நண்பர்களே தொடர்ந்து அலுவலக நிமித்தமாக வெளியூரில் வேலை இருந்ததால் இந்த
மாதத்தில் இது மூன்றாவது பதிவாக இந்த பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
தொடர்ந்த பதிவு எழுத ஆசை இருந்தாலும் நேரம் இல்லாதது பெரும் கஷ்டமாக
இருக்கிறது.
சரி இன்றைய பதிவிற்கு செல்வோம்.
பயர்பாக்ஸ் உலாவியின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பு இன்னும் இரண்டு
நாளைக்குள் வெளிவரும் என்று நினைக்கிறேன். இப்பொழுது உள்ள பதிப்பு 6.0.2
ஆகும். மேம்படுத்தப்பட்ட பதிப்பு 7.0 ஆக வெளிவருகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN7tO0-xW5uOWK5C7WowH9SJvWMq4emvCWBD5n451rhrVq3dpRK1Vh95tOhbiu4Lxo3ZpZ5oVwfZGjRCO6WFL_ulKZF0zIV1kU9quOtlcPyRIf7NMUtiHTVko8y4cIGnYSGy4WTfaKDvQ/s320/Firefox+7.0.jpg)
இதில் மெமரி மிகவும் குறைவாக எடுத்துக் கொண்டு வேலை செய்யும் விதத்தில்
மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 20 முதல் 30 சதவீதம் வரை குறைக்கட்டிருப்பதாக
கூறுகிறார்கள்.
அதிகபட்சம் 50 சதவீதம் இணையப்பக்கங்கள் லோடு ஆகும் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கின்றனர்.
நிறைய பாதுகாப்புகள் மேம்படுத்தப்படிருக்கின்றன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3RqQqUuk37aKyLIaCQ-_6fdVMKLuP521xceVe_vv8gp-xI4xjR6XU3KCzS3SYv7kdPK29p5C8xTYMHeVozxCrS_ufcKA19zpCMIDcPH4b2b6Ie16Tp_bnUTTyjg2026TQLfjIkeYdcck/s320/mozilla-firefox.jpg)
புக்மார்க்குகள் உடனடியாக பயர்பாக்ஸ் உலாவியின் மூலமாக Sync செய்யும் வசதியும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
விண்டோஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version
Download English - US Tamil Version
Download
லின்க்ஸ் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version
Download English - US Tamil Version
Download
மேக் பயனாளர்களுக்கான Firefox 7.0 Stable Version
Download English - US Tamil Version
Download
கூகிளின் புதிய வசதிகள் வந்துகொண்டிருக்கும் வேளையில் தனது 13ஆம் ஆண்டின்
பிறந்தநாளினை கொண்டாடுகிறது கூகிள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ0ed3JXvWOYZzahhAd_Fj3NAAg6KdxbZM3KSGOc1okyqDL__MasblqAEMmC_sLDzXAncW5eBSZGfqad1G2wAdntCdfWiBpZZKY7Z1VXF2M0SMBXu3-MDYv05CclasTZ5jRaIi9bNFpY8/s400/Screen+shot+2011-09-26+at+11.01.34+AM.png)
இந்நேரத்தில் பழைய ஆட்சென்ஸ்
முகப்பினை விரைவில் மூடப்போவதாகவும் அதற்காக புதிய ஆட்சென்ஸ் முகப்பிற்கு
செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG6DzGH0VsibxO2eGNt-0lRdD6ap-iYkcikgN5f9Be1pRUZgsBZqYUqV_ZO9GxzW1kp0g_AGfWzpPyAqjUgr3O1w7JTsN-anWjg7tPTHgLGe_AdpiF7hyPUYsBDvOHysJ5mjMsjLGJL0w/s1600/google13th.jpg)
Many More Happy Returns of the Day Google
Happy 13th Birthday Google
இதுகுறித்து கூகிள் வெளியிட்டுள்ள செய்தி
சுட்டி
உங்களுடைய டெஸ்க்டாப்பில் உங்களால் ஒரு வால்பேப்பர் மட்டுமே வைக்க
முடியும். அந்த வால்பேப்பரின் மேலே இன்னும் ஒரு வால்பேப்பர் வைக்க
முடியுமா? என்று கேட்டால் நீங்கள் இல்லையென்று சொல்வீர்கள்.
