நண்பர்களே தொடர்ந்து அலுவல் பணி காரணமாக வெளி இடங்களுக்கு பயணங்கள்
தொடர்ந்து இருப்பதால் தொடர்ச்சியாக பதிவுகள் எழுத முடியவில்லை
மன்னிக்கவும். இதோ ஒரு புத்தம் புதிய பதிவு உங்களுக்காகவே வாருங்கள்
பதிவுக்கு செல்வோம்.
நம் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிடிஎப் பாஸ்வேர்ட் படிக்கும் முறை குறித்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. மன்னிக்கவும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
வயர்லெஸ் நெட்வொர்க் வாட்சர்
இப்பொழுதெல்லாம் கணினி இல்லாத வீடு கிடையாது. அது போல இணைய இணைப்பு இல்லாத
வீடும் கிடையாது. அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ்
எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும். இவ்வாறு கனெக்ஷன்
வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்ய
வேண்டும் என்பதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன்
செய்வார்கள் சிலர். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில் ஏதோ
நுழைவது போல கிடைத்தது வழி என்று அனைவரும் நுழைந்து உங்கள் கணக்கில்
பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள்.
சரி உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.
இந்த சிறிய மென்பொருள் 217 கேபி மட்டுமே
இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி,
கணினியின் பெயர், கணினி எண் (Mac Address), எந்த வகையான நெட்வொர்க்
அடாப்டர் என்றும் தெரிந்து கொள்ள முடியும்
மென்பொருள் தரவிறக்க முகவரி
கூகிளில் நாளுக்கு நாள் முன்னேற்றங்களை புகுத்திக் கொண்டிருக்கின்றனர் இனி
உங்கள் ஜிப் மற்றும் ரேர் கோப்புகளை நேரடியாக உங்கள் கூகிள் டாக்ஸில்
பார்க்க முடியும். ஜிப்பினுள் உள்ள கோப்புகளில் தேவையான கோப்பினை மட்டும்
தரவிறக்க முடியும். கூகிளுக்கு நன்றி சொல்வோம். Thanks to Google & Google Team
எஸ் எம் மல்டிமீடியா ப்ளேயர்
இணையத்தில் எத்தனையோ மீடியா ப்ளேயர்கள் உள்ளன. அதில் சில மிகவும் சக்கை
போடுகிறது. அது விஎல்சி, விண்டோஸ் மீடியா ப்ளேயர், கோம் ப்ளேயர், அந்த்
வரிசையில் ஒரு புதிய மீடியா ப்ளேயர்.
அதன் பெயர் எஸ் எம் ப்ளேயர்.
இந்த மென்பொருள் மிகவும் வேகமாக வீடியோ படங்களை திறந்து படிக்க கூடியது.
உங்களால் சப்டைட்டில் சேர்த்து படம் பார்க்க முடியும்.
படத்திற்கும் ஆடியோவிற்கும் சம்பந்தம் இல்லாமல் தாமதமாக ஆடியோ வரும் அதனை நமக்கு தேவையானவை போல் மாற்ற முடியும்.
எஸ் எம் மீடியா ப்ளேயரில் இருந்து கொண்டு நேரடியாக http://www.opensubtitles.org/ வலைத்தளத்தில் தேடி சப்டைட்டிலை சேர்க்க முடியும். இது போன்று நிறைய வசதிகள்.
இது ஒரு திறந்த நிலை மென்பொருள் Open Source என்பதால் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படும் என கட்டாயம் நம்பலாம்.
எஸ் எம் ப்ளேயர் தரவிறக்க சுட்டி (மன்னிக்கவும் சுட்டி இணைக்க மறந்து தாமதமாக இணைத்தேன்)
இந்த மீடியா ப்ளேயரையும் முயற்சித்து பாருங்கள் உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும்.
பதிவினை படிக்கிற நண்பர்கள் தொடர்ந்து நண்பர்களிடமும் உறவினர்களிடமும்
நம் தளத்தினை எடுத்து கூறி விளம்பரப்படுத்தவும் முடிந்தால்
விளம்பரங்களையும் கொஞ்சம் கிளி பாருங்கள். சிலரிடம் நம் வாசகர்களுக்காக
இலவச மென்பொருள் குறித்து பேசி வருகிறேன். விரைவில் அது குறித்த பதிவும்
வெளிவரும்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க மற்றும் வைபை வாட்சர் உங்களுக்காக
Jul 23, 2011
எழுதியவர்
Vadielan R
Labels:
Computer,
Computers,
Google,
Google Docs,
Media Player,
Network,
Nirsoft,
Password Decrypt,
PDF,
PDF Decryptor,
SM Player,
Watcher,
Wi-fi,
Wifi,
Wireless Watcher,
நிர்சாப்ட்
Subscribe to:
Post Comments (Atom)
எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்
-
நண்பர்களே டெலிகிராம் ஆப் வழியாக நிறைய நாவல்கள் மற்றும் திரை விமர்சனங்கள் இருக்கின்றன. அது போல் நானும் நாவல்கள் மற்றும் புத்தகங்களுக...
-
நண்பர்களே அனைவருக்கும் உதவகூடிய 101 தொழில்நுட்ப தளங்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன். அனைவருக்கும் இந்த தளங்கள் உபயோகமாக இருக்கும் என்பது த...
-
KEYS FOR U நண்பர்களே உங்கள் கணணியில் நிறைய மென்பொருட்கள் இருக்க்கும் அது பெரும்பாலும் முப்பது நாட்கள் ட்ரையல் வெர்சனாக இருக்கும். அதற்குத்தா...
-
நண்பர்களே ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு சைபர் குற்றம் நடைபெறுவதாக கூறுகிறது ஒரு ஆய்வு. இது மட்டும் இல்லாமல் தினம் தினம் ஒரு ஆபாச ...
-
நண்பர்களே உங்கள் ஆடியோ சிடியிலிருந்து பாடல்களை எம்பி3 ஆக பிரித்தெடுக்க சிறந்த ஐந்து மென்பொருட்கள் மீடியாகோடர் சிடெக்ஸ் சிடி ரிப்பர் ...
-
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் திரும்பவும் புதிய பதிவுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். இது வரை கூகிள் நிறுவனம் நிறைய...
-
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வ...
-
நண்பர்களே உங்கள் அனைவரது ஆதரவினால் நம்முடைய வலைப்பூ விகடனில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளி வந்துள்ளது. இதற்காக விகடன் நிறுவனத்திருக்கு நன்றி...
-
திருச்சிப் பகுதியைச் சேர்ந்த சாரநாதன் கல்லூரியின் ஒரு சில மாணவர்கள் நடத்தும் வலைப்பகுதி என அறிகிறேன். இசை, மென்பொருள், திரைப் படங்கள் என இய...
-
நண்பர்களே நாம் அனைவரும் ஒரு முறையாவது தெரியாமல் முக்கிய கோப்பு ஒன்றை அழித்துவிட்டு கவலைப்பட்டுக் கொண்டு இருப்போம் எப்படி மீட்பது என்று கன்னத...
5 ஊக்கப்படுத்தியவர்கள்:
hmm parawalayee wifi la irukawangala kick pana mudiyaathaa?
சூப்பர்சார்,நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்.
உங்கள் இந்த சிறந்த பதிவினை உடன் முயற்சித்துப் பார்த்துவிட்டேன். மிகவும் நன்றாக உள்ளது.நன்றி
அருமையான தகவல்கள்.. வாழ்த்துக்கள்..!
நேரமிருந்தால் இங்கு வந்து பார்க்கவும்..
www.thangampalani.blogspot.com
இந்த மாதிரியான ஒரு மென்பொருளை (Wireless Network Watcher)-ஐத் தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன். அது தங்களின் பதிவு வாயிலாக கிடைத்தது மிக்க மகிழ்ச்சி... தொடரட்டும் தங்கள் சேவை...
ரொம்ப நாளாக உங்களோட தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வேலை செய்யாமல் இருந்தது. இப்போ அதை சுத்தமா காணவில்லை. எடுத்திட்டீங்களோ ?
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்