உங்கள் கணிணியில் You may be a victim of software counterfeiting பிழை நீக்குவது எப்படி? எளிய வழி

உங்கள் கணிணியில் சில நேரங்கள் உங்கள் கணிணியில் சில நேரம் இது போல் தோன்றும்  "You may be a victim of software counterfeiting"



அப்பொழுது எல்லாம் என்ன செய்வீர்கள் உங்கள் கணிணியின் சர்வீஸ் என்ஜினியரை கூப்பிடுவீர்கள்.
அவர் வந்து பார்த்துவிட்டு உங்கள் கணிணியில் மைக்ரோசாப்ட்டால் தடை செய்யப்பட்ட சிடி கீ போட்டுள்ளீர்கள் அதனால் இது போல் வருகின்றது என்று சொல்லிவிட்டு அதை நீக்கி விட்டு சென்று விடுவார்.  இதையே நீங்கள் செய்தால் உங்களுக்கும் நேரம் மிச்சமாகும். என்ஜினியரின் வேலையும் நேரமும் அலைச்சலும் மிச்சமாகும். எப்படி நீங்களே நீக்குவது?


அதற்கு இந்த மென்பொருள் உதவுகின்றது.  இந்த மென்பொருளை சேப் மோடில் இயக்கினால் போதும். மென்பொருள் சுட்டி

இது அனைவருக்கும் பாவிக்ககூடிய உகந்த மென்பொருள் எளிய வழி

சிலர் கேட்கலாம் சர்வீஸ் என்ஜினியர் அவ்வளவு நேரம் வேலை செய்தார் உடனே இது முடித்து விடுமா என்று உங்கள் சர்வீஸ் என்ஜினியர் செய்வது போல நேரம் எடுத்துக் கொண்டு சில சுற்று வழி உங்களுக்காக

முதலில் உங்கள் ஸ்டார்ட் மெனு பாரில் வெற்று இடத்தில் வலது கிளிக் தேர்வு செய்து அதில் Task Manager தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கு டாஸ்க் மேனஜர் திறக்கும்.  அதில் wgatray.exe என்ற கோப்பை வலது கிளிக் தேர்வு செய்து End Process Tree என்பதனை கொடுங்கள்.

உடனே விண்டோஸ் எக்ஸ்பியை ரீஸ்டார் (Restart) செய்யுங்கள்

கணிணி ஆன் செய்தவுடன் உங்கள் கீபோர்டில் F8 என்ற கீயை பிரஸ் செய்யுங்கள்

இப்பொழுது உங்களுக்கு கீழுள்ள படம் போல கிடைக்கும்.  அதில் Safe Mode என்பதனை தேர்வு செய்து எண்டர் தட்டுங்கள்.

சிறிது நேரத்தில் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி Safe Mode என்று நான்கு மூலைகளில் தோன்றியிருக்கும் இப்பொழுது விண்டோஸ் எக்ஸ்பி Safe Modeல் நுழைந்து விட்டது.

பிறகு C:\windows\system32 இந்த போல்டருக்குள் நுழைந்து WgaTray.exe இந்த பெயருள்ள கோப்பை நீக்குங்கள்.

அதேபோல் C:\windows\system32\dllcache என்ற போல்டருக்குள் நுழைந்து  WgaTray.exe இந்த பெயருள்ள கோப்பையும் நீக்குங்கள்.

பின்னர் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து Run தேர்வு செய்து அதில் Regedit என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்

ரெஜிஸ்டரி எடிட்டர் திறக்கும் அதில்
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon\Notify key

WGALogon என்ற போல்டரை நீக்குங்கள். நீக்கிவிட்டு ரெஜிஸ்டரியை மூடுங்கள்

மறுபடியும் உங்கள் விண்டோஸ் ரீஸ்டார்ட் செய்து விடுங்கள் முடிந்தது இனி உங்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்திரால் பிரச்சனை வராது.


வருகின்ற வெள்ளி இரவு வேளாங்கன்னி செல்லலாம் என்றிருக்கின்றேன்.  சனி மற்றும் ஞாயிறு இரு நாளும் அங்கேதான்.  என்னை சந்திக்க விரும்புவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கு சந்திக்கலாம்.


உங்கள் பொன்னான ஆதரவை தமிழிசில் தமிழ்மணத்தில் அனைத்து திரட்டிகளிலும் ஒட்டாக குத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். விளம்பரங்களை கிளிக் செய்து எங்களை பயனளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்ற

நண்பர்களே தொடர்ந்து வேலைகள் அதிகரித்து வருவதால் முன்னெப்போதும் போல் தொடர்ந்து எழுத முடியவில்லை என்னை மன்னித்து உங்கள் ஆதரவை எப்போழுதும் தர வேண்டுகிறேன்.

ஹுலு என்ற இணையத்தளத்தை தெரியாதவர்கள் இணையத்தில் இருக்கவே முடியாது. தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். இந்த தளத்தில் யூட்யூப் போன்றே நிறைய வீடியோக்கள் உள்ளது. அது மட்டுமில்லை டிவியில் ஒளிபரப்பாகும் ஆங்கில சீரியல்கள் முழு திரைப்படங்கள் அனைத்தும் உயர்தரத்தில் உள்ளது.


இந்த தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகமாக இருக்கும். இதன் மென்பொருள் பெயர் ஹுலு வீடியோ டவுண்லோடர்

இந்த மென்பொருள் மூலம் தரவிறக்கும் வீடியோக்களை எம்பெக் 2, ஏவிஐ (MPEG 2) AVI) போன்ற கோப்புகளாக மாற்றி தரக்கூடிய வல்லமையுடையது

ஓலிகளை தேட


உங்கள் பவர்பாயிண்ட் பிரசன்டேசன்களில் பின்புல இசை கொடுக்க நீங்கள் புதிய இசையை தேடுபவரா நீங்கள் இங்கே செல்லுங்கள். இந்த தளத்தில் எந்தவித இசையாக இருந்தாலும் சரி ஒலியாக இருந்தாலும் சரி இங்கு கட்டாயம் கிடைக்கும்.   எந்தவித ஒலிக்கள் இங்கு உள்ளன என்பதை இவர்கள் இங்கு வரிசைப்படுத்திருக்கிறார்கள் சுட்டி
இணையத்தள சுட்டி

பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்ற


நீங்கள் வைத்திருக்கும் பவர் பாயிண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்றி யூட்யுபில் வெளியிட ஆசையா உங்களுக்கு இந்த மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றி தரும்.  பிறகு நேரடியாக யூட்யுப் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கினுள் நுழைந்து நீங்கள் மாற்றி வைத்திருக்கும் வீடியோ கோப்பை பதிவேற்றுங்கள் முடிந்தது. இனி உங்கள் பவர் பாயிண்ட் கோப்புகளை வீடியோவாக யூட்யூபில் பார்க்கலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

உலகின் முதல் யுஎஸ்பி திரை (USB Monitor)

நண்பர்களே உலகின் முதல் யுஎஸ்பி மானிட்டர் (Monitor) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெருமையை கொண்ட நிறுவனம் வன்தட்டுக்கள், டிவிடி ட்ரைவ்கள், மானிட்டர், டிவி, குளிர்சாதன பெட்டி போன்ற எண்ணற்ற வன் பொருட்கள் மற்றும் வீட்டு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனமான சாம்சங் நிறுவனம்தான். பழைய் முறை போன்ற VGA, DVI, HDMI போன்றவையும் இதில் இணைக்கப்பட்டிருக்கும்.



நீங்கள் உங்களுக்குப் பிடித்த தளங்களை புக்மார்க் (BookMark) செய்வீர்கள். அதுவே ஒரு  மென்பொருளில் செய்தாலும் அப்படித்தான்.   உங்களுக்கு பிடித்த தளங்களை வரிசை படுத்தினால் உதராணத்திற்கு ஷாப்பிங் தளங்களை ஷாப்பிங் மாலுக்குள்ளும், வீடியோ தளங்களை தியேட்டரினுள்ளும் வைத்தால் எப்படியிருக்கும் நினைத்துப் பாருங்கள்.  அதற்கு உதவுகிறது இந்த மென்பொருள் பேவரிட்ஸ்டவுண் (Favourites Town) .  பார்ப்பதற்கே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. மென்பொருள் தரவிறக்க சுட்டி



விண்டோஸ் XP உபயோகிப்பவர்கள் விண்டோஸ் 7 போல பார்டர்கள் அமைக்க ஆசைப்படுபவர்களுக்கு இந்த மென்பொருள் சுட்டி

நீங்கள் யாருக்காவது பரிசு தர நினைக்கிறீர்களா அதற்கு முன் இந்த தளத்தினுள் நுழையுங்கள் நீங்கள் என்ன வாங்கலாம் என்று உங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காகவே இந்த தளம் சுட்டி

படிக்கின்ற நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறுங்கள் இந்த வலைப்பூ வளர உதவியாக இருக்கும். உங்கள் ஒட்டுக்களையும் குத்துங்கள். அதுமட்டுமல்லாமல் படிக்கும் நண்பர்கள் பிடித்திருந்தால் விளம்பரங்களையும் கிளிக் செய்யுங்கள். இதுவரை ரீடரில் படித்து வருபவர்களுக்கும் நன்றி..

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சிதிலமடைந்த AVI கோப்புகளை இயக்க எளிய வழி

நண்பர்களே எத்தனை மீடியா மென்பொருட்கள் உபயோகிப்பது பாட்டு கேட்க விண்ஆம்ப் ஒன்று படம் பார்க்க விஎல்சி ப்ளேயர் ஒன்று புகைப்படம் பார்க்க இமெஜ் விவர் ஒன்று இது போன்ற எத்தனை மென்பொருட்கள்.  இத்தனை நிறுவுவதால் உங்கள் வன்தட்டில் இடம்தான் அடைத்திருக்கும். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக ஒரு மென்பொருள் உண்டு உங்களுக்காக இதோ

இந்த மென்பொருள் பெயர் KMPlayer கேஎம் ப்ளேயர்


ஆனால் எதனால் இந்த மென்பொருள் மிகவும் பிரபலாமாகவில்லை ஏன் என்று தெரியவில்லை.  இந்த மென்பொருளில் இல்லாத விசேஷமே இல்லை எனலாம். 

இது நீங்கள் தரவிறக்கிய AVI  கோப்பு Corrupt ஆனாலும் இயக்கக் கூடியது
ரியல் மீடியா, குயிக் டைம் போன்ற கோப்புகளும் இயக்கக்கூடிய திறமை படைத்தது


இவை ஆதரிக்கும் கோப்புகளின் வகைகள்

ASF/OGG/MP3/AAC/MPEG,avi, mkv, mov, mp4, 3gp, ogg theora, ogm, rmvb, mpeg1/2, vob, wmv, dvr-ms
DivX, XviD, Theora, WMV, MPEG-1, MPEG-2, MPEG-4, VP3, VP5, VP6, H263(+), H.264(AVC1), CYUY, ASV1/2, SVQ1/3, MSVIDC, Cinepak, MS MPEG4 V1/2/3, FFV1, VCR1, FLV1, MSRLE, QTRLE Huffyuv, Digital Video, Indeo3, MJPEG, MPNG SNOW, TSCC, Dirac, VC-1, RealVideo, SMC

இதுமட்டுமல்ல இது வேலை செய்ய குறைந்த நினைவகத்தையே (Ram Memory) எடுத்துக் கொள்கின்றது. இதைக்காட்டிலும் வேற என்ன வேண்டும்.




இதுமட்டுமல்ல இதன் சிறப்பம்சங்களை கருதி உங்களுக்காக தனி ஒரு கோப்பாக இணைத்துள்ளேன். சுட்டி

இந்த மென்பொருளின் தரவிறக்க சுட்டி




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை