நண்பர்களே நம் கணிணியில் ஒரே மாதிரி கோப்புகள் நிறைய இருக்கும் உதாரணத்திற்கு ஒரு புகைப்படம் அதில் உள்ள பிக்ஸல் மற்றும் அளவு போன்றவை ஒன்றாக ஒன்று சி ட்ரைவிலும் இன்னொன்று மை டாக்குமென்ட்சிலும் இருந்தால் நம்மால் கண்டுபிடிக்க முடியாது இது போன்று ஏராளமான கோப்புகள் நாம் இரண்டு இடத்தில் சேமித்து வைத்திருப்போம் இதனால் வன்தட்டில் இடம்தான் அடைத்துக் கொள்ளுமே தவிர வேறு உபயோகம் இல்லை இது போன்று அனைத்து கோப்புகளையும் கண்டுபிடிக்க இந்த மென்பொருள் உங்களுக்காக
சுட்டி இதன் சிறப்பம்சங்கள் இதன் மூலம தேவையில்லாத கோப்பை நீக்கலாம். ஒரு குறிப்பிட்ட டிஸ்க் அல்லது போல்டருக்குள் தேட முடியும்.
கூகிள் நிறுவனத்தின் புதிய செயலி கூகிள் பஸ் (buzz) இதனுடைய சிறப்பம்சம் இது ஜிமெயில் உள்ளேயே இணைந்து இருப்பது சிறப்பாக இருக்கிறது. நீங்கள் உங்கள் ட்விட்டரில் ட்விட் செய்தால் இங்கும் தெரியுமாறு அமைக்கலாம். இந்த செயலி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட நிறுத்தி வைக்க முடியும். உங்கள் ஜிமெயில் கணக்கினை திறந்து நேரே கீழே சென்றால் அங்கு Turn off buzz என்று ஒரு லின்க் அதை அழுத்துங்கள் முடிந்தது. வேண்டும் என்றால் அதை மறுபடி அழுத்தினால் போதும்.
இதற்கான பயர்பாக்ஸ் உலாவி நீட்சி வெளிவந்துள்ளது அதை தரவிறக்க இங்கு செல்லுங்கள்
சுட்டி
கூகிள் குரோமிற்கான நீட்சி தரவிறக்க
சுட்டி
மிக சிறந்த வலை உலாவிகளில் ஒபராவிற்கு என்று ஒரு இடம் உண்டு. அந்த பிரவுசரில் ஒரு ஒன்பது கட்டங்கள் கொண்ட டேப் இருக்கும். அதில் நம் விரும்பும் இணையத்தளங்களின் பெயர்களை இட்டுக் கொள்ளலாம். அது நம் கணிணியில் மட்டுமே செயல்படும் வகையில் இருந்தது. இப்பொழுது அவர்கள் ஒரு தளம் தந்திருக்கிறார்கள் அதன் மூலம் அங்கு நம் ஒரு கணக்கினை திறந்து விட்டால் போதும் எங்கு சென்றால் நேரடியாக நம் தளத்தை அணுகலாம். ஒரு தடவை நீங்கள் கணக்கினை திறந்து விட்டால் அங்கு என்ன யூசர் நேம் கொடுத்திர்களோ அதனுடன் homepagestartup.com என்று சேர்த்தால் போதும். இனி உங்களுக்கு பிடித்த புக்மார்க்குகளை எங்கிருந்தாலும் அணுகலாம். உங்கள் நண்பர்களுடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.
http://.homepagestartup.com
இணையத்தள சுட்டி
மைக்ரோசாப்டிற்கு நிகரான திறந்த நிலை இலவச ஒபன் ஆபிஸ் 3.2 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது அதனை தரவிறக்க இங்கு செல்லுங்கள்
சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இன்றைய இணையத்தளங்கள் இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளை பாலியியல் தளங்களிலிருந்து பாதுகாப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. பாலியியல் இணையத் தளங்களிலிருந்து விடுவிக்க ஒரு முழுமையான மென்பொருள் அதுவும் இலவசமாக சட்ட ரீதியானது இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்
சுட்டி இதை கிளிக் செய்து தளத்தினுள் நுழையுங்கள் வலது பக்கம் Download K9 Today என்று ஒரு படம் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை கொடுத்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்க சுட்டி மற்றும் சட்டரீதியான லைசென்ஸ் கீ கிடைக்கும்.
இந்த மென்பொருளை நிறுவுவதும் மிகவும் சுலபம்
|
|
|
|
|
K9 Web Protection Invitation from Vadivelan R Dear ,
I found something you might want to try. It lets you filter out unwanted Internet sites like pornography, online gambling, violence, and other content.
It's K9 Web Protection, from Blue Coat Systems. I started using it, and I thought you might find it useful, too. It's free for personal use.
For a little Internet "peace of mind", click Get K9 Now and follow the instructions. The program downloads quickly (less than a minute) and is easy to install.
It's a great way to help protect your family
This message generated from the "Refer a Friend" form at http://www.k9webprotection.com.
|
| |
|
|
Copyright © 2008 Blue Coat Systems. All rights reserved. |
|
உபயோகித்து விட்டு உங்கள் கருத்தை பின்னூட்டத்திலும் மின்னஞ்சலிலும் தெரிவிக்கவும். உங்கள் ஊக்குமும் உற்சாகமும் மட்டுமே என்னை இன்னும் நிறைய மென்பொருட்களை அறிமுகப்படுத்த ஊக்குவிக்கும். உங்கள் பின்னூட்டமே எனக்கு மிக சிறந்த உற்சாக டானிக். மற்றவர்களுக்கும் தெரிவியுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே மைக்ரோசாப்ட் வேர்டில் நேரடியாக ஒரு வார்த்தையை Capital Letter & Small Letter ஆக மாற்ற முதலில் அந்த வார்த்யை தேர்ந்தெடுத்து ஷிப்ட் + எப்3 ( Shift + F3 ) அழுத்தினால் போதும் இது போல ஒரு பத்தி ஒரு பக்கத்தையும் மாற்ற உபயோகப்படுத்தலாம்.
உங்கள் கணிணியில் அன்றைய வானிலையை தெரிந்து கொள்ள என்ன செய்வோம். கூகிளில் தேடுவொம் பிறகு அதில் எந்த நாட்டில் எந்த மாநிலத்தில் என்று தேர்வு செய்வோம். பிறகுதான் நமக்கு அன்றைய வானிலை தெரிய வரும். இதற்கு இந்த சுட்டியை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.
சுட்டி இது எப்படி செயல்படுகிறது என்றால் உங்களுடைய ஐபியை அடிப்படையாக வைத்து நீங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்தின் வானிலையை காட்டுகிறது. உங்களுக்கு குறிப்பிட்ட இடத்தின் வானிலை வேண்டுமானாலும் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அன்றைய இரவு எப்படி இருக்கும் என்றும் இந்த தளம் மேகமூட்டம் அதிகமாக இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா என்றும் தெரிவிக்கிறது. இந்த தளம் செல்ல
சுட்டி
நீங்கள் ஒரு வீடியோ கோப்பு தரவிறக்கும் பொழுது அதை பார்க்க முடியாது அது முழுவதும் தரவிறக்கிய பிறகே பார்க்க முடியும். நீங்கள் தரவிறக்கும் வீடியோ சரியானதுதான என்று தரவிறக்கும் பொழுதே ப்ளே செய்து பார்க்க இந்த மென்பொருள் உபயோகப்படுகிறது.
சுட்டி
இந்த மென்பொருள் மூலம் வீடியோ தரவிறக்கும் பொழுது பார்ப்பதால் தரவிறக்கும் செயல் பாதிக்கப்படாது.
இந்த மென்பொருள் P2P மற்றும் FTP தளங்களில் சோதிக்கப்பட்டது.
இது முழுவதும் இலவசம்.
ஏமாற்றும் அடாவடிக் கும்பல்
இதை என்ன வென்று சொல்வது இதற்கு ஒரு பதில் எங்கிருந்து கிடைக்கும். இதை செய்ய போவது யார்? எங்கு சொல்வது? நண்பர்களே ஐந்தாம் தேதி காலை வெளியூர் செல்வதற்காக சென்னை சிஎம்பிடி CMBT Bus Stand வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கொடுத்த சீட்டு.நிறைய பொது மக்கள் இது போல ஏமாற்றம் அடைகின்றனர். அத்துடன் நேரம் அதிகமான காசு மட்டும் வாங்குகிறார்கள். அதற்கு சீட்டு கொடுப்பதில்லை இதற்கெலாம். யார் காரணம். அத்துடன் இந்த சீட்டில் குத்தகை எடுத்தவர் பெயரும் இல்லை அப்படியானால் இதை அரசே நடத்துகிறதா? அப்படி என்றால் இதனுடைய அரசாங்கத்திற்கு செல்கிறதா? இதுவரை ட்ராபிக் ராமசாமி கண்களில் இது தெரியவில்லை அவருக்கு தெரிந்திருந்தால் ஒரு பொது மன நல வழக்கு போட்டிருப்பார்????? பார்ப்போம் நிறைய நல்ல விஷயங்கள் பதிவர்களிடம் இருந்து நடப்பதால் இதற்கு ஒரு வழி காட்டுங்கள் பதிவர்களிடம் இருந்து என்ன பதில் வருகிறது. உங்கள் பதிலில்தான் இதை எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று யோசிப்பேன்....
முடிந்தால் ஒரு பிரதி எடுத்து உங்கள் வலைப்பதிவில் பிரசுரிக்கவும்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நீங்கள் ஆன்லைனில் வீடியோ பார்க்கம் பொழுது நின்று நின்று வரும் ஏன் என்றால் நம் கணிணி இணைப்பு வேகம் மிகவும் மெதுவாக இருப்பதால் நமக்கு இது போல் வரும். அதற்கு என்ன செய்வது நாம் இந்த தளம் செல்லுங்கள்.
சுட்டி இந்த தளத்தில் அவர்கள் கொடுக்கும் மென்பொருளை எவ்வாறு நிறுவுவது என்று கூறுவார்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் இணைய இணைப்பு வேகத்தை நன்றாக வேகமாக இருகும். நான் என் கணிணியில் சோதித்ததில் என் இணைய இணைப்பு வேகம் 8 எம்பிஎஸ் ஆனால் தரவிறக்கும் வேகம் 5 எம்பிஎஸ் ஆக இருந்தது இந்த மென்பொருள் நிறுவிய பிறகு தரவிறக்கும் வேகம் 7 எம்பிஎஸ் ஆக மாறியது. நீங்களும் முயற்சித்து பாருங்கள் ஏன் என்றால் இப்பொழுதுதான் முழு நீள இந்தித் திரைப்படங்கள் யூட்யூபில் கிடைக்கின்றதே..
நமக்கு ஆடியோ ப்ளேயர் என்றவுடன் விண் ஆம்ப் என்பது நினைவுக்கு வரும் அந்த அளவுக்கு அது அனைவரின் மனதில் இடம் பிடித்துள்ளது. அதை போல நிறைய ஆடியோ ப்ளேயர் வந்தாலும் சில நாடுகளில் மிகவும் பிரபலமான விண் ஆம்பிற்கு மாற்று ஆடியோ ப்ளேயர்கள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். கீழுள்ள அனைத்தும் MP3, AAC/M4A, OGG, WMA*, MPC, APE, FLAC, WAV. பார்மெட்டுகள் ப்ளே செய்யக்க கூடியவை.
மீடியா மன்கி (Media Monkey)
குயிக் எசன்டல் மீடிய ப்ளேயர் (Quick Essential Media Player)
சாங்பேர்ட் (Song Bird)
ம்யூசிக் க்யூப் (Music Cube)
அம்ராக் (Amrok)
பூபார் 2000 (Foobar 200)
எக்எஸ்எம் ப்ளே (XM Play)
பில்லி (Billi) (இது பில்லி சூனியம் வகையறா இல்லை)
சோனிக்யு ப்ளேயர் (Sonique Player)
கூகிள் சிறு செய்தி
கூகிள் தான் அளித்து வந்த இதுவரை பழைய வலை உலாவிகளுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்ள போகிறது. இனி கூகிளின் அனைத்து அப்ளிகேசன்களும் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 +, நெருப்பு நரி உலாவி 3.0 +, கூகிள் குரோம் 4.0+, சபாரி 3.0+ இதற்கு மட்டுமே ஆதரவு அளிக்கும். இதனால் பழைய வலைஉலாவிகளில் அனைவரும் விரைவில் தங்களுடைய கணிணியில் உள்ள புதிய வலை உலாவிகளுக்கு மாறுவது உள்ளது.
படிக்கும் நண்பர்கள் சில பல விளம்பரங்களை கிளிக் செய்து உதவி செய்யுங்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...