மாயக்கோல் இணையத்தளம் உங்களுக்காக

நண்பர்களே நம் ஒரு புகைப்படம் எடுத்தால் அதில் பார்த்தால் போட்டோவில் பரு கரும்புள்ளி போன்றவைகள் இருந்து நம்மை கஷ்டப்படுத்தும் அது போன்ற புகைப்படங்கள் இருந்தால் இந்த இணையத்தளத்தில் பதிவேற்றினால் போதும் உங்கள் புகைப்படத்தில் உள்ள கரும்புள்ளிகள் பருக்கள் போன்றவற்றை எடுத்து விடும். அதுபோல ரெட் ஐ என்பதையும் எடுத்துவிடும்.  கீழுள்ள படத்தை பார்த்தாலே உங்களுக்கு புரிந்து விடும்.  இணையத்தள சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

பிடித்தவர்கள் அனைவரும் ஒட்டு அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்

» Read More...

சட்டரீதியான இலவச பிடிஎப் உருவாக்கும் மென்பொருள் உங்களுக்காக

நண்பர்களே இதற்கு முன் சட்டரீதியான பிடிஎப் டூ வேர்ட் மாற்றி கொடுத்த நான் இன்று இலவச பிடிஎப் உருவாக்கும் மென்பொருள் தருகின்றேன். இந்த மென்பொருள் $19.95 விலையுடையது இலவசமாக அதுவும் சட்டரீதியாக பெற நீங்கள் செய்ய வேண்டியது கீழே கொடுத்துள்ளேன்.



முதலில் இந்த சுட்டியிலிருந்து மென்பொருளை தரவிறக்குங்கள்.  சுட்டி

பின்னர் இந்த சுட்டியை கிளிக் செய்து சுட்டி

Full Name என்ற பெட்டியில் உங்கள் முழுப்பெயர் கொடுக்கவும்.

E-Mail என்ற இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.

Confirm E-Mail என்ற இடத்தில் மறுபடியும் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.

உங்கள் மேலே என்ன மின்னஞ்சல் முகவரி கொடுத்தீர்களோ அதையே மீண்டும்  மூன்றாவது பெட்டியில் கொடுத்து Submit என்பதனை தேர்வு செய்யுங்கள்.

முடிந்தது உங்கள் மெயில் முகவரிக்கு  Registration Key அனுப்ப பட்டிருக்கும்.

அதை எவ்வாறு உபயோகபடுத்தப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கியிருப்பார்கள்.  நீங்கள் அதன் படி உங்கள் Registration Key யை நிறுவுங்கள்.




உங்கள் ஒலி குறைவாக இருக்கும் MP3ஆடியோவை இங்கு தரவேற்றினால் அவர்கள் மிகவும் ஒலி உள்ளதாக மாற்றி தருகின்றனர். இணையத்தள சுட்டி.




நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

உங்கள் கணிணியில் You may be a victim of software counterfeiting பிழை நீக்குவது எப்படி? எளிய வழி

உங்கள் கணிணியில் சில நேரங்கள் உங்கள் கணிணியில் சில நேரம் இது போல் தோன்றும்  "You may be a victim of software counterfeiting"



அப்பொழுது எல்லாம் என்ன செய்வீர்கள் உங்கள் கணிணியின் சர்வீஸ் என்ஜினியரை கூப்பிடுவீர்கள்.
அவர் வந்து பார்த்துவிட்டு உங்கள் கணிணியில் மைக்ரோசாப்ட்டால் தடை செய்யப்பட்ட சிடி கீ போட்டுள்ளீர்கள் அதனால் இது போல் வருகின்றது என்று சொல்லிவிட்டு அதை நீக்கி விட்டு சென்று விடுவார்.  இதையே நீங்கள் செய்தால் உங்களுக்கும் நேரம் மிச்சமாகும். என்ஜினியரின் வேலையும் நேரமும் அலைச்சலும் மிச்சமாகும். எப்படி நீங்களே நீக்குவது?


அதற்கு இந்த மென்பொருள் உதவுகின்றது.  இந்த மென்பொருளை சேப் மோடில் இயக்கினால் போதும். மென்பொருள் சுட்டி

இது அனைவருக்கும் பாவிக்ககூடிய உகந்த மென்பொருள் எளிய வழி

சிலர் கேட்கலாம் சர்வீஸ் என்ஜினியர் அவ்வளவு நேரம் வேலை செய்தார் உடனே இது முடித்து விடுமா என்று உங்கள் சர்வீஸ் என்ஜினியர் செய்வது போல நேரம் எடுத்துக் கொண்டு சில சுற்று வழி உங்களுக்காக

முதலில் உங்கள் ஸ்டார்ட் மெனு பாரில் வெற்று இடத்தில் வலது கிளிக் தேர்வு செய்து அதில் Task Manager தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கு டாஸ்க் மேனஜர் திறக்கும்.  அதில் wgatray.exe என்ற கோப்பை வலது கிளிக் தேர்வு செய்து End Process Tree என்பதனை கொடுங்கள்.

உடனே விண்டோஸ் எக்ஸ்பியை ரீஸ்டார் (Restart) செய்யுங்கள்

கணிணி ஆன் செய்தவுடன் உங்கள் கீபோர்டில் F8 என்ற கீயை பிரஸ் செய்யுங்கள்

இப்பொழுது உங்களுக்கு கீழுள்ள படம் போல கிடைக்கும்.  அதில் Safe Mode என்பதனை தேர்வு செய்து எண்டர் தட்டுங்கள்.

சிறிது நேரத்தில் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி Safe Mode என்று நான்கு மூலைகளில் தோன்றியிருக்கும் இப்பொழுது விண்டோஸ் எக்ஸ்பி Safe Modeல் நுழைந்து விட்டது.

பிறகு C:\windows\system32 இந்த போல்டருக்குள் நுழைந்து WgaTray.exe இந்த பெயருள்ள கோப்பை நீக்குங்கள்.

அதேபோல் C:\windows\system32\dllcache என்ற போல்டருக்குள் நுழைந்து  WgaTray.exe இந்த பெயருள்ள கோப்பையும் நீக்குங்கள்.

பின்னர் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து Run தேர்வு செய்து அதில் Regedit என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள்

ரெஜிஸ்டரி எடிட்டர் திறக்கும் அதில்
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon\Notify key

WGALogon என்ற போல்டரை நீக்குங்கள். நீக்கிவிட்டு ரெஜிஸ்டரியை மூடுங்கள்

மறுபடியும் உங்கள் விண்டோஸ் ரீஸ்டார்ட் செய்து விடுங்கள் முடிந்தது இனி உங்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்திரால் பிரச்சனை வராது.


வருகின்ற வெள்ளி இரவு வேளாங்கன்னி செல்லலாம் என்றிருக்கின்றேன்.  சனி மற்றும் ஞாயிறு இரு நாளும் அங்கேதான்.  என்னை சந்திக்க விரும்புவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கு சந்திக்கலாம்.


உங்கள் பொன்னான ஆதரவை தமிழிசில் தமிழ்மணத்தில் அனைத்து திரட்டிகளிலும் ஒட்டாக குத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். விளம்பரங்களை கிளிக் செய்து எங்களை பயனளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்ற

நண்பர்களே தொடர்ந்து வேலைகள் அதிகரித்து வருவதால் முன்னெப்போதும் போல் தொடர்ந்து எழுத முடியவில்லை என்னை மன்னித்து உங்கள் ஆதரவை எப்போழுதும் தர வேண்டுகிறேன்.

ஹுலு என்ற இணையத்தளத்தை தெரியாதவர்கள் இணையத்தில் இருக்கவே முடியாது. தெரியாதவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். இந்த தளத்தில் யூட்யூப் போன்றே நிறைய வீடியோக்கள் உள்ளது. அது மட்டுமில்லை டிவியில் ஒளிபரப்பாகும் ஆங்கில சீரியல்கள் முழு திரைப்படங்கள் அனைத்தும் உயர்தரத்தில் உள்ளது.


இந்த தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க இந்த மென்பொருள் உபயோகமாக இருக்கும். இதன் மென்பொருள் பெயர் ஹுலு வீடியோ டவுண்லோடர்

இந்த மென்பொருள் மூலம் தரவிறக்கும் வீடியோக்களை எம்பெக் 2, ஏவிஐ (MPEG 2) AVI) போன்ற கோப்புகளாக மாற்றி தரக்கூடிய வல்லமையுடையது

ஓலிகளை தேட


உங்கள் பவர்பாயிண்ட் பிரசன்டேசன்களில் பின்புல இசை கொடுக்க நீங்கள் புதிய இசையை தேடுபவரா நீங்கள் இங்கே செல்லுங்கள். இந்த தளத்தில் எந்தவித இசையாக இருந்தாலும் சரி ஒலியாக இருந்தாலும் சரி இங்கு கட்டாயம் கிடைக்கும்.   எந்தவித ஒலிக்கள் இங்கு உள்ளன என்பதை இவர்கள் இங்கு வரிசைப்படுத்திருக்கிறார்கள் சுட்டி
இணையத்தள சுட்டி

பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்ற


நீங்கள் வைத்திருக்கும் பவர் பாயிண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்றி யூட்யுபில் வெளியிட ஆசையா உங்களுக்கு இந்த மென்பொருள் உதவும்.  இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள பவர் பாயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றி தரும்.  பிறகு நேரடியாக யூட்யுப் தளத்திற்கு சென்று உங்கள் கணக்கினுள் நுழைந்து நீங்கள் மாற்றி வைத்திருக்கும் வீடியோ கோப்பை பதிவேற்றுங்கள் முடிந்தது. இனி உங்கள் பவர் பாயிண்ட் கோப்புகளை வீடியோவாக யூட்யூபில் பார்க்கலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை