Conficker Virus ஏப்ரல் 1 உஷார் ரிப்போர்ட்!!!

 நண்பர்களே Conficker வைரஸ் சென்ற 2008 ஆண்டு  தாக்கிய வைரஸ் இந்த 2009 ஆண்டும் தாக்குவதற்கு தயாரகிவிட்டது.
 இது மிகவும் பீதி கிளப்பக்கூடிய வைரஸ் கிடையாது அதனால் பயப்படத் தேவையில்லை.  
உங்கள் ஆண்டிவைரஸ் மூலம் உங்கள் கணனி சரியாக தினமும் அப்டேட் செய்து வந்தீர்களானால் உங்கள் கணணி இந்த வைரஸ் கிட்ட கூட நெருங்க முடியாது. 
ஆனால் இந்த வைரஸ் ஒரு முறை நுழைந்து விட்டால் உங்கள் கணணியில் பல வைரஸ் ப்ரோகிராம்களை இன்ஸ்டால் செய்து விடும்
 
இந்த வைரஸ் உங்கள் கணணியில் நுழைந்து விட்டாதா என்று எப்படி கண்டுபிடிப்பது?
இந்த வைரஸ் நுழைந்து இருந்தால் இந்த மாற்றங்கள் உங்கள் கணணியில் நிகழு ஆரம்பிக்கும்.
1.  உங்கள் அக்கவுண்ட் பாலிஸி தானாகவே ரீசெட் செய்யப்பட்டிருக்க்கும்.
2.  விண்டோஸில் செக்யுரிட்டி அப்டேட் மற்றும் விண்டோஸ் டிபெண்டரில் பிழைச் செய்திகள் கொடுக்க ஆரம்பிக்கும். 
3.  நெட்வொர்க்கில் இயங்கும் கணணிகள் டொமைன் வழியாக இயங்க வழக்காமான நேரத்தை விட ஐந்து மடங்கு நேரம் எடுத்துக் கொள்ளும். 
4.  நெட்வொர்க் வேகம் மிகவும் குறைவாக இருக்கும்.
5.  உங்களுடைய கணனியில் இருந்து ஆன்டி வைரஸ் தளங்களுக்கு செல்வடு தடுக்கப்படும். 
உங்களுடைய அட்மின் பாஸ்வேர்டுகள் திருடப்படும். (நீங்கள் உங்கள் அட்மின் பாஸ்வேர்ட் Admin@9841  இது மாதிரி இருந்தால் திருடமுடியாது)
உங்கள் கணணியை இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பது எப்படி? என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் கண்ணியில் நல்ல ஆண்டிவைரஸ் நிறுவிக்கொள்ளுங்கள் அது தரம் வாய்ந்தவையாக இருக்கட்டும்.  உதாரணம் காஸ்பர்ஸ்கை இது வெறும் 450 ரூபாய் மட்டுமே! அதுவும் இதை மூன்று கணனிகளில் நிறுவிக்கொள்ளும் வசதியுடையது.
உங்கள் கணணியில் ஸ்பைவேர் உள்ளதா என்று பரிசோதிக்கவும்.  ஸ்பைபாட்
உங்கள் விண்டோஸ் மார்ச் மாதம் வரை அப்டேட் செய்து இருந்தால் மிகவும் நல்லது.
இதையும்  மீறி உங்கள் கணணியில் இந்த வைரஸ் நுழைந்து விட்டால் உங்களுக்கு உதவும் இந்த வைரஸ் ரிமூவல் டூல்கள்
நார்ட்டன் ரீமுவல் டூல் தரவிறக்கம்
எப் செக்யூர் தரவிறக்கம் 
மைக்ரோசாப்ட் தரவிறக்கம்
மைக்ரோசாப்ட் வைரஸ் அழிக்கும் தகவல்கள் குறித்த சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

புத்தகங்கள் அலமாரிகளின் அணிவரிசை



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

டிஸ்க் ஸ்க்ரப்பர்

 நண்பர்களே இப்பொழுது எத்தனையோ கோப்புகளை மீட்டெடுக்கும் மென்பொருள்கள்  உள்ளன. அவைகளால் சுலபமாக நாம் நீக்கிய கோப்புகளை மீட்டெடுத்து கொடுத்து விடுகின்றன. எப்படி இந்த மென்பொருளுக்கு அல்வா கொடுப்பது. இதற்கு இந்த மென்பொருள் உதவுகிறது டிஸ்க் ஸ்க்ரப்பர்.  ஒரு கோப்பை அழித்தால் ஹார்ட் டிஸ்கில்  அந்த கோப்பு அழிந்த இடத்தில் வேறு ஒரு கோப்பை எழுதும் வரை சுலபமாக மீட்டு எடுக்கலாம். அந்த இடத்தில் வேறு ஒரு கோப்பை எழுதப்பட்டுவிட்டால் அழிந்த அந்த கோப்பை எடுப்பது மிகவும் கடினம் இந்த மென்பொருள் மூலம் ஒரு கோப்பை அழிக்கும் போது அந்த கோப்பை அழித்து விட்டு வேறொரு கோப்பை எழுதிவிட்டு எழுதிய கோப்பையும் அழித்து விடுகிறது இதனால் புதியதாக எழுதிய டம்மி கோப்பு மட்டுமே மீட்டெடுக்கும் மென்பொருளுக்கு கிடைக்கும்.

"கீழே இருக்கும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்.
என்னுடைய தவறை திருத்தியதற்கு நன்றி.  எனக்கு ஆங்கிலம் அந்த அளவுக்கு தெரியாது தெரியாமல் நடந்த தவறை உணர்த்தியமைக்கு நன்றிகள் பல"


" இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருளை வைத்து அழித்த பைல்களை மற்ற மீட்டெடுக்கும் மென்பொருள்களால் மீட்டெடுக்க முடியாது.

மீட்டெடுக்க முடியாத வண்ணம் இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருள் உங்கள் பைல்களை அழித்து விடும்.

இது ஹார்ட்டு டிஸ்க்கை மற்றவர்களுக்கு டொனேட் செய்பவர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும்.

ஏனென்றால் நீங்கள் டிஸ்க்கை மற்றவர்களுக்கு டொனேட் செய்த பிறகு உங்கள் Personal பைல்களை யாரும் மீட்டெடுத்து பயன்படுத்தாத வண்ணம் இந்த டிஸ்க் ஸ்கரப்பர் மென்பொருள் உங்கள் பைல்களை அழித்து விடும்."

இதை தரவிறக்க சுட்டி

இவர்களின் வேறு சில மென்பொருட்கள்

பைல்சர்ச்சர்

பல்க் இமெஜ் ரீசைசர்

நன்றி அனைவருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நேரடியாக வந்து படிப்பவர்களுக்கும் ரீடர் மூலம் படிப்பவர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் படிப்பவர்களுக்க்கும் நன்றி உங்கள் ஊக்கமும் உற்சாகமும் என்னை இன்னமும் எழுதிட தூண்டுகிறது. நன்றி வணக்கம்.

நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

ஆன்லை வீடியோ எடிட்டிங் செய்யலாம் வாங்க

நண்பர்களே இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது ஒரு இணைப்பு அதன் வழியாக் சென்ற பொழுது இந்த வலைத்தளத்தைக் காண நேர்ந்தது. இந்த வலைத்தளத்தில் உங்களிடம் உள்ள வீடியோவை இதில் உள்ளீடு செய்து ஆன்லைனில் எடிட் செய்யலாம்.

நீங்கள் முதலில் இந்த வலைத்தளத்தில் உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்க வேண்டும்.

அடுத்து உங்களிடம் உள்ள வீடியோ கோப்பை இந்த வலைத்தளத்தில்  ஏற்ற வேண்டும்.

உங்கள் வீடியோவை எடிட் அல்லது மிக்ஸ் செய்யுங்கள்.

பின்னர் எடிட் செய்த வீடியோவை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

இது முற்றிலும் இலவசம்.

 
சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை