உங்கள் தளம் எந்தெந்த நாடுகளில் முடக்கப்பட்டுள்ளது????

நண்பர்களே நாம் இந்தியாவிலிருந்து பதிவு எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கிறோம்.  அதே நேரம் நாம் எழுதும் பதிவுகளை இந்தியாவில் காணமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே வேற நாடுகளில் காண இயலுமா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது. அதற்கு இந்த தளம் உதவும்.  சுட்டி

இந்த தளத்தில் உங்கள் தள முகவரியை உள்ளீடு செய்தால் போதும் பல்வேறு நாட்டில் இருந்து கொண்டு உங்கள் முகவரி பிங்க் செய்து உங்கள் தளம் திறக்கிறதா என்று சொல்லிவிடும்.  என் தளம் சைனாவிலும், ரியோடிஜெனிரோவிலும் முடக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் தளத்தை சோதியுங்கள்.




உங்கள் கணிணியில் ஒரு கார் பந்தயம் விளையாட்டு (Car Race Game) பயன்படுத்த வேண்டுமானால் நீங்கள் அந்த விளையாட்டை குறைந்தபட்சம் காசு கொடுத்து வாங்க வேண்டும்.  நீங்கள் பைசா கொடுக்காமால் இந்த விளையாட்டை தரவிறக்கி விளையாடலாம். அதுவும் இந்த விளையாட்டு ஒபன் சோர்ஸ் பயனாளர்களால் உருவாக்கப்பட்டது என்பதினால் கேட்கவும் வேண்டுமோ.  இந்த விளையாட்டை தரவிறக்க சுட்டிகள் கீழே




விண்டோஸில் விளையாட - சுட்டி
மேக் கணணியில் விளையாட - சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கூகிள் ஆன்லைன் கோப்புகளை தரவிறக்க எளிய வழி

நண்பர்களே நாம் கூகிளில் உள்ள கூகிள் டாக்ஸ் உபயோகப்படுத்தியிருப்போம்.  அந்த ஆன்லைன் Google docs நிறைய கோப்புகள் சேமித்திருப்போம்.  அப்படி சேமித்த அனைத்து கோப்புகளையும் தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகப்படும். 

இந்த மென்பொருளை தரவிறக்கி சாதராண மென்பொருள் போல நிறுவிக் கொள்ளுங்கள்.  

பின்னர் அந்த மென்பொருளை இயக்கி அதில் User Name உங்கள் கூகிள் நுழைவுச் சொல்லை கொடுக்கவும்.

பின்னர் Password என்ற இடத்தில் உங்கள் (Password) கடவுச்சொல்லை கொடுக்கவும்.
பின்னர் உங்கள் கணிணியில் எந்த இடத்தில் சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பின்னர் Exec என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்கள் Google Docs அனைத்தும் தரவிறக்கி கொடுத்து விடும். 

இந்த மென்பொருள் மிகவும் நம்பகத்தன்மையானது.  அது மட்டுமில்லாமல் புதிய பதிப்பு வந்தால் புதுப்பித்துக் கொள்ளும் வசதி.  அத்துடன் கூகிளின் நிறுவனத்தில் இருந்து வந்தது என்றால் கேட்கவும் வேண்டுமா என்ன?

மென்பொருள் தரவிறக்க சுட்டி


.
இந்த பதிவு பிடித்திருந்தால் வோட்டு போடுங்கள் விளம்பரங்களி கிளிக் செய்து வளரச் செய்யுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அத்திவாசியமான இணையத்தளங்கள்

நண்பர்களே எல்லோரும் விருது வாங்கி  தங்களின் வலைப்பூவில்  நாங்களும் விருது வாங்கிட்டோம் என்று  இணைத்த போது மிகவும் ஆசைப்பட்டேன்.   நானும் இது போல ஒரு முறை விருது வாங்குவேன் என்று நினைத்தேன் அது நடந்தேறி விட்டது. நமது வால்பையன் கூட ஒரு நாள் சாட்டிங்கில் பேசும் போது கரப்பான்பூச்சி விருதுதான் இருக்கிறது என்றார். சரி நமக்கு கிடைக்கும் போது கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு விட்டுவிட்டேன்.  இன்று காலை மெயிலை திறந்தல் நமது வேலனின் மெயில் தான் முதலில் கண்ணில் பட்டது.  என்னையும் சக நண்பர்கள் பதிவின் வரிசையில் சேர்த்து எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கியிருக்கிறார். அவர்கட்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி அவர் விருது அறிவித்த பதிவு சுட்டி என்னுடன் விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  அத்துடன் புதுமையாக திரட்டிகளுக்கும் விருது வழங்கி கெளரவித்துள்ளார் நண்பர் வேலன் அவர்கள் அவருடைய செய்கை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.  இதுவரை யாரும் யோசிக்காத ஒரு விஷயத்தை செய்துள்ளார் வாழ்த்துக்கள்.  என்னுடைய விருது வலது பக்கத்தில் மாட்டி வைத்திருக்கிறேன் பாருங்கள்.
 
இனி விஷயத்திற்கு வருவோம்.
நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பிரிட்ஜ், தொலைக்காட்சி, கணிணி, கணிணி உதிரிபாகங்கள்,  செல்பேசி,  இது மட்டுமல்லாமல் நிறைய பொருட்கள்ளை வாங்கும் பொழுது மட்டுமே அந்த பொருட்களின் கையேடுவை  (Guide), படித்திருப்போம் (அ) பார்த்திருப்போம். பிறகு அதை மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுவோம். அது போன்று பொருட்களின் கையேடுகளை முடிந்தால் உடனே உங்கள் இணையத்தில் சென்று அந்த நிறுவனத்தின் நீங்கள் வாங்கிய பொருளின் கையேடு தரவிறக்கிக் கொண்டால் மிக்க நலமாக இருக்கும் பின்னர் உபயோகமாக இருக்கும்.  சில நாட்கள் ஆகிவிட்டது அந்த நிறுவனத்தில் அந்த கையேடு கிடைக்க வில்லை என்றால் இந்த வலைத்தளத்தில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம். இங்கு அனைத்து கையேடுகளும் கிடைக்கிறது. சென்று பாருங்கள் பிறகு சொல்லுங்கள் .
வலைத்தளச் சுட்டி 

உங்கள் கணிணியில் உள்ள கோப்புகள், புகைப்படங்கள், யுட்யூப் வீடியோக்கள், யாகூ பிளிக்கர், இணைய லிங்குகள், கூகிள் மேப்,  நிகழ்ச்சி நிரல்கள், ஆகியவற்றை நேரடியாக இணையத்தளத்தில் சேமிக்க இந்த இணையத்தளம் மிகவும் உபயோகமாக இருக்கும். அத்துடன் 10ஜிபி அளவு இடம் தருகிறார்கள்.   வலைத்தள சுட்டி.
உங்கள் பயோடேட்டா,  ரெஸ்யூம், (Biodata, Resume) போன்றவற்றை எளிதாக அழகாக உருவாக்க இந்த தளங்கள் மிகவும் உதவியாக இருக்கும். இது போன்ற என்னுடைய பழைய பதிவு சுட்டி
புதிய சுட்டிகள் கீழே
இதில் மேலே சுட்டி இரண்டில் மட்டும் மூன்று பிரிவு வைத்திருக்கிறார்கள், புதியதாக வேலை தேடுபவர்கள், வேலையில் நீண்ட அனுபவத்துடன் வேலை தேடுபவர்கள், வேலையில் குறைந்த அனுபவம் கொண்ட வேலை தேடுபவர்கள் என்று தனித்தனி சுட்டிகள் கொடுத்துள்ளேன்.
புதியதாக வேலை தேடுபவர்கள்     - சுட்டி 
நீண்ட அனுபவம் உள்ளவர்கள்        - சுட்டி 
குறைந்த அனுபவம் உள்ளவர்கள்  - சுட்டி
குறிப்பு : இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் ஒட்டை தமிழிசிலும் தமிழர்ஸிலும் குத்த மறவாதீர்கள். மேலே கீழே உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து எங்களை வளரச் செய்யுங்கள். பிடித்தவர்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்யுங்கள் இதனால் அனைவரும் வெகுஜன மக்களிடம் சேரும் வாய்ப்புள்ளது. 




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஆர்கா உலாவிவின் சாகசங்கள்

நண்பர்களே எத்தனையோ உலாவிகள் வந்த போதும் நாம் நெருப்பு நரி உலாவியை விட்டு வந்ததில்லை. அதிலிருக்கும் சிறப்புகள் அப்படி.  அதுபோலவே இந்த உலாவி நெருப்பு நரியின் ஆடு - ஆன்களை  ஆதரிக்கிறது. பாப் அப் பிளாக்கர், டவுண்லோடு மேனஜர், புகைப்படங்களை நேரடியாக போல்டரில் சேமிக்கும் வசதி, செய்தியோடை படிக்கும் வசதி ஆகியவை இந்த உலாவியில் சில சிறப்பம்சங்கள்.  அத்துடன் கீழே இந்த உலாவி ஆதரிக்கும் நெருப்பு நரி ஆடு - ஆன்கள் சில கீழே கொடுத்துள்ளேன்.



ஆதரிக்கும் ஆடு - ஆன்கள் அணிவரிசை



இவ்வளவு செய்யும் இந்த உலாவியின் பெயர் Orca Browser

ஆர்கா உலாவி தரவிறக்கச் சுட்டி

பிங் தேடுபொறியில் தினம் ஒரு அற்புதமான உயர்தர புகைப்படம் மாற்றி கொண்டிருக்கிறார்கள். அதை தினமும் தானாக தரவிறக்க இந்த மென்பொருள் உதவி புரியும்.  சுட்டி

 
நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் உங்களுக்கு இந்த ஆடு - ஆன் மிகவும் உபயோகமாக இருக்கும்.  உங்கள் நெருப்பு நரி உலாவியில் ஒரமாக Status Barல் அமர்ந்து கொண்டு முப்பது விநாடி இடைவெளியில் உங்களுக்கு  அப்டேட் செய்யும் ஆடு - ஆன் தரவிறக்க சுட்டி 

 
 உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் தமிழிசில் ஒட்டும் மேலே விளம்பரத்தையும் கிளிக் செய்யுங்கள்


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை