கூகிளின் புது வருட கொண்டாட்டம் - புதிய மென்பொருட்களுடன்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே உங்கள் கணிணி தானாகவே குறிப்பிட்ட நேரத்தில் அணைக்க இந்த மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருளில் எந்த நேரம் அணைக்க வேண்டும் என்று நேரத்தை குறித்து விட்டு எவ்வளவு நேரத்திற்கு முன் நினைவூட்ட வேண்டும் என்று செட் செய்யலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி



உங்களிடம் இருக்கும் ஒரு புகைப்படத்தை ஒரு குறிப்பட்ட கலருக்கு மாற்ற அல்லது கருப்பு வெள்ளை புகைப்படமாக்க இந்த மிக சிறிய மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருளின் அளவு 1 எம்பிக்கும் குறைவு என்பதால் வேகமாக தரவிறக்கி விடலாம் சுலபமாக அனைவரும் உபயோகிக்கலாம்.  சுட்டி


உங்கள் புகைப்படத்தை கையால் வரைந்த ஓவியமாக மாற்ற இந்த மென்பொருள் உதவுகிறது மென்பொருள் தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருள் வெறும் 60 கேபி மட்டுமே.



நெருப்பு நரி உலாவி நிறுவனத்தினர் வெளியிட்ட காலண்டர் இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளவும். கலர் பிரிண்டரில் அச்சடித்தால் அழகாக இருக்கும்.  கருப்பு என்றாலும் ஒகே  சுட்டி




பிடிஎப் பாஸ்வேர் நீக்க மென்பொருள் பிப்ரவரி 14 2010 உடன் முடிவடைகிறது. இந்த மென்பொருளை நான் ஏற்கனவே நம் தளத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.  பழைய சுட்டி



கூகிள் நிறுவனத்தினர் தங்கள் வலைத்தளத்தில் அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.



இதை பார்ப்பது எப்படி என்ற பழைய சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

3 ஊக்கப்படுத்தியவர்கள்:

கடைக்குட்டி said...

சூப்புருங்க.. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

உங்கள் தளம் தகவல் களஞ்சியங்க. யாராவது தமிழ் ப்ளாக்ஸ்னா என்னன்னு கேட்டா நான் உங்க தள முகவரி தந்துதான் படிக்க சொல்வேன்..

கெத்துல்ல...

M.Rishan Shareef said...

அன்பின் நண்பருக்கு,

வழமை போலவே நல்ல, பயனுள்ள பதிவு.
நன்றி நண்பரே !

//உங்களிடம் இருக்கும் ஒரு புகைப்படத்தை ஒரு குறிப்பட்ட கலருக்கு மாற்ற அல்லது கருப்பு வெள்ளை புகைப்படமாக்க இந்த மிக சிறிய மென்பொருள் உதவும். இந்த மென்பொருளின் அளவு 1 எம்பிக்கும் குறைவு என்பதால் வேகமாக தரவிறக்கி விடலாம் சுலபமாக அனைவரும் உபயோகிக்கலாம். சுட்டி//

இந்தச் சுட்டியும்,

//உங்கள் புகைப்படத்தை கையால் வரைந்த ஓவியமாக மாற்ற இந்த மென்பொருள் உதவுகிறது மென்பொருள் தரவிறக்க சுட்டி இந்த மென்பொருள் வெறும் 60 கேபி மட்டுமே.//

இந்தச் சுட்டியும் ஒரே தளத்துக்குப் போகின்றன. கவனிக்கவும்.

Cloud World said...

hi guys,

http://cyberfraudidentifier.blogspot.com/

This blog used to cyber fraud identifier person.

Thanks for your help for posting this comment in your website.

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை