இந்த பதிவு என்னுடைய 351வது பதிவு இதுவரை என்னை எழுத வைத்த என் குருநாதர் பிகேபி அவர்களுக்கும் அனைத்து பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் திரட்டிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி
நண்பர்களே கூகிள் டாக்ஸில் கோப்புகள் தரவேற்ற பிரவுஸரை திறந்து அதன் பிறகு கூகிள் டாக்ஸ் தளத்தில் நுழைந்து பிறகு நம் பெயர் கடவுச் சொல் கொடுத்த பிறகு Upload தேர்ந்தெடுத்த பின்னர்தான் நம் கோப்பை தரவேற்ற இயலும். அதற்கு பதில் இந்த மென்பொருளை தரவிறக்கி இந்த மென்பொருளில் உங்கள் கூகிள் நுழைவுப் பெயர் கடவுச்சொல் கொடுத்து விட்டு Upload அல்லது Drag & Drop முறையிலும் தரவேற்றுங்கள். இது நேரடியாக உங்கள் கோப்புகளை உங்கள் கூகிள் டாக்ஸில் தரவேற்றப்பட்டிருக்கும். மென்பொருள் சுட்டி
கூகிள் பிக்காசவில் இருந்து கோப்புகளை தரவிறக்க இந்த மென்பொருளில் அதனுடைய RSS Feed முகவரி கொடுத்தால் போதும் அந்த RSS Feedல் உள்ள புகைப்படங்களை தரவிறக்கி கொடுத்து விடும். மென்பொருள் சுட்டி இது மிகவும் எளிய வழி உங்களுக்கு.
இப்பொழுது கிரிக்கேட் சீசன் என்பதால் நம் தொலைக்காட்சியில் மிகவும் வோடாபோனின் ஜு ஜு வின் டெஸ்க்டாப் ஸ்கோர்கார்ட் மென்பொருள் இங்கே சுட்டி இதில் எந்த ஒரு பேட்ஸ் மேனாவது நான்கு ரன் அடித்தால் எழுந்து ஆடுவதும் அவுட் ஆனால் அழுவதும் மிகவும் கலக்கலாக இருக்கிறது.
ஒரே மாதிரி இரண்டு படங்கள் உங்கள் கணினியில் நிறைய உள்ளதா??? இதை எவ்வாறு கண்டுபிடித்து நீக்குவது அதற்கு இந்த மென்பொருள் உதவும் உங்களுக்கு. இந்த மென்பொருளின் அளவு வெறும் 656 கேபி மட்டுமே.
மேலுள்ள படத்தில் உள்ள மஞ்சள் கலரில் உள்ள போல்டர் ஐகானை தேர்ந்தெடுத்து எந்த போல்டரை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கொடுங்கள். பிறகு பக்கத்தில் உள்ள பச்சைக் கலர் ப்ளே பட்டனை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இப்பொழுது இரண்டும் ஒரேமாதிரி உள்ள புகைப்படங்கள் காட்டப்படும். அதில் தேவையானவை தேர்ந்தெடுத்துக் கொண்டு நீக்கி விடுங்கள் முடிந்தது. இனி உங்கள் கணினியில் ஒரே மாதிரியான இரண்டு புகைப்படங்கள் இருக்காது. மென்பொருள் சுட்டி
இவ்வளவு பயனுள்ள மென்பொருளை படித்து தரவிறக்கிய நீங்கள் எனக்காக ஒரு ஒட்டு போடமாட்டிங்களா என்ன??
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...