நண்பர்களே எத்தனையோ உலாவிகள் வந்த போதும் நாம் நெருப்பு நரி உலாவியை விட்டு வந்ததில்லை. அதிலிருக்கும் சிறப்புகள் அப்படி. அதுபோலவே இந்த உலாவி நெருப்பு நரியின் ஆடு - ஆன்களை ஆதரிக்கிறது. பாப் அப் பிளாக்கர், டவுண்லோடு மேனஜர், புகைப்படங்களை நேரடியாக போல்டரில் சேமிக்கும் வசதி, செய்தியோடை படிக்கும் வசதி ஆகியவை இந்த உலாவியில் சில சிறப்பம்சங்கள். அத்துடன் கீழே இந்த உலாவி ஆதரிக்கும் நெருப்பு நரி ஆடு - ஆன்கள் சில கீழே கொடுத்துள்ளேன்.
பிங் தேடுபொறியில் தினம் ஒரு அற்புதமான உயர்தர புகைப்படம் மாற்றி கொண்டிருக்கிறார்கள். அதை தினமும் தானாக தரவிறக்க இந்த மென்பொருள் உதவி புரியும். சுட்டி
நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் உங்களுக்கு இந்த ஆடு - ஆன் மிகவும் உபயோகமாக இருக்கும். உங்கள் நெருப்பு நரி உலாவியில் ஒரமாக Status Barல் அமர்ந்து கொண்டு முப்பது விநாடி இடைவெளியில் உங்களுக்கு அப்டேட் செய்யும் ஆடு - ஆன் தரவிறக்க சுட்டி
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் தமிழிசில் ஒட்டும் மேலே விளம்பரத்தையும் கிளிக் செய்யுங்கள்
நண்பர்களே தினம் ஒரு மென்பொருள் படங்களை தரவிறக்கி வைத்து விடுவோம். பின்னர் அதை நீக்க மறந்து விட்டு பிறகு பின்னர் ஹார்ட் டிஸ்க்கில் இடம் இல்லை என்று மிகவும் அல்லாடுவோம். எந்த போல்டரில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறது என்று நாம் தேடுவதற்குள் நாம் ஒரு வழியாகிவிடுவோம். அதற்கு பதில் இந்த இலவச மென்பொருளை உபயோகபடுத்தலாம். இதன் பெயர் Space Sniffer. உங்கள் கணிணியில் நிறுவ தேவையில்லை இந்த மென்பொருளை நேரடியாக இயக்கலாம். இதில் நீங்கள் ஒரு போல்டரை டபுள் கிளிக் செய்தால் Zoom செய்து காட்டும். இந்த மென்பொருளின் தரவிறக்க சுட்டி
மென்பொருளின் இயக்கம் குறித்த வீடியோ
நீங்கள் கூகிளின் பிகாஸா உபயோகிப்பவர் என்றால் இதை முயற்சித்து பாருங்கள். கூகிள் பிகாஸா திறந்து வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில்
Ctrl + Shift + Y இந்த கீகளை அழுத்தி பிடியுங்கள் பிறகு பாருங்கள். உங்கள் பிகாஸிவில் Deddy Bear தோன்ற ஆரம்பிக்கும். இதற்கு பெயர்தான் Easter Egg.
நண்பர்களே நாம் வீட்டில் சில நேரங்களில் சில பதிவுகளை படிக்கும் போது யாராவது வந்து பார்த்துவிடுவார்களோ என்ற பயத்துடனே படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்து விட்டால் உடனே அந்த விண்டோவை மூடி விடுவார்கள் (அல்லது) கணிணியை அணைத்துவிடுவார்கள். அதற்குப் பதில் ஒரே கிளிக்கில் வேற டெஸ்க்டாப் திறந்தால் எப்படி இருக்கும். என்று நினைப்பவர்களுக்காக இந்த மென்பொருள் தரவிறக்க சுட்டி
சில நேரங்கள் சில வலைத்தளங்களை திறக்கும் போது மிகவும் மெதுவாக திறக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதை தவிர்க்க உங்களுக்கு அந்த வலைத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் திறக்க வேண்டாம் என்று நினைத்தால் சுலபமாக செய்யலாம். அத்துடன் டயல் அப் இணைய இணைப்பு உபயோகபடுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
நெருப்பு நரி உலாவி உபயோகிக்கும் பயனாளர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.
நெருப்பு நரி உலாவி திறந்து அதில் Tools கிளிக் செய்து பின்னர் அதில் Options தேர்வு செய்து அதில் Content என்ற டேபை தேர்வு செய்யுங்கள். அதில் Load Images Automatically என்பதில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பவர்கள் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 ஆம் பதிப்புக்கு மேல்
இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து அதில் Tools கிளிக் செய்து அதனுள் Internet Options தேர்வு செய்து பின்னர் Advanced Tab என்பதனை தேர்வு செய்யுங்கள் கீழே கட்டத்தில் Multimedia என்பதற்கு கீழே Show Pictures அதன் நேரே பாக்ஸில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.
ஆப்பிள் சபாரி உலாவி உபயோகிப்பவர்கள்
சபாரி திறந்து வைத்துக் கொள்ளுங்கள் மெனு கிளிக் செய்து அதில் Preferences தேர்வு செய்யுங்கள் பின்னர் மேலே Appearance என்பதனை கிளிக் செய்யுங்கள் அதில் Display images when the page opens. என்பதனை டிக் எடுத்து விடுங்கள் முடிந்தது பின்னரொ OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.
இனி உங்கள் உலாவியில் எந்த வலைத்தளம் திறந்தாலும் படங்கள் மட்டும் தோன்றாது.