இணைய உலகில்
எதுவும் சாத்தியமே என்பது போல இந்த மென்பொருளினை நீங்கள் தரவிறக்கிக்
கொண்டால் ஒரு வால் பேப்பரின் மேல் இன்னும் ஒரு வால்பேப்பர் வைக்கலாம்.
அந்த வால்பேப்பரில் உங்களுடைய முக்கியமான நிகழ்வுகள், மீட்டிங்குகள்
குறித்து பதிந்து வைக்க சுலபமாக இருக்குமே. தரவிறக்க
சுட்டி
செய்தி துளிகள்
கேரளாவில் முதலமைச்சரின் அறையில் நடக்கும் அனைத்து கலந்துரையாடல்கள்
அனைத்தும் அனைவரும் பார்க்கும் படியாக இருக்க வேண்டும் என்று தன் அறையில்
கேமரா வைத்திருக்கிறார். இந்த கேமரா உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும்
அவருடைய அறையில் என்ன நடக்கிறது அனைவரும் தெரிந்து கொள்ளதானாம்.
அத்துடன்
முதலமைச்சரின் அறை மட்டுமல்லாம அவருடைய அலுவலகத்தில் நடக்கும் அனைத்தும்
தெரிந்து கொள்ளவும் ஒரு கேமரா வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வசதி இருபத்தி
நான்கு மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடங்கி
வைக்கப்பட்டது ஜுலை ஒன்றாம் தேதி அன்று.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7iAO_JusvjOgsJYl0STZaB1hRZfxlX3M08e8a-enBDGNk5M3hSIjCLol6VyjBLnXO-Xvtw2TUPtIN7qg-AO6EsQDiBhdEoffmxfdA3lYdw22IkC84BW3wVVv5iqbFnT4bY5tHOn_KHyY/s320/kerala+cm+chamber+live.jpg)
நான் ஒரு முறை பார்க்கும் பொழுது முதலமைச்சர் வெளியூர் சென்றிருக்கிறார்
என்று வந்தது அடுத்த நாள் பார்த்த பொழுது அவர் அலுவலகத்தில் கூட்டம்
நடத்திக் கொண்டிருந்தார். இந்த பதிவு எழுதும் பொழுது அவர் அறையில்
முதலமைச்சர் இல்லை. நீங்கள் கேரள முதலமைச்சர் அலுவலகத்தை நேரடியாக பார்க்க
சுட்டி
இணையத்தில் இருந்து mp3 பாடல்கள் தரவிறக்க ஒரு புதிய மென்பொருள் music2pc
மிக அருமையாக இருக்கிறது இந்த மென்பொருள். வேகமாக தேடவும் வேகமாக
தரவிறக்கவும் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த
மென்பொருள் உங்கள் கணினியில் நிறுவியும் உபயோகிக்கலாம். இல்லை போர்டபிள்
மென்பொருளாகவும் உபயோகிக்கலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0clWshwxXS_QDINCtajRYyMNCPRMBXS03AIToP6tVQ9mGiuUUi6Fz2yruICA8fCvg-Q4aDtO0I6v4ED05EBxhxyCAbU4ehEtMtXou6EzeLv-sBbWNhUPIQ0NrykwWgD1NjL3f3aPXIwU/s320/download-mp3-small.png)
மேலதிக தகவல்கள் தெரிந்து கொள்ள இணையத்தள
சுட்டி
music2pc மென்பொருள் தரவிறக்க
சுட்டி
music2pc போர்டபிள் மென்பொருள் தரவிறக்க
சுட்டி
தொடர்ந்து நீங்கள் கொடுத்து வரும் ஆதரவால் என்னை பின் தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை 800ஐ தொட இருக்கிறது. இதை சாதிக்க உங்களால் மட்டுமே என்னால் சாதிக்க முடிந்தது அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். விளம்பரங்களை பாருங்கள் படியுங்கள் பிடித்திருந்தால் கிளிக் செய்து செல்லுங்களேன்.
நன்றி மீண்டும் வருகிறேன்
» Read More...