நண்பர்களே மாதம் ஒரு பதிவாது எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதினால்தான் இந்த பதிவு இன்று எழுதி பதிவிட்டிருக்கிறேன். நம் பதிவினை மேம்படுத்த எண்ணியுள்ளேன். அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் பதிவின் கடைசியில் ஒரு சிறு போட்டி ஆரம்பித்திருக்கிறேன். பங்கு கொள்ளுங்கள் வெற்றி பெறுங்க. பதிவிற்கு செல்வோம்.
நம்
வொண்டர்ஷேர் நிறுவனத்தின் நண்பர்கள் தொடர்ந்து அவர்களுடைய மென்பொருட்களை
நம்மிடம் கொடுத்து அதன் பலன்களை எழுத சொல்கின்றனர் அவர்களுக்கு என் நன்றி
என் எழுத்துக்கள் அவர்களுக்கு பிடித்திருப்பதால்தான் தொடர்ந்து
அவர்க்ளுடைய் மென்பொருட்களை நம் வாசக நண்பர்களிடம்
அறிமுகப்படுத்துகின்றனர்.
இதோ அவர்களின் அடுத்த மென்பொருள் Wondershare Fantashow
இந்த Wondershare Fantashow மென்பொருளால் நமக்கு என்ன உபயோகம்.
உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி உதாரணத்திற்கு மகனின் முதல் பிறந்தநாள்
அதற்காக வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடுகிறீர்கள். அப்பொழுது வாடகைக்கு
புகைப்படக்காரர் அமர்த்தி புகைப்படங்களையும் எடுப்பீர்கள். அப்படியே
உங்களிடம் உள்ள டிஜிட்டல் புகைப்பட கேமிரா மூலம் நீங்களும் சில
புகைப்படங்களை எடுப்பீர்கள். அந்த புகைப்படங்களை கணினியில் தரவேற்றிய பிறகு
வெறும் போட்டோ கோப்புகளாக உங்கள் கணினியிலேயே சேமித்து
வைத்திருப்பீர்கள். அவ்வாறு சேமித்து வைத்திருக்கும் போட்டோக்களை
உங்களுக்கு பிடித்த மாதிரி வடிவமைக்கதான் இந்த மென்பொருள் உதவுகிறது.
உங்கள் போட்டொக்களை ஒரு போட்டோ ஸ்லைடாக காட்டும் பொழுது அதன் பின்னே
உங்களுக்கு பிடித்த பாடல்களை ஒலிக்க வைக்கலாம். அல்லது இந்த மென்பொருளில்
கொடுத்துள்ள ஒலி கோப்புகளையும் உபயோகப்படுத்தலாம்.
உங்களுக்கு கவிதை எழுத தெரிந்தால் ஒவ்வொரு போட்டோவிற்கும் ஒரு கவிதை எழுதலாம். அல்ல்து உங்களுக்கு பிடித்த வார்த்தைகளை எழுதலாம்.
இதில் உள்ள பலவகையான் தீம்கள் உங்கள் போட்டோக்களுக்கு கூடுதல் அழகைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அத்துடன் உங்கள் வேலை முடிந்த பிறகு அந்த வீடியோ கோப்பினை உங்கள் கணினியில் சேமிக்கலாம்.
செல்பேசியில் சேமித்துக் கொள்ள முடியும் அல்லது நேரடியாக யூட்யூபில் அல்லது டிவிடியிலோ சேமித்துக் கொள்ளலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
Microsoft Office 2013 Customer Preview Version இப்பொழுது தரவிறக்கும் வகையில் உள்ளது. இதற்கு உங்களுக்கு Hotmail ID தேவை.
ஹாட்மெயில் ஐடி இல்லாதவர்கள் இதோ நேரடியாக இங்கே இருந்து தரவிறக்குங்கள்.
Download Microsoft Office 2013 Full Offline installer
English:
Direct Download Link for Standalone Offline Installer (32-bit) (624 MB)
Direct Download Link for Standalone Offline Installer (64-bit)(702 MB)
மைக்ரோசப்ட் ஆபிஸ் 2003 நிறுவ உங்கள் கணினி குறைந்தபட்ச திறன் கீழ்கண்டபடி உள்ளதாக இருக்க வேண்டும்.
System Requirements for installing Microsoft Office 2013
- 1GHZ or greater x86/x64 processor
- 1GB RAM for 32bit and 2GB for 64bit
- 3.5Gb free hard disk space.
- Supported O.S: Windows 7, Windows 8, Windows Server 2008 R2 or newer.
- Graphics: Directx10 graphics card /1024×576 resolution
சென்னை - பெங்களூர் இடையே டாய்லெட் மற்றும் சமையலறை வசதியுடன் கூடிய
பேருந்து அற்முகப்படுத்தியிருக்கிறது KSRTC நிறுவனம். அது குறித்த வீடியோ
கீழே
எப்ப நம்ம கவர்மென்ட் இந்த மாதிரி பஸ் விட போகுதோ
Pac-Man விளையாட்டு அனைவருமே விளையாடி இருப்போம். அந்த பேக்-மேன் விளையாட்டினை கூகிள் கூட ஒரு டூடுலாக போட்டிருந்தது ஞாபகம் இருக்கலாம். அது போல இது ஒரு பேக் மேன் வீடியோ பார்த்து ரசியுங்கள்
பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு இலவசமாக Wondershare Fantashow மென்பொருள் வழங்க இருக்கிறேன். முழு பதிப்பும் இலவசமாக பெற கீழுள்ள சில கேள்விகளுக்கு விடையளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
போட்டி இனிதே முடிந்தது போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை மதியம் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள். நன்றி
நன்றி மீண்டும் வருகிறேன்
9 ஊக்கப்படுத்தியவர்கள்:
மிக்க நன்றி நண்பரே ...
அவ்வப்போது எழுதுங்கள்...
திண்டுக்கல் தனபாலன்
very useful informations
thanks for sharing this information bro!
Microsoft Office 2013 அப்டேட் செய்யலாமா கூடாதா?
நல்லதொரு அறிமுக மென்பொருள். போட்டோஷாப் தெரியாதவர்கள் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் இருக்கும் மென்பொருளை அறிமுகம் செய்தமைக்கு நன்றி வடிவேலன் சார்...
Good..........!!
Thanks for sharing the useful information.
வணக்கம் நண்பர்களே,
உங்களுக்கும் வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம உள்ளதா..? ஆனால் வெப்டிசைனிங் தெரியவில்லையா.....? கவலையை விடுங்க. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்களும் வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்களேன்.
Ok Where is the contest in this page?
முழு பதிப்பும் இலவசமாக பெற கீழுள்ள சில கேள்விகளுக்கு விடையளிக்குமாறு
Where is the Question Below?
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்