கூகிள் குரோம் ஒஎஸ் வெளிவந்தது வாருங்கள் தரவிறக்க

நண்பர்களே பயாஸ் BIOS என்ன என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். கணிணி ஆன் செய்தவுடன் இதன் வழியாக தான் POST Power on Self Test நடக்கும் அதாவது சுய பரிசோதனை செய்து விட்டு கணிணி பூட் ஆகும். இந்த சுய பரிசோதனையின் போது அனைத்தும் சரியாக இருந்தால் ஒரு பீப் சத்தம் வந்து விட்டு கணிணி திரை தெரிய ஆரம்பிக்கும். இரண்டு பீப் சத்தம் வந்தால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம் இது போல் ஒவ்வொரு பீப் சத்தத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு.  பயாஸ் உருவாக்குவதில் மொத்தமே மூன்று நிறுவனங்கள்தான் இவர்களிடம் இருந்து வாங்கிதான் தங்கள் மதர்போர்டில் பொருத்துகிறார்கள்.  அந்த நிறுவனங்கள் ஒன்று ஐபிஎம், பீனிக்ஸ், ஏஎம்ஐ மட்டுமே.  இது போன்ற பீப் சத்தங்கள் வந்தால் என்ன அர்த்தம் எல்லோருக்கும் தெரியாது கணிணி வல்லுநருக்கு மட்டுமே புரியும். அனைவருக்கும் புரியும் வண்ணம் மிக அருமையாக விளக்கமாக ஒரு மென்பொருளில் கொண்டு வந்துள்ளனர். அந்த மென்பொருள் சுட்டி






நீங்கள் புதிய விஎல்சி ப்ளேயர் நிறுவி இருந்தால் இந்த வசதியை நீங்களும் உபயோகப்படுத்தலாம்.



டிவிடி ரிப் செய்ய முடியும். 

முதலில் Media என்பதனை தேர்வு செய்து அதில் Convert / Save என்பதை தேர்வு செய்யுங்கள்.  பிறகு Disk டேபை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு தேவையான டைட்டிலை தேர்வு செய்து உங்களுக்கு தேவையான பெயரை கொடுத்து Start என்பதை கிளிக் செய்யுங்கள் முடிந்தது.


கூகிளின் நிறுவனத்தின் அதிகாரபூர்வமற்ற கூகிள் குரோம் ஒஎஸ் வெளிவந்துள்ளது.



இந்த மென்பொருளை நிறுவுவதும் உபயோகப்படுத்துவதும் உங்கள் விருப்பமே எக்காரணத்தை முன்னிட்டும் எங்கள் நிறுவனம் இதற்கு பொறுப்பேற்காது.

தரவிறக்க சுட்டி

உங்கள் கணிணி ஆன் செய்து எவ்வளவு நேரம் ஆனது என்பதை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் உதவும் அது மட்டுமில்லை உங்கள் கணிணியை எந்த தேதியில் எந்த நேரத்தில் அணைக்க வேண்டும் என்பதை இந்த மென்பொருள் மூலம் செட் செய்து கொள்ளலாம். மென்பொருள் சுட்டி



இந்த பதிவுகள் அனைவரையும் சென்றடைய உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள். அது மட்டுமில்லாமல் சில விளம்பரங்களை கிளிக் செய்தால் இன்னும் உதவியாயிருக்கும் நண்பர்களே.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

விஜயதசமி சிறப்பு மென்பொருட்கள் உங்களுக்காக

நண்பர்களே இலவசமாக அதுவும் சட்டரீதியான லோகோ உருவாக்க வேண்டுமா?  லோகோ உருவாக்க வேண்டுமெனில் உங்களிடம் ஒரு லோகோ மென்பொருள் வேண்டும்.  ஆனால் லோகோ மென்பொருள் வாங்க வேண்டுமெனில் கையிலிருந்து காசு செலவழிக்க வேண்டும்.  காசு செலவழிக்க இயலதாவர்கள் தேவையில்லாமல் நச்சு நிரல்கள் நிறைந்த வலைத்தளத்திற்குள் சென்று உடைக்கப்பட்ட மென்பொருட்களை தரவிறக்குவார்கள்.  அவர்களுக்காக மட்டுமல்ல அனைவருக்கும் உதவும் ஒரு சிறந்த இலவச சட்டரீதியான லோகோ மேக்கர். தரவிறக்க சுட்டி



நம்மால் யூட்யூபிலிருந்து படத்தை தரவிறக்கத் தெரியும். அந்த தளத்திலிருந்து ஒலியை மட்டும் எம்பி3 ஆக தரவிறக்க தெரியும். ஆனால் நம்மிடம் உள்ள எம்பி3 கோப்பை எப்படி யூட்யூப் தளத்தில் பதிவேற்றுவது. அதற்கு ஒரு வழி உண்டு.  உங்களிடம் உள்ள எம்பி 3 கோப்பினை இந்த தளத்தினுள் உள்ளீடு செய்யுங்கள். அதற்கு முன் நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து இருக்க வேண்டும்.  பிறகு இவர்களின் தளத்தினுள் ஏதாவது ஒரு ஜேபிஜி கோப்பினை தரவேற்றுங்கள். பின்னர் உங்கள் எம்பி3 கோப்பினை தரவேற்றுங்கள். முடிந்தது உங்கள் எம்பி3 கோப்பு உங்கள் யூட்யூப் கணக்கினுள் ஏற்றப்பட்டிருக்கும்.

இணையத்தள சுட்டி



மாயா, 3டி ஸ்டூடியோ மேக்ஸ், ப்ளேன்டர், கொலடா போன்ற மென்பொருட்களில் உருவாக்கப்பட்ட கோப்புகளை பார்க்க இந்த மென்பொருள் உதவும். இந்த மென்பொருள் மூலம் பார்க்க முடிந்த கோப்புகளின் எக்ஸ்டென்சன்கள் OBJ, 3DS, STL, OFF 3D, COLLADA மற்றும் 3DXML
இந்த மென்பொருள் ஒரு திறந்த நிலை மென்பொருள். அது மட்டுமில்லாமல் இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் மேக் கணிணிகளிலும் இயங்ககூடியது.

மென்பொருள் தரவிறக்க சுட்டி





அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

போட்டோஷாப் இல்லாமால் புகைப்படத்தை அழகாக மாற்றலாம் வாருங்கள்

நண்பர்களே நம் எடுத்த புகைப்படங்களை மிகவும் கிரியேட்டிவிட்டியாக உருவாக்க யாருக்குத்தான் பிடிக்காது.  ஆனால் அது போன்று மிகவும் அழகானதாக்க உருவாக்க போட்டோஷாப் தெரிந்திருக்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டாம். போட்டோஷாப் தெரியாதவர்கள் கூட இந்த மென்பொருள் கொண்டு சில கிளிக்குகள் மூலம் மாற்றலாம். மென்பொருள் சுட்டி




பலவகையான பவர் பாயிண்ட்களை உருவாக்கி நமது வேலை திறமையை கொள்கைகளை திட்டங்களை தெரிவிக்க பெரிதும் உதவுவது மைக்ரோசாப்ட் பவர் பாயின்ட் மட்டுமே அதில் உள்ள டெம்ப்ளேட்டுகளை சிலருக்கு பிடிக்காது.  அவர்களுக்கு சில புதிய டெம்ப்ளேட்டுகள்

வலை மனை சுட்டி
வலை மனை சுட்டி
வலை மனை சுட்டி
வலை மனை சுட்டி
வலை மனை சுட்டி
வலை மனை சுட்டி

சிநெட் என்ற நிறுவனம் அனைவரும் தெரிந்த வலை மனையைக் கொண்டது. இந்த நிறுவனம் ஆயிரக்கணக்காண மென்பொருட்களை தன்னகத்தே கொண்டது. இவர்கள் ஒவ்வொரு மென்பொருளையும் தரமானவையா என்றும் வைரஸ், மால்வேர், ஸ்பைவேர் போன்ற தீங்கு நச்சுநிரல்கள் உள்ளவையா என்றும் சோதித்து அவர்கள் அதை பற்றி ஒரு கட்டுரை எழுதி வெளியிடுவார்கள். அத்துடன் அவர்கள் எழுதிய மென்பொருள் குறித்த கட்டுரையில் அந்த மென்பொருளுக்கான தரவிறக்கம் தருவார்கள்.  இது போல் தரப்படும் ஒவ்வோரு மென்பொருளையும் நிறுவிய பிறகு அப்டேட் செய்ய மறந்து விடுகின்றனர் உபயோகிப்பாளர்கள். அதனால் அவர்கள் ஒரு வழி செய்துள்ளனர். அதாவது நீங்கள் நிறுவிய மென்பொருள்கள் புதிய பதிப்பா என்று சோதித்து அறிய வழி செய்துள்ளனர் அவர்கள் தளத்தில். இதன் மூலம் நாம் சுலபமாக நாம் நிறுவிய மென்பொருட்கள் தரமானவையா என்று தெரிந்து கொள்ளலாம். தேவையானால் புதிய பதிப்புக்கு மாறிக் கொள்ளலாம். வலை மனை சுட்டி


இந்தியாவில் உள்ள பின்கோடுகளை தெரிந்து கொள்ள இலவசமாக ஒரு தளம் சுட்டி


யூட்யுபிலிருந்து GIF கோப்பிற்கு மாற்ற உதவும் தளம். சுட்டி
இந்த தளத்தினுள் சென்று உங்களுக்குத் தேவையான  யூட்யூப் முகவரியை காப்பி செய்து கொள்ளுங்கள் பின்னர் இந்த தளத்தினுள் இதை இடவும் பின்னர் CREATE என்பதை தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான் இனி உங்கள் யூட்யூப் வீடியோ GIF கோப்பாக மாற்றப்பட்டிருக்கும் தரவிறக்குங்கள்.





படித்து பிடித்திருந்தால் ஒரு பின்னூட்டமும் இட்டால் மிகவும் உற்சாகம் பிறக்கும் நண்பர்களே.

நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

உங்கள் கோப்புகளை மறைக்க சிறு மென்பொருள்

நண்பர்களே உங்கள் கோப்புகளை ஒரு புகைப்பட கோப்பினுள் அடைக்க சிறு மென்பொருள்.  இந்த மென்பொருளை நிறுவி இதை இயக்கினால் Input என்ற இடத்தில் நீங்கள் எந்த போல்டரில் உள்ள கோப்புகளை மறைக்க போகீறீர்களோ அந்த போல்டரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பிறகு எந்தெந்த கோப்புகள் வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். Output என்ற இடத்தில் என்ன புகைப்பட பெயர் வேண்டுமோ தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். பாஸ்வேர்டு கொடுப்பதாக இருந்தால் கொடுத்துக் கொள்ளுங்கள் கடைசியில் Hide ME என்ற பொத்தானை அழுத்துங்கள் முடிந்தது. உங்கள் கோப்புகள் இனி நீங்கள் தேர்ந்தெடுத்த புகைப்படத்தினுள் மறைக்கப்பட்டிருக்கும். இது ஒரு திறந்த நிலை மென்பொருளும் கூட. மென்பொருள் சுட்டி




வேலைப்பளு அதிகம் இருப்பதால் நிறைய எழுத முடியவில்லை நிறைய மென்பொருட்கள் உள்ளன.  அதை வெகு விரைவில் தொடர்ந்து எழுதுகிறேன்.  அதுவரை உங்கள் ஆதரவுகளை தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை