நண்பர்களே நாம் நிறைய யுஎஸ்பி ட்ரைவ் உபயோகித்து இருப்போம். உபயோகிக்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் வெளியே எடுக்கும் பொது சரியான முறையை கையாள்வது கிடையவே கிடையாது. யுஎஸ்பியை நிறுத்தாமல் எடுப்பது போன்ற செய்கைகளால் யுஎஸ்பி பொருட்கள் நீண்ட நாட்களுக்கு உழைப்பதில்லை. இதற்காக சில நேரங்களில் விண்டோஸில் கூட யுஎஸ்பியை நிறுத்த முடிவதில்லை. காரணம் அதனுடைய டிஎல்எல் கோப்புகள் அப்படி. இது ஒரு திறந்த மூலப்பொருளும் கூட. அதற்கு ஒரு தீர்வு இந்த மென்பொருள். எஜக்ட் யுஎஸ்பி
இது குறித்த ஒரு காணொளி சுட்டி
மென்பொருள் தரவிறக்கம் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே நாம் இணையத்தளங்களில் ரெஜிஸ்டர் செய்யும் பொழுது நாம் கொடுக்கும் நுழைவு பெயர் இல்லை என அழிச்சாட்டியம் செய்யும் ஏன் என்றால் நாம் கொடுக்கும் நுழைவுப் பெயர் நமக்கு முன்பே பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதனால்தான் இந்த மாதிரி நாம் கொடுக்கும் நுழைவுப்பெயர்கள் ஏற்றுக் கொள்ளாமால் வேற கொடுக்க சொல்லும் இதற்கு ஒரு தீர்வு நீங்கள் கொடுக்கும் நுழைவுப்பெயர் அந்ததளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். இதில் முக்கியமான தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. சுட்டி
கூகிள் நிறுவனம் தன் தளத்தில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்று தெரிந்து கொள்வதற்காக அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் என்று ஒரு வலைத்தளம் ஆரம்பித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு நிறைய பேருக்கு ஜிமெயில் வேலை செய்யாமல் தொந்தரவு செய்தது. அதற்காக காசு கொடுத்து ஜிமெயில் வாங்கியவர்களுக்கு நஷ்ட ஈடு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...
நண்பர்களே இதுபோல் விண்டோஸில் எக்ஸ்ப்ளோரரில் வேலை செய்து கொண்டிருக்கும் எர்ரர் வந்து எக்ஸ்ப்ளோரர் மூடி விடும். இந்த நேரத்தில் நமக்கு உதவ மாற்று மென்பொருட்கள் ஐந்தை கீழே கொடுத்துள்ளேன்.
» Read More...
நண்பர்களே சிலருடைய ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்தால் ஏழு அல்லது எட்டு நொடிகள் கழித்துதான் ஸ்டார்ட் மெனுவே வரும். இதை ரெஜிஸ்டரியில் மாறுதல் செய்தால் வேகமாக வருமாறு அமைக்கலாம்.
முதலில் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து ரன் காமண்டு தேர்வு செய்யவும்.
பின்னர் அதில் regedit என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
பின்னர் HKEY_CURRENT_USER ல் இடது புறம் உள்ள + மார்க் கிளிக் செய்யவும்.
பின்னர் கீழே CONTROL PANEL ல் இடது புறம் உள்ள + மார்க் கிளிக் செய்யவும்.
அதன் கீழே Desktop கிளிக் செய்து வலதுபுறம் உள்ள பாக்ஸில் MenuShowDelay என்ற இடத்தில் டபுள் கிளிக் செய்யவும். அதில் 400 என்று இருக்கும். அதை 0 என்று மாற்றி வெளியேறவும்.
பின்னர் பாருங்கள் உங்கள் ஸ்டார்ட் மெனு எவ்வளவு வேகமாக இயங்குகிறது என்று.
எச்சரிக்கை : ரெஜிஸ்டரியை திருத்தும் முன் ரெஜிஸ்டரி பேக் - அப் செய்து கொள்ளவும்.
ரெஜிஸ்டரி எப்படி பேக் - அப் செய்வது எளிய வழி கீழே
முதலில் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து ரன் காமண்டு தேர்வு செய்யவும்.
பின்னர் அதில் regedit என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
பின்னர் File மெனுவை கிளிக் செய்து Export என்பதை தேர்வு செய்யவும். எந்த இடத்தில் சேமிக்கவிருக்கிறிர்களோ அதை தேர்வு செய்து சேமிக்கவும்.
நன்றி
» Read More...