ஐபேடிற்கான விஎல்சி ப்ளேயர் மற்றும் Wondershare டிவிடி ரிப்பர் MP3 தேடியந்திரம் தரவிறக்க

நண்பர்களே ஐபேட் வெளிவந்து சக்கை போடு போடுகின்றது.  அனைத்து மென்பொருட்களும் ஐபேடில் உபயோகிக்க முடியாது.  அவர்கள் ஆதரவு அளிக்கும் மென்பொருட்கள் மட்டுமே உபயோகபடுத்த முடியும்.  அனைத்து வகை வீடியோ ஆடியோ கோப்புகளையும் ஐபேடில் பார்க்க கேட்க விஎல்சி ப்ளேயர் இப்பொழுது ஐபேடிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

 டிவிடி ரிப்பர் மென்பொருள்

வொன்டர்ஷேர் நிறுவனத்தின் டிவிடி ரிப்பர் மென்பொருள்.   முற்றிலும் இலவசமாக 3500 ` மதிப்புள்ள மென்பொருள் இது.

இந்த மென்பொருளின் சிறப்பியல்புகள்

டிவிடி வீடியோவை பின்வரும் கோப்புகளாக மாற்ற முடியும்.  MP4, MPG, WMV, FLV, SWF

உயர்தர வீடியோ (HD), வீடியோ கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை சாதராண வீடியோவாக மாற்ற முடியும்.

வீடியோ டிவிடிக்களை இந்த வகை கோப்பாகவும் மாற்றலாம். QuickTime, iMovie, iDVD, iTunes, Final Cut Pro, Adobe Premiere Pro.
இது போல் எண்ணற்ற சிறப்பியல்புகள் கொண்டது.

இந்த இலவசமாக வழங்கும் சலுகை செப்டம்பர் 20 - 26 வரை மட்டுமே.  முடிந்தவரை விரைவாக தரவிறக்குங்கள்.  அத்துடன் பேஸ்புக்கில் நீங்கள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இதை தரவிறக்க முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி

எம்பி3 தேடியந்திரம்

அனைவருக்கும் பிடித்த எம்பி3 பாடல்கள் கேட்க ஒரு தளம் தரவிறக்க ஒரு தளம் என்று உபயோகிப்பார்கள் ஆனால் இது இரண்டு மட்டுமல்லாம் எம்பி3யை தேடி தந்து நாம் விருப்பபட்டால் அந்த தளத்திலேயே அந்த பாடலை கேட்டு வேண்டும் என்றால் அந்த தளத்திலேயே தரவிறக்கம் செய்தால் எப்படியிருக்கும்.  இதைதான் செய்கிறது இது எம்பி3யை தேடும் தேடியந்திரமாகவும் தேடிய பாடல்களை இசைக்கும் தளமாகவும்  தேடிக் கேட்ட பாடல்களை தரவிறக்கும் தளமாகவும் இயங்குகிறது.  ஆங்கிலம் தமிழ் இந்த அனைத்து மொழிகளிலும் இருந்து பாடல்கள் தேட முடிகிறது.   இது இசை பிரியர்களுக்கான தளம் என்றால் மிகையில்லை.  இணையத்தள சுட்டி
 

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

டிவிடியை AVI கோப்பாக மாற்ற Ashampoo நிறுவனத்தின் 5 மென்பொருட்கள் இலவசமாக

நண்பர்களே உங்களிடம் உள்ள டிவிடி வீடியோவை சுலபமாக AVI கோப்பாக மாற்ற இந்த மென்பொருள் உபயோகப்படும்.  வேற மென்பொருள் மூலம் செய்தாலும் இதன் இடைமுகப்பு மற்றும் அதிகமான கேள்விகள் எதுவுமில்லை.  அதுதான் இந்த மென்பொருளின் சிறப்பே.

 
உங்கள் வீடியோ டிவிடி வன்தட்டை உங்கள் டிவிடி ட்ரைவில் இட்டுவிடுங்கள்.  பிறகு இந்த மென்பொருளை இயக்குங்கள்.  அதில் உங்கள் மாற்றம் செய்யப்பட்ட AVI கோப்புகள் எங்கு வேண்டும் என்று போல்டரில் சேமிக்க வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.  பிறகு Start ripping பட்டனை கிளிக் செய்தால் போதும். மென்பொருள் தரவிறக்க சுட்டி


Ashampoo நிறுவனத்தின் மென்பொருட்கள் மிகவும் பிரபலமான மென்பொருட்களாகும்.  இந்த மென்பொருட்களின் ஐந்து வகையான மென்பொருட்கள் இப்பொழுது முற்றிலும் இலவசமாக தரப்படுகிறது.  உடனே தரவிறக்குங்கள்.
Ashampoo Burning Studio 2010 Advanced
Ashampoo Home Designer
Ashampoo Snap 3
Ashampoo WinOptimizer 6
Ashampoo PhotoCommander 7



Ashampoo Burning Studio 2010 Advanced இந்த மென்பொருளின் மூலம் வீடியோ ஆடியோ ப்ளு-ரே டிவிடிக்கள் பதியலாம். மிக வேகமாகவும் துல்லியமாகவும் இந்த மென்பொருள் மூலம் பதிய முடியும்.



Ashampoo Home Designer இந்த மென்பொருள் மூலம் வீடு மற்றும் அலுவலகங்களை நமக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ளலாம்.   அதன் மூலம் நம் நிஜ வீடு மற்றும் அலுவலகத்தை இந்த மென்பொருள் மூலம் உருவாக்கி நிஜத்தில் இன்னும் மெருகூட்ட உதவுகிறது. இது ஒரு 3டி மென்பொருள் என்பது இதன் சிறப்பம்சம்.

Ashampoo Snap 3  இந்த மென்பொருள் ஒரு திரையை படம்பிடிக்கும் மென்பொருள் ஆகும்.   இதன் மூலம் உங்கள் திரையில் எழும் பிரச்சனைகளை படம்பிடித்து அது குறித்த வல்லுநர்களிடம் இந்த படத்தை காட்டுவதால் எளிதில் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க இந்த மென்பொருள் ஏதுவாக இருக்கும். இது புகைப்படமாக மட்டுமல்ல வீடியோ கோப்பாகவும் படமெடுக்கலாம்.  மொத்ததில் நமது கணினியுடன் இணைந்த ஒரு கேமரா என்றால் மிகையில்லை.

Ashampoo WinOptimizer 6  விண்டோஸில் ஏற்படும் பிழைகள் மற்றும் ரெஜிஸ்டரியில் ஏற்படும் பிழைகளை இதன் மூலம் சரிப்படுத்தினால் உங்கள் விண்டோஸின் வேகம் கூடும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Ashampoo Photo Commander 7  நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை எடிட் செய்து அழகாக பிரசண்டேசன் செய்ய மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். 


இந்த ஐந்து மென்பொருட்கள் தனித்தனியாக தருகிறார்கள் அதுவும் இலவசமாக.  அதை பெற இந்த வலைத்தளத்திற்கு விஜயம் செய்யவும்.  சுட்டி  அங்கு  ASH-444LW1  இந்த கோட்டினை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். அவ்வளவுதான் மேலுள்ள ஐந்து மென்பொருளில் எது வேண்டுமோ அதை தரவிறக்கிக் கொள்ளலாம்.



இது ஒரு வலைத்தளம் பார்த்து விட்டு கருத்து கூறுங்கள் சுட்டி

பிரிடெட்டர் படத்தை பார்க்கதாவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள் இந்த படத்தின் உயர்தர வால்பேப்பர்கள் உங்களுக்காக. சுட்டி


நீங்கள் விமானத்தில் பயணிப்பவராக இருந்தாலோ அல்லது உங்கள் நண்பர் பயணம் செய்யும் விமானம் எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள இந்த் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள். இந்த நீட்சியை நிறுவ கூகிள் எர்த் நிறுவி இருக்க வேண்டும்.  இது கூகிள் எர்த்திற்கான நீட்சி சுட்டி
 

நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

குழந்தைகளுக்கான தளம் மற்றும் ஆபிஸ் 2010ல் ரிப்பன் மறைப்பது எப்படி???

நண்பர்களே குழந்தைகளுக்கு வண்ணங்கள் என்பது மிகவும் பிடிக்கும்.  அதுவும் ஒவ்வொரு புதிய விலங்குகள் மற்றும் புதிய வரைபடங்களுக்கு வண்ணங்கள் அடிப்பது என்பது  குழந்தைகளுக்கு மட்டுமே கை வந்த கலை அவர்கள் கொடுக்கு வண்ணங்கள் மிகவும் அழகாக இருக்கும்.  அதை பார்க்கும் பொழுது நமக்கு இருக்கும் கவலைகள் அனைத்தும் மறந்து நாமும் குழந்தைகளின் சூழ்நிலைக்கு போய்விடுவோம்.  இந்த தளத்திலிருந்து நீங்கள் வெறும் பிரிண்ட் அவுட் மட்டும் எடுத்து உங்கள் குழந்தைகளிடம் தந்து விடுங்கள் அவர்கள் பார்த்து வண்ணம் தீட்டட்டும்.  வண்ணம் மட்டுமல்ல பொருளுக்கான பெயர் மற்றும் விடுபட்டை எழுது போன்ற படங்களும் உள்ளன.  

நீங்கள் எடுக்கும் பிரிண்ட் அவுட்டினை மாற்றங்கள் செய்யவும் முடியும்.

அத்துடன் நீங்கள் இந்த தளத்தில் நுழைந்து நேரடியாக பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.  புதிய கணக்கோ அல்லது உங்கள் மின்னஞ்சலோ கொடுக்க வேண்டியதல்ல என்பது இந்த வலைத்தளத்தின் சிறப்பு.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் இந்த தளத்தில் உள்ளது.

வலைத்தள முகவரி சுட்டி

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010ல் ரிப்பன் போல இருக்கும் அனைத்து டூல்களும் காட்சியளிக்கும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் இடம் அதிகமாக பிடித்திருக்கும் இதை மறைக்கலாம் தேவையான போது சுலபமாக கொண்டு வரலாம்.  அதுவும்  ஒரு மவுஸ் கிளிக் அல்லது ஒரு ஷார்ட் கட் கீ மூலமாக அது எப்படி என்று பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010ல் ரிப்பனின் கடைசியில் பார்த்தால் Vயை ( ^ ) தலைகீழாக போட்டது போல ஒரு கீ இருக்கும் அதை கிளிக் செய்தால் உடனே ரிப்பன் மறைந்து விடும்.  திரும்ப வேண்டுமென்றால் அதையே திரும்பவும் கிளிக் செய்தால் திரும்ப வரும்.

இதையே ஹாட் கீ மூலம் செய்யலாம். இதற்கான ஹாட் ஷார்ட் கீ Ctrl + F1 பிடித்து அழுத்தினால் மறைந்துவிடும். திரும்பவும் Ctrl + F1 அழுத்தினால் திரும்ப வரும்.

புதியவர்க்ளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும்.


சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று இதைத்தான் சொல்வார்கள் Timing Photograph!!!!


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எல்சிடி திரையை அணைக்க மற்றும் பயனுள்ள வால்பேப்பர்கள் இணையத்தளங்கள்

நண்பர்களே வேலை அதிகம் இருந்த காரணத்தால் பதிவுகள் போட இயலவில்லை மன்னிக்கவும்.

அத்துடன் ஆர் எஸ் எஸ் பீட்  முழு வலைப்பதிவும் தெரியுமாறு இருந்ததை சிறிது மட்டுமே தெரியுமாறு மாற்றியமைத்துள்ளேன்.  இதனால் நிறைய பேருக்கு சிரமம் இருக்கும் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்.  விரைவில் இதை மாற்றியமைக்க முயற்சிக்கிறேன்.

இன்றைய பதிவிற்கு செல்வொம்.  உங்கள் நிறுவனத்திற்கு அல்லது உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு லோகோக்கள் வடிவமைக்க விரும்பினால் இந்த இணையத்தின் வழியாக தாரளமாக வடிவமைக்கலாம்.  இந்த இணையத்தின் மூலமாக முற்றிலும் இலவசமாக தருகிறார்கள்.  இதற்காக நீங்கள் செய்யவேண்டியது ஒன்று மட்டுமே உங்கள் மெயில் முகவரி கொடுத்து கணக்கு ஒன்றை திறந்து கொள்ள வேண்டும் அவ்வளவே.  வலைத்தள முகவரி  சுட்டி


விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான தீம்கள் இலவசமாக இங்கு கிடைக்கிறது அதுவும் விளையாட்டு பிரியர்களுக்கான தீம்கள் அதிக ரெசொல்யூசனுடன் அதிகமாக கிடைக்கிறது. 




வலைத்தள முகவரி சுட்டி1
வலைத்தள முகவரி சுட்டி2

கடலுக்கடியில் இருக்கும் உயிரினங்கள் கடற்தாவரங்கள் பவழபாறைகள் போன்ற அழகான புகைப்படங்கள உங்கள் டெஸ்க்டாப்பில் போட்டு வைக்க இதை தரவிறக்கிக் கொள்ளுங்கள் சுட்டி







உங்கள் கணினியில் உள்ள சில நகாசு வேலைகளை செய்ய அதாவது ரூட்கிட் ரெவ்யூலர், ப்ரோசஸ் மானிட்டர் இது போன்ற சிறு மென்பொருட்கள் இணைந்த ஒரு மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது டெக்நெட் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.  இந்த மென்பொருள் மூலம் நிறைய வேலைகளை நாம் செய்ய முடியும்.  

உதாரணத்திற்கு ஒரு வலைத்தள டொமைன் உரிமையாளர் யார் என்று கண்டுபிடிக்க நாம் ஒரு உலாவியை திறந்து அதன் பிறகு www.Whois.com சென்று அங்கு அந்த டொமைன் பெயரை தட்டச்சு செய்து பிறகு என்டர் தட்டினால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். 

இந்த மென்பொருள் மூலம் நேரடியாக டொமைன் பேரை தட்டச்சு செய்து தெரிந்து கொள்ளலாம்.  இது போன்று எண்ணற்ற செயல்கள் இந்த மென்பொருள் மூலம் செய்யலாம்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி இந்த கூட்டுமென்பொருளை முழு மென்பொருளாகவும் தரவிறக்கலாம். அல்லது உங்களுக்கு தேவையான மென்பொருள் தனியாகவும் தரவிறக்கி கொள்ளலாம்.

 உங்கள் லேப்டாப்பின் எல்சிடி திரையை மட்டும் ஒரே கிளிக்கில் அணைக்க இந்த மென்பொருள் உபயோகப்படும்.  சுட்டி  இந்த மென்பொருளின் அளவு 64கேபி மட்டுமே.


லினக்ஸ் புதியதாக கற்கும் நண்பர்களுக்கு இந்த வால்பேப்பர் மிகவும் உதவியாக இருக்கும்.  இதில் அடிப்படை கட்டளைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு வால்பேப்பராக வெளியிடப்பட்டுள்ளது அந்த வால்பேப்பர் உங்களுக்காக கீழே



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை