ஐபேடிற்கான விஎல்சி ப்ளேயர் மற்றும் Wondershare டிவிடி ரிப்பர் MP3 தேடியந்திரம் தரவிறக்க

நண்பர்களே ஐபேட் வெளிவந்து சக்கை போடு போடுகின்றது.  அனைத்து மென்பொருட்களும் ஐபேடில் உபயோகிக்க முடியாது.  அவர்கள் ஆதரவு அளிக்கும் மென்பொருட்கள் மட்டுமே உபயோகபடுத்த முடியும்.  அனைத்து வகை வீடியோ ஆடியோ கோப்புகளையும் ஐபேடில் பார்க்க கேட்க விஎல்சி ப்ளேயர் இப்பொழுது ஐபேடிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

 டிவிடி ரிப்பர் மென்பொருள்

வொன்டர்ஷேர் நிறுவனத்தின் டிவிடி ரிப்பர் மென்பொருள்.   முற்றிலும் இலவசமாக 3500 ` மதிப்புள்ள மென்பொருள் இது.

இந்த மென்பொருளின் சிறப்பியல்புகள்

டிவிடி வீடியோவை பின்வரும் கோப்புகளாக மாற்ற முடியும்.  MP4, MPG, WMV, FLV, SWF

உயர்தர வீடியோ (HD), வீடியோ கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை சாதராண வீடியோவாக மாற்ற முடியும்.

வீடியோ டிவிடிக்களை இந்த வகை கோப்பாகவும் மாற்றலாம். QuickTime, iMovie, iDVD, iTunes, Final Cut Pro, Adobe Premiere Pro.
இது போல் எண்ணற்ற சிறப்பியல்புகள் கொண்டது.

இந்த இலவசமாக வழங்கும் சலுகை செப்டம்பர் 20 - 26 வரை மட்டுமே.  முடிந்தவரை விரைவாக தரவிறக்குங்கள்.  அத்துடன் பேஸ்புக்கில் நீங்கள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இதை தரவிறக்க முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி

எம்பி3 தேடியந்திரம்

அனைவருக்கும் பிடித்த எம்பி3 பாடல்கள் கேட்க ஒரு தளம் தரவிறக்க ஒரு தளம் என்று உபயோகிப்பார்கள் ஆனால் இது இரண்டு மட்டுமல்லாம் எம்பி3யை தேடி தந்து நாம் விருப்பபட்டால் அந்த தளத்திலேயே அந்த பாடலை கேட்டு வேண்டும் என்றால் அந்த தளத்திலேயே தரவிறக்கம் செய்தால் எப்படியிருக்கும்.  இதைதான் செய்கிறது இது எம்பி3யை தேடும் தேடியந்திரமாகவும் தேடிய பாடல்களை இசைக்கும் தளமாகவும்  தேடிக் கேட்ட பாடல்களை தரவிறக்கும் தளமாகவும் இயங்குகிறது.  ஆங்கிலம் தமிழ் இந்த அனைத்து மொழிகளிலும் இருந்து பாடல்கள் தேட முடிகிறது.   இது இசை பிரியர்களுக்கான தளம் என்றால் மிகையில்லை.  இணையத்தள சுட்டி
 

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ASCII அனிமேட்டர் மற்றும் VLCல் ஸ்கின் மாற்றுவது எப்படி?

நண்பர்களே அனைத்து வகை வீடியோ ஆடியோ கோப்புகளையும் நாம் விஎல்சி மீடியா ப்ளேயர் மூலம் கண்டு களித்திருபோம்.  ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரிதான் விஎல்சி ப்ளேயர் இருக்கும். இதை எவ்வாறு நமக்கு பிடித்த ஸ்கின்களை விஎல்சி மீடியா ப்ளேயரில் கொண்டு வருவதை பற்றி இங்கு கூறுகிறேன்.

விஎல்சி மீடியா ப்ளேயர் வித விதமான ஸ்கின்களை கொண்டு வர இங்கு இருந்து ஸ்கின்களை தரவிறக்கிக் கொள்ளுங்கள். சுட்டி 

முதலில் தரவிறக்கிய கோப்புகளை விரித்து ( Unzip ) வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு விரித்த கோப்புகளை C:\Program Files\VideoLAN\VLC\skins என்ற போல்டரில் காப்பி செய்து கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் விஎல்சி ப்ளேயரை திறந்து கொள்ளுங்கள். அதில் Tools கிளிக் செய்து வரும் Preference தேர்வு செய்யுங்கள்.


அதில் Interface என்பதனை தேர்வு செய்தால் வலது பக்கம் Use Custom Skin  என்பதை தேர்வு செய்து எந்த ஸ்கின் வேண்டுமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். 


இனி உங்களுக்கு பிடித்த ஸ்கின் உங்கள் விஎல்சி வீடியோ ப்ளேயரில்.

எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற

உங்கள் எக்ஸல் கோப்புகளை CSV கோப்பாக மாற்ற ஒரு சிறு மென்பொருள் தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் எக்ஸல் 97, 2000, 2003, 2007 வகைகளை ஆதரிக்கிறது.

ஒரே நேரத்தில் பல கோப்புகளை CSV கோப்பாக மாற்றி தரும்.


இந்த மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில்  டாட் நெட் ப்ரேம் வொர்க் 3.5 எஸ்பி 1 நிறுவி இருக்க வேண்டும். அப்படி நிறுவவில்லையெனில் Dot Net Frame Work 3.5 SP1 இங்கிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள். சுட்டி



GIF கோப்பிலிருந்து ASCII GIF கோப்பாக மாற்ற


உங்களிடம் .GIF கோப்பை ASCII .GIF ஆக மாற்ற ஒரு சிறு மென்பொருள் இதன் மூலம் சாதராண GIF கோப்பு  எழுத்துக்கள் எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்களுடன் ASCII கோப்பாக மாற்ற முடியும்.  பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். தரவிறக்க சுட்டி  இந்த மென்பொருளை நிறுவவும் டாட் நெட் வேண்டும்.





நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை