Autocad க்கு மாற்று மென்பொருள் மற்றும் புதிய விளையட்டுகளும் பயனுள்ளமென்பொருட்கள்

நண்பர்களே Mozilla Firefox 4.0 வெளிவந்து சக்கை போடு போடுகிறது.  நீங்களும் உங்கள் கணினியில் பயர்பாக்ஸ் உலாவியை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.  பயர்பாக்ஸ் உலாவி 4.0 தரவிறக்க சுட்டி  ஆசியாவில் அதிகமாக ஜப்பான் முதலிடத்திலும் ஜப்பானுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமாக பயர்பாக்ஸ் உலாவி 4.0 தரவிறக்கப்பட்டுள்ளது.  மாலத்தீவுகளில்தான் குறைவாக தரவிறக்கப்பட்டுள்ளது.

பயர்பாக்ஸ் வெளிவந்த 48 மணி நேரங்களில் தரவிறக்கப்பட்ட அளவு மட்டுமே 193.4 மில்லியனாம்.  இது போல நிறைய விஷயங்களை வெளியிட்டுருக்கிறார்கள். கீழே உள்ள படத்தில் பாருங்கள்.


பயர்பாக்ஸ் உலாவி 4.0 இதுவரை எந்தெந்த நாடுகள், நகரங்களில் எத்தனை முறை தரவிறக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள சுட்டி

AutoCad மாற்று மென்பொருள் 

நிறைய நண்பர்கள் ஆட்டோகேட் என்ற மென்பொருளை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.    இது வரைகலைக்கான மென்பொருள் அதாவது கட்டிடம் மற்றும் இன்ட்ரியர் டெகரெட்டர்கள் போன்றவர்கள் நிறைய உபயோகப்படுத்துவார்கள்.  இந்த மென்பொருளில் 2D மற்றும் 3D ஆக கட்டிடங்களை உருவாக்க முடியும். 
இந்த மென்பொருள் விலை அதிகமான மென்பொருளும் ஆகும். இதன் விலை குறைந்தது இந்திய ரூபாயில் 20,000 க்கும் மேலாகும். 

இது போன்ற ஒரு மென்பொருளை Drafsight என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.  ஆட்டோகேடில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளும் செய்ய முடியும். 

இந்த மென்பொருள் செய்யும் வேலைகள் இங்கு தட்டச்சு செய்யமுடியாத அளவுக்கு பெரியதாக இருப்பதால் இங்கே சென்று நேரடியாக தெரிந்து கொள்ளவும்.  சுட்டி  இந்த மென்பொருள் முழுக்க முழுக்க ஆட்டோகேட் உபயோகிப்பாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

AngriBird புகழ்பெற்ற ஆங்கிரிபேட் விளையாட்டு உங்களுக்காக சுட்டி

இந்த புகழ்பெற்ற Angribird விளையாட்டு இப்பொழுது படமாக்கப்பட்டு வருகிறது விரைவில் வெள்ளித்திரையில் காணலாம்.  இதன் காணொளி கீழே




நீங்கள் முக்கியமான வேர்ட் கோப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது கணினி ரீஸ்டர்ட் அல்லது அணைந்து போனாலோ அல்லது வேறு வகையில் பழுதுபட்ட எம் எஸ் வேர்ட் மற்றும் எக்ஸல் கோப்புகள் மற்றும் ஒபன் ஆபிஸ் கோப்புகள் இருந்தால் இந்த மென்பொருள் மூலம் சுலபமாக மீட்டு எடுக்க முடியும்.  இந்த மென்பொருளை நிறுவ மைக்ரோசாப்ட்ட் டாட் நெட் நிறுவி இருக்க வேண்டும்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.
 
நன்றி மீண்டும் வருகிறேன்

7 ஊக்கப்படுத்தியவர்கள்:

வரதராஜலு .பூ said...

வோர்ட் ரெகவரி அருமையான யுடிலிடி. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

மாணவன் said...

வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருள் தொகுப்பின் பகிர்வுக்கு நன்றி நண்பரே

mani said...

angrybird படம் உண்மையிலே வருதா...?? இது படம் trailor மாதிரி இல்லையே, game trailor மாதிரி இருக்கு...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice informative post

siva said...

really very useful for me

Mohamed Faaique said...

ரொம்ப நன்றி சார். ஒட்டோ காட்.டுக்கு இணையாக இன்னொரு மென்பொருளா? பார்ப்போம்....

Unknown said...

thanks ya

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை