விகடனில் என்னுடைய பதிவு

நண்பர்களே என்னுடைய பதிவு முதல் முறையாக விகடன் குழுமத்தினருடைய யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது.   என்னுடைய படைப்பை வெளியிட்டமைக்கு விகடன் குழுமத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



வெளிவந்த பதிவு - சுட்டி
பதிவின் சாராம்சம் - மல்டிபிள் போல்டர்கள் கிரியேட் செய்ய எளிய வழி
சுட்டி
இது வரை என்னை பதிவுலகில் வீறு நடை போட வைத்த அனைவருக்கும் நன்றி  நேரடியாக பதிவுக்கு வராமால் ரீடர் மூலமாக படிப்பவர்களுக்கும் நன்றி
மின்னஞ்சல் மூலம் படிப்பவர்களுக்கும் நன்றி. இது வரை ஒரு பின்னூட்டமாவது அளித்து என்னை உற்சாகப்படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
 
அடுத்த பதிவு 250வது பதிவு






நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அனைவருக்கும் உதவும் இணையத்தளங்கள்

நண்பர்களே நாம் அலுவலகத்தில் பேப்பர் உபயோகிக்கும் பேப்பர் வெள்ளை பேப்பர்  A4 அளவில் உபயோகிப்போம்.  அதே நாம் குழந்தைகளுக்கு பரிட்சைக்கு பேப்பர் வாங்கினால் அதில் ஒரு பக்கம் மார்ஜின் கோடு போட்டும் இருக்கும்.  இது போல் நிறைய அளவுகள் கோடுகள் கொண்ட பிரிண்ட் செய்யக்கூடிய பேப்பர்கள் இந்த வலைத்தளத்தில் கிடைக்கிறது. சுட்டி 



நாம் கணிணியில் வேலை செய்யும் வேலைகளை படம்பிடித்து நேரடியாக மின்னஞ்சலுக்கு அனுப்பவும் ட்விட்டர் வழியாக பகிர்ந்து கொள்ளவும் இந்த தளம் உதவிகரமாக இருக்கும்.  இந்த தளத்தில் நீங்கள் கணிணியில் சவுண்டு கார்ட் இணைத்திருந்தால் ஒலியும் இதில் பதிவாகும்.  இதை நேரடியாக உங்கள் அல்லது நண்பர்களின் மெயிலுக்கு அனுப்பலாம்.  ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.  இதற்காக நீங்கள் எந்தவொரு மென்பொருளும் நிறுவத் தேவையில்லை. ஒளி ஒலி தரமும் மிகவும் தரமானதாக இருக்கிறது.
இணையத்தள சுட்டி



நம்மவர்களுக்கு தினமும் காலை செய்திதாளில் உள்ள முதல் பக்கத்தை படிக்கவில்லை என்றால் அன்றைய பொழுது போகவே போகாது. அது போல் நாம் உலகத்தில் வெளியாகும் அனைத்து செய்திதாள்களின் முதல் பக்கத்தையும் பார்க்க இந்த இணையத்தளம் உதவுகிறது.  இதில் அனைத்து மொழிகளும் நம் தமிழ் மொழி செய்தித்தாளும் உண்டு.  சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஜிமெயிலில் இருந்து திரும்ப ஜிமெயில் பீட்டா செல்ல எளிய வழி

நண்பர்களே கூகிள் நிறுவனத்தில் இருந்து இன்னும் ஒர் புதிய வெளீயிடாக கூகிள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிடயிருக்கிறார்கள்.  இந்த வெளியீடு 2010 முதல் காலாண்டிற்குள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதுமட்டுமல்லாமல் இதுவரை ஜிமெயில், கூகிள் டாக்ஸ், கூகிள் காலண்டர் ஆகியவை  பீட்டா பதிப்பிலிருந்து வெளியே வந்து விட்டது இனி ஜிமெயில் பீட்டா இல்லை ஜிமெயில் மட்டும்தான்.

அப்படியே உங்களுக்கு ஜிமெயில் பீட்டா வேண்டுமென்றால் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து மேலே லேப்ஸ் என்பதை கிளிக் செய்யுங்கள்.




பின்னர் Back to Beta என்பதை தேடி அதை Enabled செய்யுங்கள்.  இனி உங்களுடையது ஜிமெயில் பீட்டாக மாறிவிடும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

கணிணியில் வேலை செய்து கொண்டே வீடியோ பார்க்கலாம் ?????

நண்பர்களே இணையத்தில் எத்தனை முறை வீடியோ பார்த்திருப்போம்.  ஆனால் வீடியோ பார்க்கும் போது உங்கள் வேலைகளை செய்ய இயலாது.  ஏதாவது ஒன்றுதான் இயலும் ஒன்று வீடியோ பார்க்க வேண்டும் அல்லது வேலை செய்ய வேண்டும்.  நீங்கள் வீடியோ பார்த்துக் கொண்டு உங்கள் வேலைகளையும் செய்ய ஆசைப்படுகிறீர்களா????? 
உங்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி 
அது மட்டுமில்லை இந்த மென்பொருள் மூலம் இணைய வீடியோ மட்டுமில்லாமல் நீங்கள் உங்கள் கணிணியில் சேமித்து வைத்திருக்கும் வீடியோக்களையும் பார்க்கலாம்..
இந்த மென்பொருளை நிறுவி விட்டு நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவின் லிங்க்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள் பின்னர் நேரடியாக படம் பார்க்க இயலும் அந்த நேரத்தில் நீங்கள் எக்ஸல், வேர்ட், எந்த கோப்புகள் வேண்டுமோ திறந்து வேலை செய்யுங்கள். 
மேலும் தெரிந்து கொள்ள மென்பொருளின் இணையத்தளம் சுட்டி

 
உங்கள் ஒட்டுக்களை தமிழிசிலும் தமிழ் மணத்திலும் குத்துங்கள்.  அப்படியே கீழே மேலே உள்ள விளம்பரங்களையும் கிளிக் செய்து எங்களுக்கு ஒரு காபி குடிக்க உதவி செய்யுங்கள்.




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை