நண்பர்களே தொடர்ந்து பல வேலைகளின் நடுவே இந்த பதிவு எழுத காரணம் நம் நண்பர்களுக்கு புதிய மென்பொருள்களை அறிமுகப்படுத்த வேண்டும் அதன் மூலம் நம் தமிழ் மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே. ஆகையால் உங்கள் பெரும்ஆதரவை தர வேண்டுகிறோம். நன்றி
நண்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளிகள் தின வாழ்த்துக்கள்.
ஒரு ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர் இருந்தால் எவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா. இதோ இருக்கிறது ஒரு ப்ரோபஷனல் வீடியோ எடிட்டர். இதன் பெயர் ஏவிஎஸ் வீடியோ எடிட்டர்.
இதன் சிறப்பம்சங்கள்.
சுலபமாக ஒரு வீடியோவினை கட் செய்தல், இணைத்தல், பிரித்தல் மற்றும் தலைகீழ் வீடியோவினை திருப்புதல் (Rotate) செய்தல் போன்ற வேலையினை எளிதாக செய்ய முடியும்.
ஒரு வீடியோவினில் உள்ள ஒலி உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அந்த ஒலியை நீக்கி விட்டு உங்களுக்கு பிடித்த ஒலியினை சேர்க்கலாம்.
உங்களுடைய ஹேண்டிகேம் மற்றும் அனைத்து வீடியோவினையும் ஏற்றுக் கொள்ளும்.
HD மற்றும் Blue Ray வீடியோவினையும் எடிட் செய்ய முடியும்.
இது போல் பலவகையான வேலைகள் செய்யலாம்.
இது ஆதரிக்கும் கோப்பு வகைகள் அதிகமாக இருப்பதால் நேரடியாக இங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் ஆதரிக்கும் கோப்புகள் சுட்டி
இது விண்டோஸ் 7ம் ஆதரிக்கிறது.
தரவிறக்க
உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்ய ஷட்டவுண் செய்ய ஹைபர்னேட் செய்ய ஒவ்வொரு முறையும் ஸ்டார் மெனு கிளிக் செய்து பின்னர் ஷட்டவுன் ஐகான் செய்த பிறகு ஷட்டவுன் ஐகானை இன்னொரு முறை கிளிக் செய்தால் மட்டுமே ஷட் டவுன் ஆகும். இத்தனை கிளிக் பதில் ஒரு டபுள் கிளிக் செய்வதின் மூலம் ஷட்டவுன் மற்றும் ரீஸ்டார்ட், ஹைபர்னேட் செய்ய இந்த மென்பொருள் உதவும் உங்களுக்கு. சுட்டி
இந்த மென்பொருளின் அளவு வெறும் 556 கேபி மட்டுமே.
நேரம் பார்க்க இந்த மென்பொருள் இதில் வித்தியாசம் நாம் தரவிறக்கும் பொழுது எப்படி இருக்குமோ அது போல காட்டும். தரவிறக்க சுட்டி
இது விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ல் மட்டுமே வேலை செய்யும்.
டாட் நெட் நிறுவியிருக்க வேண்டும். டாட் நெட் தரவிறக்க சுட்டி
உபுண்டு புதிய பதிப்பு 10.4 இன்று அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்பட்டது. புதிய பதிப்பின் பெயர் Ubuntu 10.04 LTS (Lucid Lynx) இலவசமாக தரவிறக்க கீழே செல்லுங்கள்.
டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும் சுட்டி
நோட்புக் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும் சுட்டி
சர்வர் பதிப்பை தரவிறக்க இங்கு செல்லவும் சுட்டி
ஒரு பைசா இல்லாமல்இலவசமாக நம் வீட்டிற்கே உபுண்டு சிடி பெற்றிட இங்கு செல்லவும். சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...