விஜயதசமி சிறப்பு மென்பொருட்கள் உங்களுக்காக

நண்பர்களே இலவசமாக அதுவும் சட்டரீதியான லோகோ உருவாக்க வேண்டுமா?  லோகோ உருவாக்க வேண்டுமெனில் உங்களிடம் ஒரு லோகோ மென்பொருள் வேண்டும்.  ஆனால் லோகோ மென்பொருள் வாங்க வேண்டுமெனில் கையிலிருந்து காசு செலவழிக்க வேண்டும்.  காசு செலவழிக்க இயலதாவர்கள் தேவையில்லாமல் நச்சு நிரல்கள் நிறைந்த வலைத்தளத்திற்குள் சென்று உடைக்கப்பட்ட மென்பொருட்களை தரவிறக்குவார்கள்.  அவர்களுக்காக மட்டுமல்ல அனைவருக்கும் உதவும் ஒரு சிறந்த இலவச சட்டரீதியான லோகோ மேக்கர். தரவிறக்க சுட்டி



நம்மால் யூட்யூபிலிருந்து படத்தை தரவிறக்கத் தெரியும். அந்த தளத்திலிருந்து ஒலியை மட்டும் எம்பி3 ஆக தரவிறக்க தெரியும். ஆனால் நம்மிடம் உள்ள எம்பி3 கோப்பை எப்படி யூட்யூப் தளத்தில் பதிவேற்றுவது. அதற்கு ஒரு வழி உண்டு.  உங்களிடம் உள்ள எம்பி 3 கோப்பினை இந்த தளத்தினுள் உள்ளீடு செய்யுங்கள். அதற்கு முன் நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து இருக்க வேண்டும்.  பிறகு இவர்களின் தளத்தினுள் ஏதாவது ஒரு ஜேபிஜி கோப்பினை தரவேற்றுங்கள். பின்னர் உங்கள் எம்பி3 கோப்பினை தரவேற்றுங்கள். முடிந்தது உங்கள் எம்பி3 கோப்பு உங்கள் யூட்யூப் கணக்கினுள் ஏற்றப்பட்டிருக்கும்.

இணையத்தள சுட்டி



மாயா, 3டி ஸ்டூடியோ மேக்ஸ், ப்ளேன்டர், கொலடா போன்ற மென்பொருட்களில் உருவாக்கப்பட்ட கோப்புகளை பார்க்க இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருள் மூலம் பார்க்க முடிந்த கோப்புகளின் எக்ஸ்டென்சன்கள் OBJ, 3DS, STL, OFF 3D, COLLADA மற்றும் 3DXML
இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை மென்பொருள். அது மட்டுமில்லாமல் இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் மேக் கணிணிகளிலும் இயங்ககூடியது.

மென்பொருள் தரவிறக்க சுட்டி





அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை