ஐபிஎல் 20 20 ஆன்ட்ராய்ட் ஐபோன் ஐபேடு விண்டோஸ் போன் மென்பொருட்கள் இலவசமாக

நண்பர்களே ஐபிஎல் 5 கிரிக்கெட் இன்று கோலாகலமாக இன்று தொடங்குகிறது.  முறைப்படி நாளைதான் கிரிக்கெட் மேட்சுகள் தொடங்குகின்றன.  இன்று தொடக்க விழா மட்டுமே சென்னையில் நடத்தப்படுகிறது.  இவ்வாறு இருக்கையில் அனைத்து போட்டிகளையும் நம்மால் தொடர்ந்து டிவியில் பார்க்க முடியாது.  ஆனால் மொபைல் மூலம் ஸ்கோர் விவரங்கள் தெரிந்து கொள்ள முடியும்.  இப்பொது உள்ள ஆன்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கான ஐபிஎல் 5 கிரிக்கெட் ஸ்கோர் IPL 5 அப்ளிகேசன்கள் சிலவற்றை இங்கே பதிவிட போகிறேன்.  அப்ளிகேசன் வேண்டும் என்பவர்கள் தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளவும். 

விண்டோஸ் குறித்த நகைச்சுவை புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு சுட்டி

இந்த பதிவின் மூலம் என் பதிவு 450ஐ தொடுகிறது இது அனைத்திற்கும் உதவிய பதிவர்கள் திரட்டிகள் வாசகர்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  அனைவரும் தொடர்ந்து ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.  அத்துடன் சில விம்பரங்களையும் சுட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  

DLF IPL 2012

இந்த மென்பொருள் ஐபிஎல் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட மென்பொருளாகும்.  இந்த மென்பொருளில் கிரிக்கெட் மேட்சின் ஸ்கோர், முடிந்த விளையாட்டுகளின் முடிவுகள் Results, Match Schedule, கால அட்டவணை போன்றவை இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியின் பற்றிய விரிவான குறிப்புகளுடன் அந்த அணியின் வீரர்களுடைய விபரங்களும் இடம் பெற்றுள்ளது.

முடிந்த விளையாட்டுகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகளும் இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம.

 DLF IPL 2012 ஆன்ட்ராய்ட் மென்பொருள் தரவிறக்க சுட்டி

IPL Live Streaming

இந்த ஆன்ட்ராய்ட் மென் பொருள் மூலம் கிரிக்கெட் மேட்சுகளை நேரடியாக காணலாம்.

(குறிப்பு ) உங்கள் மொபைல் போன்களில் அடோப் ப்ளாஷ் ப்ளெயர் ஆதரிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

IPL Live Streaming மென்பொருள் தரவிறக்க சுட்டி

IPL CALENDAR

இந்த மென்பொருள் மூலம் ஐபில் கால அட்டவணைகள் முழுவதும் தெரிந்து கொள்ள முடியும்.  அது மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த அணி விளையாடும் அன்று உங்களுக்கு ஞாபகமூட்டுமாறும் Remainder Set செய்யலாம்.

IPL CALENDAR மென்பொருள் தரவிறக்க சுட்டி

IPL INDIATIMES

இந்த மென்பொருள் இந்தியாடைம்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மென்பொருளாகும்.  இது ஆன்ட்ராய்ட் மென்பொருள் அல்ல விண்டோஸ் மொபைலுக்கான மென்பொருள்.  விண்டோஸ் மொபைல் உபயோகிக்கும் அனைவருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும். 

விண்டோஸ் மொபைலுக்கான ஐபில் மென்பொருள் தரவிறக்க் சுட்டி


IPL 2012

இந்த மென்பொருளும் விண்டோஸ் மொபைலுக்கான மென்பொருளாகும்.
இந்த மென்பொருள் மூலம் ஐபில் கால அட்டவணைகள் முழுவதும் தெரிந்து கொள்ள முடியும்.  அது மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த அணி விளையாடும் அன்று உங்களுக்கு ஞாபகமூட்டுமாறும் Remainder Set செய்யலாம்.

ஐபிஎல் 2012 மென்பொருள் தரவிறக்க சுட்டி

ஐபோன்  மென்பொருள் கீழே கொடுத்துள்ளேன்

IPLT20
 

இந்த மென்பொருள் ஐபிஎல் நிறுவனத்தால் நேரடியாக வெளியிடப்பட்ட மென்பொருளாகும். 

இந்த மென்பொருள் ஐபிஎல் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட மென்பொருளாகும்.  இந்த மென்பொருளில் கிரிக்கெட் மேட்சின் ஸ்கோர், முடிந்த விளையாட்டுகளின் முடிவுகள் Results, Match Schedule, கால அட்டவணை போன்றவை இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியின் பற்றிய விரிவான குறிப்புகளுடன் அந்த அணியின் வீரர்களுடைய விபரங்களும் இடம் பெற்றுள்ளது.

முடிந்த விளையாட்டுகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகளும் இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம.

ஐபோன் மற்றும் ஐபேடிற்கான IPLT20 மென்பொருளை தரவிறக்க சுட்டி


ஐபேடுக்கான  மென்பொருள்


ஐபேடுக்கான மென்பொருள் IPL Mania for IPAD






நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

F-Droid Vs Google Play

நண்பர்களே இன்றைய உலகில் போனில் அதிக அளவு விற்பனையாவது ஸ்மார்ட் போன்கள் அதுவும் ஆன்ட்ராய்டு வகை போன்கள் மிக அதிகமாக விறபனையாவதை அனைவரும் அறிந்ததே. ஆன்ட்ராய்ட் ஒரு இலவச இயங்குதளமாகும்.  இந்த வகை இயங்குதள போன்களுக்கு என்று வைத்திருந்த கூகிளின் ஆன்ட்ராய்ட் மார்கெட்டினை கூகிள் ப்ளே என்று பெயர் மாற்றியது சில நாட்களுக்கு முன்புதான் என்பதையும் அறிவீர்கள்.  சரி இந்த வகை ஆன்ட்ராய்ட் இயங்குதள போன்களுக்கு கூகிள் ப்ளே மட்டும்தான் உள்ளதான் என்று பார்த்தால் கூகிளை போன்ற சில தளங்கள் இருக்கதான் செய்கின்றன இதில் ஒரு தளத்தின் எப் ட்ராய்டு  F-Droid.     F-Droid
இந்த தளத்தில் என்ன ஒரு சிறப்பு என்று பார்த்தால் இதில் உள்ள அனைத்து அப்ளிகேசன்களும் இலவசமானவை மட்டுமே.  அதுவும் அனைத்தும் Full Version ஆக கிடைக்கிறது. 


அது மட்டுமல்லாமல் F-Droid நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் பிரவுஸர் வழியாக F-Droid இணையத்தளத்தில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை தேடி உங்கள் மொபைலுக்கு தரவிறக்க  முடியும்.
Android Vs F-Droid
இந்த தளத்தின் மூலம் வெளியிடப்படும் அப்ளிகேசன்கள் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலுக்குள் நிறுவி விட்டாலே ஒவ்வொரு முறையும் தானாக அப்டேட் செய்து கொள்ளும்.

 இந்த தளத்திற்கு செல்ல சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பல் துலக்கும் பேஸ்ட் அனைவருக்கும் இலவசமாக



நண்பர்களே சில நாட்களுக்கு முன் இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக வீட்டு உபயோக பொருட்கள் என்று ஒரு பதிவிட்டிருந்தேன் அது நிறைய நண்பர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும்.

அது போல இதோ ஒரு புதிய இலவசமாக பல் துலக்கும் பேஸ்ட் இலவசமாக உங்களுக்காக வழங்குகிறார்கள்.  கோல்கேட் சென்ஸிடிவ் ப்ரோ ரீலிஃப் Colgate Sensitive Pro-Relief  80கிராம் பேக் இலவசமாக வழங்குகிறார்கள்.
கோல்கேட் பேஸ்ட்
நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி,  வீட்டு முகவரி போன்றவை மட்டுமே அவ்வளவுதான் உங்கள் வீடு தேடி வரும் உங்களுக்கான Colgate Sensitive Pro Relief 80கிராம் பேக்.  இந்த டூத் பேஸ்ட் குறித்த வீடியோ கீழே


வீடியோ தெரியவில்லை என்றால் இங்கு கிளிக் செய்யவும் சுட்டி

இது இரண்டாவது முறையாக அனைவருக்கும் இலவசமாக வழங்கபடுகிறது.  இதற்கு முன் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 

இலவசமாக பேஸ்ட் பெற சுட்டி

இந்த வலைமனை தொடர்ந்து எழுதுவதும் எழுதவைப்பதும் உங்களின் தொடர்ந்து ஆதரவினால் மட்டுமே. உங்கள் ஆதரவும் பின்னூட்டங்கள்  தொடர்ந்து எங்களுக்கு வேண்டும். 


விரைவில் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.





நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

BSNL பிராண்ட்பேண்ட் இணைய வேகத்தை கண்டறிய

நண்பர்களே இந்தியாவில் இணைய சேவை கொடுப்பதில் முண்ணணி நிறுவனமாக BSNL இருக்கிறது. இதன் இணைய சேவையை பயன்படுத்தும் பலருக்கு இதன் வேகம் நாம் தேர்வு செய்த திட்டத்தின் படி வருகிறதா என்பது தெரியாது. இணைய வேகம் என்பது சர்வரின் செயல்திறன், இணைந்துள்ள கணிணிகள், நமது கணிணியின் ஹார்ட்வேர் போன்றவற்றைப் பொறுத்து சில நேரம் கூடலாம் அல்லது குறையலாம். இணைய வேகத்தை அளவிட Speedtest.net போன்ற இணையதள சேவைகளைப் பயன்படுத்திப் பார்ப்போம்.


ஆனால் இணைய வேகத்தை அளவிட BSNL சர்வர்களை வைத்தே சரிபார்த்தால் வேறு வழிகளில் அளவிடுவதை விட துல்லியமாக இருக்குமல்லவா? இதற்கு தான் BSNL தற்போது Bandwidth Meter என்ற இணைய சேவையை கொண்டு வந்துள்ளது. இதில் நீங்கள் இணைய வேகத்தை அளவிட உங்கள் இணையக் கணக்கு பற்றிய விவரங்களை ஏதும் கொடுக்கத் தேவையில்லை. கீழிருக்கும் மூன்று சுட்டிகளில் கிளிக் செய்தாலே உங்கள் இணைய வேகம் அளவிடப்படும்.



இதில் உங்கள் ஐபி எண் (IP number) ,  கொடுக்கப்படும் Bandwidth அளவு, ஒரு விநாடியில் கிடைக்கும் டவுன்லோடு வேகம் ஆகியவை பட்டியலிடப்படும். இதன் மூலம் உங்களின் சரியான இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் எங்கிருப்பினும் BSNL இணையம் வைத்திருப்பவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.



இன்றைய பதிவினை எழுதியிருப்பது  செல்வி. பொன்மலர் அவர்கள்  நம் தளத்தில் அவ்வப்போது புதிய பதிவுகள் மற்றும் புதிய எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  இவரை பற்றியும் இவர் வலைபதிவை பற்றியும் தெரியாதவர்கள் யாரும் அறியாமல் இருக்க முடியாது.  இவர் எழுதிய பல பதிவுகள் பலருக்கு மிகவும் உபயோகமாக இருக்குமாறுதான் இவர் எழுதுவார்.  இவர் வலைப்பூவிற்கு செல்ல சுட்டி


இந்த வலைமனை தொடர்ந்து எழுதுவதும் எழுதவைப்பதும் உங்களின் தொடர்ந்து ஆதரவினால் மட்டுமே. உங்கள் ஆதரவும் பின்னூட்டங்கள்  தொடர்ந்து எங்களுக்கு வேண்டும். 


விரைவில் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை