நண்பர்களே மே 13ஆம் தேதி அம்மாக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அம்மாக்கள்
தினத்தினை கொண்டாடும் வகையில் வொன்ட்ர்ஷேர் நிறுவனம் புதியதாக ஒரு சலுகை
தந்திருக்கிறது. அதுதான் வொன்டர்ஷேர் நிறுவனத்தின் Wondershare Slideshow
Builder Standard இந்த மென்பொருளை இலவசமாக தருகிறது. இதை நீங்கள் பெறுவது
மிகவும் சுலபமான வழியாகும்.
இந்த சுட்டியை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் சுட்டி
அந்த
பக்கத்தில் கடைசியில் Get Keycode என்ற ஒரு வாசகம் இருக்கும் அதை கிளிக்
செய்தால் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி குடுத்தால் போதுமானது.
உங்கள்
மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருள் தரவிறக்க சுட்டியும். மென்பொருளை
நிறுவிய பிறகு தேவையான லைசென்ஸ் கீ கோடும் அனுப்பியிருப்பார்கள்.
இனி உங்களுக்கான Wondershare Slideshow Builder Standard முற்றிலும் இலவசமாக பயன்படுத்தாலாம்.
இந்த மென்பொருளின் விலை $49.95 இந்திய மதிப்பில் 2500 ரூபாய் மதிப்புள்ளது. இந்த மென்பொருளின் அடுத்த வெர்சன் Wondershare Slideshow Builder Deluxe ஆகும். இந்த மென்பொருளை நிறுவிய பிறகு $12.95 மட்டும் செலுத்தினால் போதுமானது. இதை உங்களுக்கு வேண்டுமானால் மேம்படுத்திக் கொள்ளலாம். தேவையில்லை எனில் விட்டு விடலாம்.
இந்த மென்பொருள் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை இந்த சுட்டியில் காணலாம். சுட்டி
இந்த மென்பொருள் தரவிறக்க இன்னும் பதினொரு நாட்களே உள்ளது. உடனே முந்துங்கள்.
இன்று 04/05/2012 என் மகன் பிறந்து ஆறாவது வருடம் முடிவடைந்து ஏழாவது வருடம் தொடங்குகிறது. ஆறு வருடத்திற்கு முன் RSRM மருத்துவமனையில் வாசலில் தவம் கிடந்தேன் எப்பொழ்து குழந்தை பிறக்கும். தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் எதிரில் உள்ள அம்மன் கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்து காத்துக் கொண்டிருந்தேன் இதோ அதோ என்று மாலை நான்கு மணி பத்து நிமிடத்திற்கு வெளி உலகை பார்த்துவிட்டான் என் மகன். தாயும் சேயும் நலம் என்று கூறிய செவிலிக்கு ஒரு 500ரூபாயை கொடுத்து என் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டேன்.
அவனுடைய பெயரில் தான் இந்த வலைப்பதிவையே தொடங்கினேன். இன்று வரை என் மகனை போலவே இந்த வலைப்பூவும் வளர்ந்து கொண்டு வருகிறது. அவன் கணினியில் அமர்ந்து தட்டச்சு செய்து பழக்காமன பிறகு இந்த வலைப்பூவினை அவனுக்கு அன்பளிப்பாக கொடுக்க எண்ணியிருக்கிறேன். அவனுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கோயம்பேட்டில் உள்ள குறுங்கலீசுவரர் கோவில் வாசலில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு ஒரு வேளை உணவினை வீட்டில் செய்து கொண்டு போய் அவன் கையால் கொடுத்து வருகிறேன். அவர்களுடைய வாழ்த்தும் நண்பர்களின் வாழ்த்தும் என் மகனை நோய் நொடியில்லாமல் வாழ வைக்க இறைவனை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை முடிக்கிறேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...