புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புத்தாண்டில் எல்லோரும் எல்லாமும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இந்த தமிழ் புத்தாண்டில் இன்னும் நிறைய எழுத முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.  அதற்கு உங்கள் ஆதரவும் ஊக்கமும் தேவை


From New Year Greetings

» Read More...

மாற்று மென்பொருள் சுலபமாக் தேட எளிய வழி

நண்பர்களே விண்டோஸ் எக்ஸ்பியில் சில மென்பொருட்கள் நிறுவும் போது பார்த்தீர்களேயானால் .நெட் பிரேம்வொர்க் என்ற மென்பொருள் இல்லை அதனால் இந்த மென்பொருளை நிறுவ இயலாது என்று கூறிவிடும்.


இந்த மென்பொருளை ஆன்லைனில் அப்டேட் செய்தாலும் மிகவும் நேரம் எடுக்கும்.  ஆகையால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்லைனில் நிறுவக்கூடிய வகையில் தனி செட்டப் கோப்புகளாக கொடுக்கிறார்கள். இவற்றை தரவிறக்கி பயன்படுத்தாலாம்.

.நெட் பிரேம்வொர்க் 3.5  (64 பிட்& 32 பிட்கணணிகளில் நிறுவ) சுட்டி

இதற்கு சர்வீஸ் பேக் 1 சுட்டி

.நெட் பிரேம்வொர்க் 3.0  32பிட் சுட்டி
.நெட் பிரேம்வொர்க் 3.0  64பிட் சுட்டி

.நெட் பிரேம்வொர்க் 2.0  32பிட் சுட்டி
.நெட் பிரேம்வொர்க் 2.0  64பிட் சுட்டி


எந்த மென்பொருளுக்கும் மாற்று என்ற உண்டு.  அதனால் நிறைய பேர் இந்த மாற்று மென்பொருளையே பயன்படுத்துவர். ஏன் என்றால் உருவாக்கிய மென்பொருளைக்காட்டிலும் மாற்றாக உருவாக்கிய மென்பொருட்கள் எளிதாகவும் இலவசமாகவும் பயன்படக்கூடிய வகையில் இருக்கும்.



உதாரணம் மைரோசாப்ட் ஆபிஸ் முதலில் உருவாக்கப்பட்டது அதற்கு மாற்றாக சன் மைக்ரோசிஸ்டம் உருவாக்கிய ஒபன் ஆபிஸ்.


இது போன்ற மாற்று மென்பொருளை கண்டுபிடிக்க உதவும் தளம்தான் இந்த தளம் பெயரைபோன்றே இந்த தளம் வேலை செய்கிறது.  கண்டுபிடிக்க மட்டுமல்ல நேரடியாக அந்த மென்பொருள் தரவிறக்க சுட்டியும் தந்துவிடுகிறது.    சுட்டி
இந்த தளம் விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய இயங்குதள மென்பொருட்களையும் கண்டுபிடித்துத்தருகிறது.


உங்கள் கணணியில் எந்த மென்பொருள் அல்லது எந்த .exe கோப்புகள் இயங்கி கொண்டிருந்தாலும் அந்த கோப்பின் பெயரை இந்த தளத்தில் உள்ளீடு செய்தால் போதும் அதன் மென்பொருள் என்ன எதற்காக இயங்குகிறது என்று கூறி விடும்.  இணையதளத்தின் சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இந்தியாவில் மடிக்கணணி வாங்க

நண்பர்களே இந்தியாவில் மடிக்கணணி வாங்க விரும்புவோர் வாங்க கடைக்குச் செல்லும் முன் இந்த தளத்தைப் பார்த்து உங்களுக்கு விருப்பமானதை வாங்க செல்லலாம். இதில் உங்கள் பட்ஜெட், மடிக்கணணி எடை, ஸ்கிரின் சைஸ் கொடுத்தால் போதுமானது.   உங்களுக்கு தேவையான மாடல்களை அதுவே தேர்ந்தெடுத்துக் கூறும். அதுமட்டுமல்லாமல் மடிக்கணனிகளின் வித்தியாசத்தையங்களையும் பார்க்கலாம்.




இணையதளச்சுட்டி 

மலேசிய காவல்துறை நண்பர்கள் தடுத்து நிறுத்தி உங்களை கேள்வி கேட்டால் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாதவை குறித்த மென்புத்தகம் சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஜிமெயில் வழியாக படங்களை அனுப்பலாம்

நண்பர்களே கூகிள் நாள்தோறும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று ஜிமெயில் வைத்திருப்போர் மின்னஞ்சல் மூலம் படங்களை இணைத்து அனுப்பலாம்.  அதற்கு செய்ய வேண்டி வழிமுறைகள் கீழே

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கிணுள் நுழைந்து கொள்ளுங்கள்.

பின்னர் வலதுபக்கம் மூலையில் மேலே உள்ள மாதிரி இருக்கும் ஐகானை கிளிக் செய்யுங்கள்.



பின்னர் படத்தில் காட்டியுள்ளது போல் Enable கிளிக் செய்து



கீழே வாருங்கள் அதில் Save Changes என்று கிளிக் செய்து வெளியேறுங்கள்.



பின்னர் கம்போஸ் செய்தீர்கள் என்றால் இது போன்று தெரிய வரும். 



இந்த இடத்தை கிளிக் செய்தால் இது போன்று தெரியும்



அதில் உங்கள் கணணியில் இருந்தும் படத்தை தரவேற்றலாம். அல்லது இணையத்தில் உள்ள லிங்க்கையும் கொடுக்கலாம்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை