நண்பர்களே இணையத்தில் எத்தனை முறை வீடியோ பார்த்திருப்போம். ஆனால் வீடியோ பார்க்கும் போது உங்கள் வேலைகளை செய்ய இயலாது. ஏதாவது ஒன்றுதான் இயலும் ஒன்று வீடியோ பார்க்க வேண்டும் அல்லது வேலை செய்ய வேண்டும். நீங்கள் வீடியோ பார்த்துக் கொண்டு உங்கள் வேலைகளையும் செய்ய ஆசைப்படுகிறீர்களா?????
உங்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். மென்பொருள் தரவிறக்க
சுட்டி அது மட்டுமில்லை இந்த மென்பொருள் மூலம் இணைய வீடியோ மட்டுமில்லாமல் நீங்கள் உங்கள் கணிணியில் சேமித்து வைத்திருக்கும் வீடியோக்களையும் பார்க்கலாம்..
இந்த மென்பொருளை நிறுவி விட்டு நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவின் லிங்க்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள் பின்னர் நேரடியாக படம் பார்க்க இயலும் அந்த நேரத்தில் நீங்கள் எக்ஸல், வேர்ட், எந்த கோப்புகள் வேண்டுமோ திறந்து வேலை செய்யுங்கள்.
மேலும் தெரிந்து கொள்ள மென்பொருளின் இணையத்தளம்
சுட்டி
உங்கள் ஒட்டுக்களை தமிழிசிலும் தமிழ் மணத்திலும் குத்துங்கள். அப்படியே கீழே மேலே உள்ள விளம்பரங்களையும் கிளிக் செய்து எங்களுக்கு ஒரு காபி குடிக்க உதவி செய்யுங்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே உங்கள் கணணியில் உள்ள ப்ரோஸரையும் வீடியோ கிராபிக்ஸ் கார்டையும் சோதிக்க ஒரு அருமையான மென்பொருள் இங்கே சுட்டி
மென்பொருள் பெயர் : மேக்ஸான் சினி பெஞ்ச்
உங்கள் நண்பர்களின் கம்ப்யுட்டரில் விளையாடிப் பார்க்க உங்களுக்கு சிறு சிறு விளையாட்டுக்கள் இங்கே.
ஃபேக் பார்மெட்
இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணிணி அல்லது நண்பருடைய வன்தட்டை பார்மேட் செய்வது போல ஏமாற்றலாம்.
பேக் டெலிட்
இதுவும் கோப்புகளை அழிப்பது போல பாவ்லா காட்டுமே தவிர அழிக்காது நண்பர்களை கலாய்க்க மிகவும் பயன்தரும்.
விண்டோஸ் 7 உபயோகிப்பவர்களுக்கான ஜிமெயில் நோட்டிபையர் வெளியிடப்பட்டுள்ளது தரவிறக்க
சுட்டி
நாம் ஒவ்வொரு முறையும் போல்டர் கிரியேட் செய்ய திரையில் வெற்றிடத்தில் வலது கிளிக் செய்து அதில் New தேர்வு செய்து பின்னர் New Folder என்று கிரியேட் செய்வோம். இது ஒரு போல்டர் இரண்டு போல்டர் செய்வதனால் சரி இதே பத்து பதினைந்து போல்டர் வேண்டுமென்றால் என்ன செய்வது. அதற்கு சுலபமான வழி உண்டு விண்டோஸில்.
அதற்கு முதலில் Start மெனு கிளிக் செய்து பின்னர் Run தேர்வு செய்யவும். பின்னர் அந்த பெட்டியில் CMD என்று டைப் செய்து எண்டர் தட்டவும்.
பின்னர் CD desktop என்று டைப் செய்து என்டர் தட்டவும்
பின்னர் MKDIR example1 example2 example3 example4 example5 example6 example7 என்று டைப் செய்து எண்டர் தட்டவும். பின்னர் உங்கள் டெஸ்க்டாபில் பார்த்தால் நீங்கள் கிரியேட் செய்த போல்டர்கள் அமர்ந்திருக்கும்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே ஒவ்வொரு முறையும் மைக்ரோசாப்டின் எக்ஸல் மற்றும் வேர்ட் உபயோகிக்கும் போதும் நாம் சில குறுக்கு வழிகளை (ShortCut Keys) உபயோகிப்போம். நமக்கு தெரிந்தது சில வழிகள் மட்டுமே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய வழிகளை இங்கு பட்டியலிட்டுள்ளனர்கள். அதுமட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் மென்பொருட்கள், கூகிள், நெருப்பு நரி உலாவி, அடோப் போட்டோஷாப் அனைத்து வகையான விண்டோஸ் மென்பொருட்களுக்கும் இவர்கள் குறுக்கு வழிகள் (ShortCut Keys) தேடித் தருகின்றனர். விண்டோஸ் மட்டுமல்லாமல் மேக் (Mac Computer), லினக்ஸ் (Linux) போன்றவைகளுக்கும் தேடித் தருகின்றனர். இன்னும் நிறைய தருவார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் அனைத்திற்கும் ஒரு டேட்டாபேஸ் (DataBase) உருவாகுகிறார்கள். வலைத்தள சுட்டி
சட்டரீதியான ரெகவரி மென்பொருள் உங்களுக்காக இந்த மென்பொருள் மூலம் உங்கள் கோப்புகள் எதுவானாலும் பேக் - அப் எடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் பேக் - அப் எடுக்கும் கோப்புகளை நேரடியாக சிடி, டிவிடி, டேப் போன்றவற்றில் பதியலாம். பேக் - அப் எடுக்கப்படும் கோப்புகள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இவர்கள் பாதுகாப்புக்கு ராணுவத்தில் உபயோகப்படுத்தப்படும் வழிமுறையான 256 AES (Advanced Encryption Standard) என்ற முறைய பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிய காரியமே
கீழே கொடுக்கும் சுட்டியை முதலில் சொடுக்குங்கள்.
சுட்டி பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளது போல ஒரு வலைத்தளம் திறக்கும். அதில் சிகப்பு வண்ண அம்பிற்கு நேரே உள்ள பெட்டியில் உங்கள் பெயர் கொடுக்கவும் (இங்கு கொடுக்கப்படும் பெயர் உங்களுக்கான ரெஜிஸ்ட்ரேசன் பெயர் ஆகும்). பின்னர் பச்சை அம்பிற்கு நேரே உங்களின் உண்மையான மெயில் முகவரி கொடுக்கவும். பின்னர் சிகப்பு வட்டம் உள்ள பெட்டியை டிக் செய்து Submit கொடுக்கவும். பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு East Technologies Support என்ற இடத்தில் இருந்து ஒரு அஞ்சல் வந்திருக்கும். அந்த அஞ்சலை திறந்து அவர்கள் கொடுத்துள்ள முகவரியை கிளிக் செய்தால் உங்களுக்கு நீங்கள் கொடுத்த பெயர் மற்றும் ரெஜிஸ்ட்ரேசன் கீ (Registration Key) கிடைக்கும். தரவிறக்க சுட்டியும் கிடைக்கும். இரண்டாவாதாக உள்ள படத்தை பார்க்கவும்.
அனைவரும் தமிழிசில் ஒட்டுக்களையும் கீழே மற்றும் மேலே உள்ள விளம்பரங்களை கிளிக் செய்ய வேண்டுகிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நாம் பிடிஎப் பார்மெட்டில் ஒரு கோப்பு வைத்திருப்போம் அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் அத்துடன் ஒரு படமும் இணைக்க வேண்டும் எனில் அதை வேர்ட் கோப்பாக மாற்ற வேண்டும். இப்பொழுது வருகிற அனத்து பிடிஎப்பிலிருந்து வேர்ட்க்கு மாற்றும் கன்வெர்ட்டர்கள் அனைத்தும் காசு கொடுத்து வாங்கியாக வேண்டும். அப்படி இல்லைஎன்றால் இலவச பதிப்பு தரவிறக்கி பயன்படுத்தினால் வெறும் 2 அல்லது 3 பக்கங்கள் மட்டுமே வேர்டுக்கு மாற்றித் தரும் அதனால் நமக்கு பயன் ஏதும் இல்லை. ஆனால் AnyBizSoft நிறுவனத்தினர் சட்டரீதியாக அனைவருக்கும் பிடிஎப்லிருந்து வேர்டுக்கும் மாற்றிக் கொடுக்கும் மென்பொருளை தருகிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று உங்களுடைய சரியான மின்னஞ்சல் முகவரி தரவேண்டியது.
முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள்
சுட்டி
பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளபடி சிகப்பு வண்ணம் அம்பு பிரகாரம் முதலில் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
பின்னர் பச்சை அம்பு உள்ள Get KeyCode என்ற பொத்தானை தேர்வு செய்தால் கீழே உள்ள படம் போல் உங்களுக்கு இணையத்தளம் கிடைக்கும். அதில் முதலில் மின்னஞ்சல் முகவரி பின்னர் உங்கள் பெயர் கொடுத்தால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மென்பொருளின் Key கொடுத்துவிடுவார்கள்.
இந்த மென்பொருளை நிறுவிய பிறகு இந்த Key கொண்டு நீங்கள் ரெஜிஸ்டர் செய்தால் போதுமானது.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...