ஜியோ ஐபி வெதர் மற்றும் வேர்ட் டிப்ஸ்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே மைக்ரோசாப்ட் வேர்டில் நேரடியாக ஒரு வார்த்தையை Capital Letter & Small Letter ஆக மாற்ற முதலில் அந்த வார்த்யை தேர்ந்தெடுத்து ஷிப்ட் + எப்3 ( Shift + F3 ) அழுத்தினால் போதும் இது போல ஒரு பத்தி ஒரு பக்கத்தையும் மாற்ற உபயோகப்படுத்தலாம்.



உங்கள் கணிணியில் அன்றைய வானிலையை தெரிந்து கொள்ள என்ன செய்வோம்.  கூகிளில் தேடுவொம் பிறகு அதில் எந்த நாட்டில் எந்த மாநிலத்தில் என்று தேர்வு செய்வோம். பிறகுதான் நமக்கு அன்றைய வானிலை தெரிய வரும்.  இதற்கு இந்த சுட்டியை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.  சுட்டி  இது எப்படி செயல்படுகிறது என்றால் உங்களுடைய ஐபியை அடிப்படையாக வைத்து நீங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்தின் வானிலையை காட்டுகிறது.  உங்களுக்கு குறிப்பிட்ட இடத்தின் வானிலை வேண்டுமானாலும் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.  அன்றைய இரவு எப்படி இருக்கும் என்றும் இந்த தளம் மேகமூட்டம் அதிகமாக இருக்குமா அல்லது குறைவாக இருக்குமா என்றும் தெரிவிக்கிறது.  இந்த தளம் செல்ல சுட்டி


நீங்கள் ஒரு வீடியோ கோப்பு தரவிறக்கும் பொழுது அதை பார்க்க முடியாது அது முழுவதும் தரவிறக்கிய பிறகே பார்க்க முடியும்.  நீங்கள் தரவிறக்கும் வீடியோ சரியானதுதான என்று தரவிறக்கும் பொழுதே ப்ளே செய்து பார்க்க இந்த மென்பொருள் உபயோகப்படுகிறது.  சுட்டி

இந்த மென்பொருள் மூலம் வீடியோ தரவிறக்கும் பொழுது பார்ப்பதால் தரவிறக்கும் செயல் பாதிக்கப்படாது.


இந்த மென்பொருள் P2P மற்றும் FTP தளங்களில் சோதிக்கப்பட்டது.

இது முழுவதும் இலவசம்.

ஏமாற்றும் அடாவடிக் கும்பல்


இதை என்ன வென்று சொல்வது இதற்கு ஒரு பதில் எங்கிருந்து கிடைக்கும்.  இதை செய்ய போவது யார்?  எங்கு சொல்வது?  நண்பர்களே ஐந்தாம் தேதி காலை வெளியூர் செல்வதற்காக சென்னை சிஎம்பிடி CMBT Bus Stand வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கொடுத்த சீட்டு.நிறைய பொது மக்கள் இது போல ஏமாற்றம் அடைகின்றனர்.  அத்துடன் நேரம் அதிகமான காசு மட்டும் வாங்குகிறார்கள். அதற்கு சீட்டு கொடுப்பதில்லை இதற்கெலாம். யார் காரணம்.  அத்துடன் இந்த சீட்டில் குத்தகை எடுத்தவர் பெயரும்  இல்லை அப்படியானால் இதை அரசே நடத்துகிறதா? அப்படி என்றால் இதனுடைய அரசாங்கத்திற்கு செல்கிறதா?  இதுவரை  ட்ராபிக் ராமசாமி கண்களில் இது தெரியவில்லை அவருக்கு தெரிந்திருந்தால் ஒரு பொது மன நல வழக்கு போட்டிருப்பார்?????  பார்ப்போம்   நிறைய நல்ல விஷயங்கள் பதிவர்களிடம் இருந்து நடப்பதால் இதற்கு ஒரு வழி காட்டுங்கள் பதிவர்களிடம் இருந்து என்ன பதில் வருகிறது.  உங்கள் பதிலில்தான் இதை எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று யோசிப்பேன்....

முடிந்தால் ஒரு பிரதி எடுத்து உங்கள் வலைப்பதிவில் பிரசுரிக்கவும்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இணைய இணைப்பு வேகமாக்க - கூகிள் பழைய உலாவிக்கு தடை

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே நீங்கள் ஆன்லைனில் வீடியோ பார்க்கம் பொழுது நின்று நின்று வரும் ஏன் என்றால் நம் கணிணி இணைப்பு வேகம் மிகவும் மெதுவாக இருப்பதால் நமக்கு இது போல் வரும்.  அதற்கு என்ன செய்வது நாம் இந்த தளம் செல்லுங்கள்.  சுட்டி  இந்த தளத்தில் அவர்கள் கொடுக்கும் மென்பொருளை எவ்வாறு நிறுவுவது என்று கூறுவார்கள்.  அதன் பிறகு பாருங்கள் உங்கள் இணைய இணைப்பு வேகத்தை நன்றாக வேகமாக இருகும்.  நான் என் கணிணியில் சோதித்ததில் என் இணைய இணைப்பு வேகம் 8 எம்பிஎஸ் ஆனால் தரவிறக்கும் வேகம் 5 எம்பிஎஸ் ஆக இருந்தது இந்த மென்பொருள் நிறுவிய பிறகு  தரவிறக்கும் வேகம் 7 எம்பிஎஸ் ஆக மாறியது.  நீங்களும் முயற்சித்து பாருங்கள்  ஏன் என்றால் இப்பொழுதுதான் முழு நீள இந்தித் திரைப்படங்கள் யூட்யூபில் கிடைக்கின்றதே..



நமக்கு ஆடியோ ப்ளேயர் என்றவுடன் விண் ஆம்ப் என்பது நினைவுக்கு வரும்  அந்த அளவுக்கு அது அனைவரின் மனதில் இடம் பிடித்துள்ளது.  அதை போல நிறைய ஆடியோ ப்ளேயர் வந்தாலும் சில நாடுகளில் மிகவும் பிரபலமான விண் ஆம்பிற்கு மாற்று ஆடியோ ப்ளேயர்கள்  சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.  கீழுள்ள அனைத்தும் MP3, AAC/M4A, OGG, WMA*, MPC, APE, FLAC, WAV.  பார்மெட்டுகள் ப்ளே செய்யக்க கூடியவை.

மீடியா மன்கி (Media Monkey)

குயிக் எசன்டல் மீடிய ப்ளேயர்  (Quick Essential Media Player)


சாங்பேர்ட் (Song Bird)


ம்யூசிக் க்யூப் (Music Cube)


அம்ராக்  (Amrok)


பூபார் 2000 (Foobar 200)
 

எக்எஸ்எம் ப்ளே  (XM Play)


பில்லி (Billi) (இது பில்லி சூனியம் வகையறா இல்லை)


சோனிக்யு ப்ளேயர் (Sonique Player)


கூகிள் சிறு செய்தி

கூகிள் தான் அளித்து வந்த இதுவரை பழைய வலை உலாவிகளுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்ள போகிறது.  இனி கூகிளின் அனைத்து அப்ளிகேசன்களும்  இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 +, நெருப்பு நரி உலாவி 3.0 +, கூகிள் குரோம் 4.0+,  சபாரி 3.0+  இதற்கு மட்டுமே ஆதரவு அளிக்கும்.  இதனால் பழைய வலைஉலாவிகளில் அனைவரும் விரைவில் தங்களுடைய கணிணியில் உள்ள புதிய வலை உலாவிகளுக்கு மாறுவது உள்ளது.



படிக்கும் நண்பர்கள் சில பல விளம்பரங்களை கிளிக் செய்து உதவி செய்யுங்கள்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பிடித்த பாடல்களின் ப்ளேலிஸ்ட் உருவாக்க

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி


நண்பர்களே நம் கூகிள் நிறுவனத்தின் கூகிள் டாக்ஸ் செல்ல நமது இணைய உலாவியை திறந்து பிறகு http://docs.google.com என்று டைப் செய்து பிறகு அதனுள் நம் கூகிள் கணக்கினுள் நுழைந்த பிறகே நம்மால் நம்முடைய சாதராண டெக்ஸ்ட் கோப்புகளை அணுக முடியும்.  இதே நம் கணிணியின் டெஸ்க்டாப்பில் இருந்து கொண்டு கூகிள் டாக்ஸில் சேமித்து வைத்திருக்கும் சாதராண டெக்ஸ்ட் கோப்புகளை அணுக இந்த மென்பொருள் மூலம் முடியும்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


நாம் நிறைய முறை நம் கணிணியில் எம்பி3 பாடல்கள் இயக்க ஏதாவது ஒரு மென்பொருள் வழியாக இயக்கி பாடல் கேட்போம்.  இவ்வாறு நமக்கு பிடித்த பாடல்களை ப்ளேலிஸ்டாக சேமித்தும் வைத்துஇருப்போம். அந்த மென்பொருள் வழியாக சேமிப்பது உங்களுக்கு முடிய வில்லை என்றால் அதற்கு ஒரு எளிய மென்பொருள் உள்ளது.  தரவிறக்க சுட்டி இது ஒரு திறந்த நிலை மென்பொருளும் கூட.


முதலில் இந்த மென்பொருளை நிறுவி திறந்து கொள்ளுங்கள்.   அதில் எங்கு பாடல்களை வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை தேர்ந்தெடுங்கள்.  பிறகு ஒகே கொடுங்கள்.  எந்த போல்டரை தேர்ந்தெடுத்தீர்களோ அங்கேயே ஒரு m3u என்ற கோப்பு உருவாகி இருக்கும்.  அதுதான் அந்த பாடல்களின் ப்ளேலிஸ்ட். இனி நேரடியாக இந்த ப்ளேலிஸ்ட் மூலம் பாடல்களை உங்களுக்கு பிடித்த பாடல்களை இயக்கலாம் நேரடியாக.

படிக்கும் நண்பர்கள் சில பல விளம்பரங்களை கிளிக் செய்யுங்கள் உதவியாக இருக்கும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வண்ணங்கள் மூலமாகவும் புகைப்படங்கள் தேடலாம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே (FAX) பேக்ஸ் என்ற வார்த்தை ஒரு காலத்தில் மிகவும்  பிரபலமாக இருந்தது.  ஆனால் இன்றைய கணிணி உலகில் பேக்ஸ் என்ற வார்த்தை இன்றும் உயர்ந்து நிற்கிறது.  ஆனால் ஒரு பேக்ஸ் மெசினிலிருந்து இன்னொரு பேக்ஸ் மெசினுக்கு பேக்ஸ் அனுப்பும் காலம் போய் இணையத்தில் இருந்து உங்கள் கோப்பை நேரடியாக பேக்ஸ் மெசினுக்கு அனுப்பும் முறை வந்துள்ளது ஆனால் அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.  ஆனால் இலவசமாக எப்படி அனுப்புவது அதற்கு உதவும் இணையத் தளங்கள் எவை எவை என்றும்.  எப்படி இலவசமாக அனுப்புவது என்றும் பார்க்கலாம்.



முதலில் பேக்ஸ் பற்றிய சிலவற்றை காண்போம்.  பேக்ஸில் ஒரு ஸ்கேனர், ப்ரிண்டர்,  மற்றும்  மோடம்  உள்ளது.  முதலில் அனலாக் பேக்ஸ் மெசின் கண்டுபிடிக்கப்பட்டது.  பிறகு அதை மேம்படுத்தி தற்போதைய டிஜிட்டல் பேக்ஸ் மெசின் கண்டுபிடிக்கப்பட்டது.  முதல் பேக்ஸ் மெஷின் 1842ல் அலெக்ஸான்டர் பெய்ன் (Alexander Bain) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.  Facsimile machine என்பதன் சுருக்கமே Fax ஆகும். 

முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பேக்ஸ் மெசினின் புகைப்படங்களை இங்கு சென்று காணலாம்.  சுட்டி

முதல் பேக்ஸ் லண்டலிருந்து லிவர்புல் என்ற நகருக்கு அனுப்பபட்டது



இந்த புகைப்படத்தில் இருப்பவர் தான் அலெக்ஸான்டர் பெய்ன்.


இணையத்தில் இருந்து பேக்ஸ் அனுப்பு வசதி அமெரிக்க மற்றும் கனடாவில் மட்டுமே இந்த வசதி செயல்படுத்தப்படுகிறது. அதனால் மற்ற நாட்டினருக்கு பின் குறிப்பிடும் வசதி செயல்படாது.  இந்த வசதி வெகு வரைவில் இதர நாட்டினருக்கும் வரும் தூரம் வெகு அருகில் உள்ளது.

FaxZero

இந்த தளத்தின் மூலம் இணையத்தில் இருந்து இலவசமாக பேக்ஸ் அனுப்ப முடியும்.  ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டுமே  இலவசமாக அனுப்ப முடியும்.  ஆனால் இந்த வசதி அமெரிக்க கனடா வாழ் மக்களுக்கு மட்டுமே உபயோகபடுத்த முடியும். வேர்ட், மற்றும் பிடிஎப் கோப்புகளை ஏற்றுக் கொள்ளும்.  நேரடியாக செய்திகளை உள்ளீடு செய்யும் வசதியும் உண்டு.  கோப்புகளில் மூன்று பக்கங்கள் வரை அனுமதி உண்டு.




நிறைய நண்பர்களுக்கு கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று பாடுவார்கள் அந்த அளவுக்கு கருப்பு மேல் சிலருக்கு ஈடுபாடு இருக்கும்.  அவர்களுக்கு கருப்பு வெள்ளை படங்கள் தேட இந்த இணையத்தளம் உதவுகிறது.  அதுவும் பிளிக்கரில் உள்ள புகைப்படங்களில் இருந்து தேடி தருகிறது.  கருப்பு வெள்ளை படங்கள் மட்டும் அல்ல உங்களுக்கு பிடித்த வண்ணம் நீலம் என்றால் அந்த வண்ணத்தில் உள்ள படங்களை மட்டும் தேடி தருகிறது.  இது போல் பத்து வகையான வண்ணங்களை கலந்து புகைப்படங்களை தேட இதில் வசதி உண்டு. 



முதலில் இந்த தளத்திற்குள் செல்லுங்கள் சுட்டி

அங்கு வலது பக்கம் வண்ணங்கள் பகுதியில் உங்களுக்கு தேவையான வண்ணங்கள் தேர்ந்தெடுங்கள் அவ்வளவு தான் ஒவ்வொரு வண்ணங்களாக நீங்கள் தேர்ந்தெடுக்க தேர்ந்தெடுக்க படங்கள் மாறி மாறி உங்களுக்கு காண்பிக்கப்படும். 



நான் இங்கு மூன்று வகையான வண்ணங்கள் தேர்ந்தெடுத்துள்ளேன் பாருங்கள்.



இது போல உங்கள் புகைப்படங்களை தரவேற்றி அதில் உள்ள வண்ணங்களை வைத்தும் தேட முடியும் அவ்வாறு நீங்கள் தேட இங்கே செல்லுங்கள் சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை