சட்ட ரீதியான Win X DVD Author மென்பொருள் இலவசமாக அக்டோபர் 31 வரை மட்டுமே

நண்பர்களே நீங்கள் ஒரு அசைவ சாப்பாடு பிரியரா விதம் விதமாக அசைவம்  சமைத்து சாப்பிட ஆசையா இதோ ஒரு தோழி மிகவும் அழகாக தினம் ஒரு அசைவ சமையலை எப்படி செய்வது என்று மிகவும் அழகாக விளக்கி எழுதுகிறார் அவர் தளத்திற்கு செல்ல சுட்டி



சட்ட ரீதியான WinX DVD Author மென்பொருள் இலவசமாக  அக்டோபர் 31 வரை இந்த சலுகை இந்த மென்பொருள் மூலம் என்னவெல்லாம் செய்யலாம்

எந்த ஒரு வீடியோவிலிருந்தும் டிவிடி ஆக மாற்றி நேரடியாக டிவிடியில் வீடியோ டிவிடியாக பதியலாம்.

டிவிடியில் சப் டைட்டில் சேர்க்கலாம்.

டிவிடி மெனு உருவாக்கலாம்.

வீடியோ டிவிடி உருவாக்கலாம்.

நேரடி மென்பொருள் தரவிறக்க சுட்டி

இணையத்தள சுட்டி


நாம் ஒவ்வொரு முறை ஒரு கோப்பை உருவாக்கி ஒரு போல்டரில் போட்டு வைப்போம். பிறகு அந்த கோப்பை நீக்கி விடுவோம். பிறகு அந்த போல்டர் மட்டும் அந்தரத்தில் தொங்கும்.  அது போல் அதிகமாக உள்ள காலி போல்டர்களை நீக்க இந்த மென்பொருள் சுட்டி



யூஎஸ்பி டிரைவில் உபயோகப்படுத்தக்கூடிய சிறு மென்பொருள் இது இதற்கு பல சிறு மென்பொருட்கள் உள்ளன.  உதாரணத்திற்கு  கடைசியாக உங்கள் கணிணியில் எந்த  யூஎஸ்பி வன் பொருள் உபயோகப்படுத்தப்பட்டது என்று கண்டறியலாம்.

Blue Screen பிழைக்கு என்ன காரணங்கள் உள்ளது என்று அறியலாம்.

உங்கள் கணிணியில் நிறுவியுள்ள மென்பொருள்களின் Product Key கண்டுபிடிக்கலாம்.  இது போல நூறு வகையான குட்டி மென்பொருட்கள் உள்ளன.

மென்பொருள் தரவிறக்க சுட்டி



உங்கள் கணிணியில் சிடி ட்ரைவை வெளியே எடுக்க தள்ள நேரடியாக கணிணியில் இருந்து இயக்க மென்பொருள் சுட்டி


நீங்கள் எழுதும் ஆங்கில எழுத்துக்களை அப்படியே பின்னாளிலிருந்டுஎழுத வேண்டுமா உதராணத்திற்கு http://gouthaminfotech.blogspot.com  என்பதை moc.topsgolb.hcetofnimahtuog//:ptth  என்று வரவழைக்க வேண்டுமா அதற்கு இந்த மென்பொருள் உதவும் மென்பொருள் சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

300வது பதிவையொட்டி சிறப்பு சட்டரீதியான மென்பொருட்கள் ஆன்டிவைரஸ்கள்


நண்பர்களே தொடர்ந்து எழுத முடியாமல் அலுவலக வேலைப்பளு அதிகரித்திருப்பதால் பிப்ரவரிக்கு பிறகு தொடர்ந்து தினம் ஒரு பதிவு எழுதுவேன். முடியும் பொழுதெல்லாம் ஒரு பதிவு என்று எழுதுகிறேன்  தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  தொடர்ந்து பதிவுகள் எழுதமுடியததால் மன்னிக்கவும்.

அக்டோபர்  இருபத்திரண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிடுவதை கொண்டாடுவதற்காக பாண்டா ஆன்டிவைரஸ் நிறுவனத்தினர் 22-10-2009 அன்று மட்டும் இலவசமாக ஒருவருடத்திற்கான Panda Internet Security 2010 இலவசமாக கொடுக்கின்றனர்.


இதேபோல் காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் நிறுவனத்தினரும் அதே தேதியில் இலவசமாக ஒருவருடத்திற்கான ஆன்டிவைரஸ் வழங்குகின்றனர்.  இணையத்தள சுட்டி

22-10-2009 மறவாதீர் அனைவருக்கும் இலவசங்களை வாரிக் கொடுக்க போகிறது அனைத்து மென்பொருள் நிறுவனங்களும்

பேஸ்புக் என்னும் வலைத்தளத்தில் உங்கள் கணக்கினுள் ஏதாவது ஒரு நண்பரின் கோரிக்கை, செய்திகள் வந்தால் உடனே உங்கள் கணிணியில் டெஸ்க்டாபில் தெரிய இந்த மென்பொருள் போதும்.  இதற்காக உங்கள் வலைஉலாவியில் நுழைய தேவையில்லை.  மென்பொருள் சுட்டி


உங்கள் கணிணியில் உள்ள வன்தட்டுகளின் சூட்டினை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள்.  ஒவ்வொரு வன்தட்டும் எவ்வளவு சூடு ஆகிறது என்று தெரிந்து கொள்ளலாம். இது பழைய DOS மோடில் இயங்குகிறது இந்த மென்பொருள்.  சுட்டி இதை தரவிறக்கிய பின் Winzip மூலம் Unzip செய்யுங்கள். பிறகு எங்கு வேண்டுமோ. அங்கு சேமியுங்கள் பிறகு Start மெனு கிளிக் செய்து அதில் Run தேர்வு செய்து அதில் CMD என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள். நீங்கள் சேமித்த போல்டர் பகுதிக்கு disktemp.exe என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள் உங்கள் வன்தட்டின் சூட்டினை தெரிந்து கொள்ளலாம்.



இலவச ஆடியோ வீடியோ கன்வெர்ட்டர் உங்களுக்காக சுட்டி
இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்புகள்

VOB, FLV, MPG, AVI, MPEG, MOV, WAV, MP3 into MP3, AVI, WAV, WMV, MPEG, FLV, MKV, RM, 3GP, 3GPP2, MOV and iPod video format.



இணையத்தளத்தில் சிறு கோப்புகளை வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மூலம் ஸ்கேன் செய்ய இந்த வலைத்தளம் உதவும்.  இந்த வலைத்தளத்தில் 40 வகையான ஆன்டிவைரஸ் மென்பொருள் மூலம் சோதிக்கப்படுகிறது.  இணையத்தள சுட்டி


கீழ்கண்ட நாற்பது வகையான ஆன்டிவைரஸ்கள் மூலம்தான் சோதிக்கப்படுகிறது.

A-squared, AhnLab-V3, AntiVir , Antiy-AVL, Authentium, Avast, AVG, BitDefender, CAT-QuickHeal, ClamAV, Comodo, DrWeb, eSafe, eTrust-Vet, F-Prot, F-Secure, Fortinet , Gdata, Ikarus, Jiangmin, K7AntiVirus, Kaspersky, McAfee, McAfee+Artemis, McAfee-GW-Edition, Microsoft, NOD32, Norman, nProtect, Panda, PCTools, Rising, Sophos, Sunbelt, Symantec, TheHacker, TrendMicro, VBA32, ViRobot, VirusBuster.

இந்த பதிவு என்னுடைய 300வது பதிவு இந்த பதிவை என் பதிவுகளை படித்து பெரும் ஆதரவு தரும் நண்பர்களுக்கும் தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கும் தமிழ்10, தமிழ்மணம், தமிழிஸ், திரட்டி, அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.  இது உங்களால் மட்டுமே முடிந்தது.  நன்றி நன்றி நன்றி.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

தீபாவளியை சிறப்பாக கொண்டாட சில டிப்ஸ் மற்றும் மென்பொருட்கள்

நண்பர்களே உங்கள் கணிணியில் உங்கள் கணிணியின் ட்ரைவர்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா?, ஏதும் சந்தேகப்படும்படியான மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ளதா?, எந்தெந்த கோப்புகள் உபயோகப்படுத்தப்படுகிறது, இதுமட்டுமில்லை உங்கள் கணிணியின் திறன் மற்றும் வன்பொருள்கள் குறித்த தகவலையும் பெறலாம் ஒரே மென்பொருள் மூலம்.

இந்த மென்பொருளை வடிவமைத்தவர்கள் காஸ்பர்ஸ்கை ஆன்டிவைரஸ் நிறுவனத்தினர்.

இதை எப்படி செய்வது?

இந்த தளத்திலிருந்து இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

மென்பொருளை தரவிறக்கிய பின் நிறுவத் தேவையில்லை நேரடியாக இயக்கலாம். இயக்கியவுடன் கீழிருக்கும் படம் போல உங்களை கேட்கும். உடனே I Agree என்பதனை தேர்வு செய்யுங்கள்.


அதன் பிறகு மென்பொருள் திறக்கப்படும்.

மென்பொருளில் Create Report என்பதனை தேர்வு செய்யுங்கள்.

அனைத்து வேலைகள் முடிந்தவுடன் சுருக்கப்பட்ட (ZIP) கோப்பாக சேமிக்கப்படும்.


பிறகு இந்த தளம் செல்லுங்கள் இணையத்தளசுட்டி


இந்த தளத்தில் Browse என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள். சேமித்த ZIP கோப்பினை தேர்வு செய்யுங்கள். பிறகு Submit என்பதனை தேர்வு செய்யுங்கள். முடிந்தது பிறகு உங்கள் சில விநாடிகளில் உங்கள் கணிணி குறித்த தகவல்கள் சுலபமாக பெறலாம்.





தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட தீயணைப்புத்துறையின் சில   புகைப்படங்கள்




செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை





முதலுதவி
 

 புகைப்படங்கள் உதவி நன்றி தீயணைப்புத்துறை

பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள்.

படடாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள்; முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

குழந்தைகளை சட்டைப் பையில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.

வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க அனுமதிக்காதீர்கள்.

பட்டாசுகளை வீட்டிற்கு வெளியே வெடிக்கச் செய்யுங்கள்.

ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் வெடிக்கச் செய்யுங்கள்.

வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க அனுமதிக்காதீர்கள்.

பட்டாசு வெடிக்கும் போது ஒருவாளி நீர் எப்போதும் பக்கத்தில் பாதுகா‌ப்பிற்காக இருக்கட்டும்.

நீண்ட வத்திகளை‌க் கொண்டு பட்டாசு வெடிக்கச் செய்யுங்கள். கைக‌ளி‌ல் ‌பிடி‌த்து வெடி‌க்கு‌ம்போது தூ‌க்‌கி எ‌ரியு‌ம் சாகச‌ங்களை செ‌ய்ய வே‌ண்டா‌ம்.

எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதீர்கள்; உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள்; அல்லது கீழே படுத்து உருளுங்கள்.

தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள்; இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்; உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்
‌.
ஏதும் அசம்பாவிதம் எனில் தயங்காமல் 101 ஐ அழையுங்கள்.





அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். 


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ரேபிட்ஷேர் தரவிறக்க இலவச எளிய மென்பொருள்


நண்பர்களே நாம் ரேபிட்ஷேர் மெகா அப்லோடு போன்ற இணையத்தளங்களிலிருந்து நிறைய கோப்புகளை  தரவிக்குகிறோம் ஆனால் ஒவ்வொரு முறை தரவிறக்கும் பொழுதும் நாம் இந்த  தளங்களில் கேப்ட்சர் என்ற முறையை பயன்படுத்தி தரவிறக்கம் தருகிறார்கள். 

ஒரே நேரத்தில் ஒரு கோப்பு மட்டுமே தரவிறக்கவும் முடியும். ஆனால் நம்மிடம் ஒரு முழு கோப்பை உருவாக்க ஒரு பத்து கோப்புகளை தரவிறக்கினால் மட்டுமே முழு கோப்பு உருவாகும்.  ஒரு கோப்பு தரவிறக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் இது பத்து என்றால் அவ்வளவுதான் நொந்து போய் விடுவோம். 


இந்த மென்பொருள் கைகொடுக்கும்  உங்களுக்கு  ஒன்றுக்கு மேற்பட்ட லிங்குகளை இணைத்து விட்டால் ஒரு கோப்பு முடிந்தவுடன் இன்னொரு கோப்பு தரவிறக்க ஆரம்பித்து விடும்.  அது மட்டுமில்லை இந்த கேப்ட்சா என்பதும் கேட்காது.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

இந்த மென்பொருளின் பயன்கள் ஆங்கிலத்தில் கீழே


           

1.       Supports for concurrent downloading from multiple services like Mediafire, Megaupload and Rapidshare.
2.       Downloading using proxy list
3.       Download history
4.       Smart clipboard monitoring
5.       Automatic checking for file’s existence on server
6.       Auto shutdown option
7.       Simple CAPTCHA recognition




புகைப்படம் எடிட்டர் மற்றும் கன்வெர்ட்டர்


புகைப்படங்களை எடிட் செய்ய மற்றும் வேறொரு கோப்பாக மாற்ற இந்த
மென்பொருள் உங்களுக்கு மிகவும் உதவி செய்யும்.



மென்பொருள் தரவிறக்க சுட்டி

விளையாட்டு  மென்பொருள் தரவிறக்கம்

கார் ரேஸ் பிரியரா நீங்கள் உங்களுக்காக ரெனால்ட் ட்ரக் ரேஸிங் விளையாட்டு மென்பொருள் சட்டரீதியான இலவசமாக விளையாட்டு இங்கே இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

தரவிறக்கி சுட்டி










நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை