுவழி கூறவும்.
நன்றி
Thank you very much Sir ,Ihave downloaded ,I will say how it works
good and useful post.
thanks!!
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்