நண்பர்களே நிறைய வேலை பளு இருப்பதால் தொடர்ந்து எழுத முடியவில்லை மன்னிக்கவும். இருந்தாலும் ஏதாவது புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தியிருப்பார் என்று நம்பி வந்த அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி. அத்துடன் ஒரு இனிப்பான வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி என் மனைவியின் தங்கைக்கு திருமணம் நடக்க இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்கள் வேண்டும். அத்துடன் என் திருமண வாழ்க்கை ஜூன் 17 அன்று ஆறாவது வருடத்தில் வெற்றிகரமாக எடுத்து வைக்கிறேன். அதற்கு என் வாழ்த்துக்கள். திருமண வேலைகள் அதிகம் இருப்பதால் வருவதற்கு தாமதமாகலாம். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
இன்றைய பதிவிற்கு செல்வோம் வாருங்கள். மிகப்பெரிய கோப்புகளை எத்தனை பாகங்களாக வேண்டுமானாலும் பிரிக்க சேர்க்க இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். இது ஒரு திறந்த நிலை மென்பொருள் இன்னும் மேம்படுத்த வாய்ப்பு இருக்கிறது. கிரையோஜனிக்
வீட்டிலேயே பாஸ்போர்ட் பிரிண்ட் எடுக்கும் பிரிண்டர்கள் வந்தாலும் நாம் யாரும் அதை உபயோகப்படுத்துவதில்லை. பாஸ்போர்ட் விசா எடுப்பதற்கு தேவையான அளவுகளில் பாஸ்போர்ட் மற்றும் தபால் தலை அளவு புகைப்படம் எடுக்க இந்த ஆன்லைன் தளத்தினை நாடலாம். இதில் 63 வகை நாடுகளின் பாஸ்போர்ட் விசா புகைப்பட அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. வலைத்தளத்திற்கு செல்ல இங்கே இதில் ஆறு எம்பி வரை உள்ள புகைப்படத்தினை ஏற்றி பாஸ்போர்ட் அளவுகளில் மாற்றிக் கொள்ளலாம். இந்த தளம் JPG, PNG, BMP வகையான கோப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் என்பது ஒரு குறையே.
புகைப்படங்களை தேட இன்னொரு புதிய தளம் சுட்டி இந்த தளத்தில் தேடும் போட்டோக்களை நேரடியாக இணைப்புக் கொடுக்கலாம். மற்றும் எச்டிஎம்எல் கோடிங்காக மாற்றி நம் தளத்திலேயே கூட இடலாம்.
நன்றி மீண்டும் வருகிறேன்.
» Read More...