சட்டரீதியான பேக் - அப் மென்பொருள்

நண்பர்களே ஒவ்வொரு முறையும் மைக்ரோசாப்டின் எக்ஸல் மற்றும் வேர்ட் உபயோகிக்கும் போதும் நாம் சில குறுக்கு வழிகளை (ShortCut Keys) உபயோகிப்போம்.  நமக்கு தெரிந்தது சில வழிகள் மட்டுமே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய வழிகளை இங்கு பட்டியலிட்டுள்ளனர்கள்.  அதுமட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட் மென்பொருட்கள், கூகிள், நெருப்பு நரி உலாவி, அடோப் போட்டோஷாப் அனைத்து வகையான விண்டோஸ் மென்பொருட்களுக்கும் இவர்கள் குறுக்கு வழிகள் (ShortCut Keys) தேடித் தருகின்றனர்.  விண்டோஸ் மட்டுமல்லாமல் மேக் (Mac Computer), லினக்ஸ் (Linux) போன்றவைகளுக்கும் தேடித் தருகின்றனர்.  இன்னும் நிறைய தருவார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் அனைத்திற்கும் ஒரு டேட்டாபேஸ் (DataBase) உருவாகுகிறார்கள்.  வலைத்தள சுட்டி

 
 சட்டரீதியான ரெகவரி மென்பொருள் உங்களுக்காக இந்த மென்பொருள் மூலம் உங்கள் கோப்புகள் எதுவானாலும் பேக் - அப் எடுக்கலாம்.  அதுமட்டுமல்லாமல் பேக் - அப் எடுக்கும் கோப்புகளை நேரடியாக சிடி, டிவிடி, டேப் போன்றவற்றில் பதியலாம்.  பேக் - அப் எடுக்கப்படும் கோப்புகள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.  இவர்கள் பாதுகாப்புக்கு ராணுவத்தில் உபயோகப்படுத்தப்படும் வழிமுறையான 256 AES (Advanced Encryption Standard) என்ற முறைய பயன்படுத்தப்படுகிறது.  நீங்கள் செய்ய வேண்டியது மிக எளிய காரியமே
கீழே கொடுக்கும் சுட்டியை முதலில் சொடுக்குங்கள்.  சுட்டி 
பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளது போல ஒரு வலைத்தளம் திறக்கும்.  அதில் சிகப்பு வண்ண அம்பிற்கு நேரே உள்ள பெட்டியில் உங்கள் பெயர் கொடுக்கவும் (இங்கு கொடுக்கப்படும் பெயர் உங்களுக்கான ரெஜிஸ்ட்ரேசன் பெயர் ஆகும்).  பின்னர் பச்சை அம்பிற்கு நேரே உங்களின் உண்மையான மெயில் முகவரி கொடுக்கவும்.  பின்னர் சிகப்பு வட்டம் உள்ள பெட்டியை டிக் செய்து Submit கொடுக்கவும்.  பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு East Technologies Support என்ற இடத்தில் இருந்து ஒரு அஞ்சல் வந்திருக்கும். அந்த அஞ்சலை திறந்து அவர்கள் கொடுத்துள்ள முகவரியை கிளிக் செய்தால் உங்களுக்கு நீங்கள் கொடுத்த பெயர் மற்றும் ரெஜிஸ்ட்ரேசன் கீ (Registration Key) கிடைக்கும்.  தரவிறக்க சுட்டியும் கிடைக்கும்.  இரண்டாவாதாக உள்ள படத்தை பார்க்கவும். 




 
அனைவரும் தமிழிசில் ஒட்டுக்களையும் கீழே மற்றும் மேலே உள்ள விளம்பரங்களை கிளிக் செய்ய வேண்டுகிறேன்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான பிடிஎப் To வேர்ட் மாற்றி உங்களுக்காக

நண்பர்களே நாம் பிடிஎப் பார்மெட்டில் ஒரு கோப்பு வைத்திருப்போம் அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் அத்துடன் ஒரு படமும் இணைக்க வேண்டும் எனில் அதை வேர்ட் கோப்பாக மாற்ற வேண்டும். இப்பொழுது வருகிற அனத்து பிடிஎப்பிலிருந்து வேர்ட்க்கு மாற்றும் கன்வெர்ட்டர்கள் அனைத்தும் காசு கொடுத்து வாங்கியாக வேண்டும். அப்படி இல்லைஎன்றால் இலவச பதிப்பு தரவிறக்கி பயன்படுத்தினால் வெறும் 2 அல்லது 3 பக்கங்கள் மட்டுமே வேர்டுக்கு மாற்றித் தரும் அதனால் நமக்கு பயன் ஏதும் இல்லை.  ஆனால் AnyBizSoft நிறுவனத்தினர் சட்டரீதியாக அனைவருக்கும் பிடிஎப்லிருந்து வேர்டுக்கும் மாற்றிக் கொடுக்கும் மென்பொருளை தருகிறார்கள்.  நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று உங்களுடைய சரியான மின்னஞ்சல் முகவரி தரவேண்டியது. 

முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் சுட்டி

பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளபடி சிகப்பு வண்ணம் அம்பு பிரகாரம் முதலில் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.



பின்னர் பச்சை அம்பு உள்ள Get KeyCode என்ற பொத்தானை தேர்வு செய்தால் கீழே உள்ள படம் போல் உங்களுக்கு இணையத்தளம் கிடைக்கும்.  அதில் முதலில் மின்னஞ்சல் முகவரி பின்னர் உங்கள் பெயர் கொடுத்தால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மென்பொருளின் Key கொடுத்துவிடுவார்கள்.


இந்த மென்பொருளை நிறுவிய பிறகு இந்த Key கொண்டு நீங்கள் ரெஜிஸ்டர் செய்தால் போதுமானது.




நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஜிமெயில் அட்டாச்மென்ட் அளவு அதிகரிப்பு

நண்பர்களே ஒரு இனிப்பான செய்தி இது வரை கூகிள் நிறுவனமான ஜிமெயிலில் 10 எம்பி வரை மட்டுமே அட்டாச்மென்ட் செய்யும் நிலைமை இருந்தது. இப்பொழுது இந்த அட்டாச்மென்ட் அளவை 25 எம்பி ஆக அதிகரித்திருக்கிறது.

ஜிமெயில் செய்தி சுட்டி


 

எக்ஸ்ண்வியு மென்பொருள் இந்த மென்பொருள் மூலம் 400 வகையான  புகைப்பட பார்மெட்களை கையாள இயலும்.

இந்த மென்பொருள் ஆதரிக்கும் எக்ஸ்டென்சன்கள் சுட்டி
இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்ட ரீதியான யூனிப்ளு ஸ்பீடு அப் மை பிசி இலவசம்

நண்பர்களே என்னுடைய நண்பர் எனக்கு ஒரு சுட்டி கொடுத்தார் அந்த சுட்டியில் கிளிக் செய்து உங்கள் பெயர் மற்றும் சரியான மெயில் முகவரி கொடுத்தால் உங்கள் மெயில் முகவரிக்கு Uniblue SpeedUp MyPC 2009 மென்பொருள் இலவசமாக தருகிறார்கள்.  அந்த லின்க் இதுதான் சுட்டி

இந்த மென்பொருளின் மதிப்பு 40 டாலர் ஆகும்.  இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணிணியின் வேகத்தைக் கூட்ட முடியும்.

வேண்டும் என்பவர்கள் தரவிறக்கி பயன் பெறுங்கள்






நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை