அதற்கு உங்களுக்கு தேவையான பொருட்கள்
ஒரு பருத்தி துணி / பஞ்சு
சிறிது தூய நீர்
சிறிது பல் விளக்கும் பற்பசை (Toothpaste)
சிறிது ஆல்ஹகால்
முதலில் கீறல் விழுந்த சிடி / டிவிடியை பருத்தி துணியால் துடைத்துக் கொள்ளவும்.
சில நேரங்களில் பருத்தித்துணி வைத்து சில சிடிக்களில் தேவையில்லாத கறைகள் இருக்கும் அதற்கு சிறிது ஆல்ஹகால் வைத்து துடைத்துக் கொள்ளவும்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சிறிது பற்பசையை எடுத்து எங்கெங்கு கீறல் உள்ளதோ அங்கெல்லாம் தடவுங்கள் பின்னர் பருத்தி துணி கொண்டு அப்படியே துடைத்து எடுக்கவும். பின்னர் தண்ணீர் கொண்டு துடைத்து விடுங்கள். ஈரம் இல்லாமல் துடைத்து விடுதல் மிகவும் முக்கியம்.
சிறிது நேரம் கழித்து சிடி டிரைவில் இட்டு மென்பொருட்கள் கொண்டு மீட்டெடுக்க முயன்று பாருங்கள்.
பிடிஎப் கோப்பிலிருந்து டெக்ஸ்டை பிரித்தெடுக்க
சில பிடிஎப் கோப்புகள் Copy Protected உடன் வரும். அந்த மாதிரி பிடிஎப் கோப்புகளில் இருந்து எந்த ஒரு வார்த்தையையும் காப்பி செய்து டெக்ஸ்டாக எடுக்க இயலாது.
அதற்கு இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருள் மூலம் பாதுகாக்கப்பட்ட பிடிஎப் கோப்புகளில் இருந்து டெக்ஸ்டை மட்டும் தனியாக உருவி தந்து விடும்.
(குறிப்பு இந்த மென்பொருள் ஆங்கில பிடிஎப் கோப்புகளுக்கு மட்டுமே)
மென்பொருள் தரவிறக்க சுட்டி
ஆகஸ்ட் 15 2009, அன்று நாடு முழுவதும் அறுபத்திரண்டவாது சுதந்திர தினம் கொண்டாடப் படுகின்றது. (முதலில் 52 என்று தவறாக எழுதியிருந்தேன் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி)
இந் நேரத்தில் சீன வெளியுறவு வல்லுநர் ஒருவர் சீன இணையத்தளத்தில் இந்தியா ஜாதி மாநிலமாக பிரிந்திருப்பதை தனிநாடாக ஆக்க வேண்டும் என்றும் நம் நாட்டை இருபது துண்டுகளாக பிரிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார். அப்பொழுதுதான் சீனாஆசிய பகுதியில் வலுவாக இருக்க முடியும் என்று கூறியிருக்கின்றார். இது போல் பேசி வருபவர்களுக்கு நாம் நம் உழைப்பின் மூலம் நம் பாரத நாட்டை வளம் பெற வைத்து தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...