Apr 3, 2012

F-Droid Vs Google Play

நண்பர்களே இன்றைய உலகில் போனில் அதிக அளவு விற்பனையாவது ஸ்மார்ட் போன்கள் அதுவும் ஆன்ட்ராய்டு வகை போன்கள் மிக அதிகமாக விறபனையாவதை அனைவரும் அறிந்ததே. ஆன்ட்ராய்ட் ஒரு இலவச இயங்குதளமாகும்.  இந்த வகை இயங்குதள போன்களுக்கு என்று வைத்திருந்த கூகிளின் ஆன்ட்ராய்ட் மார்கெட்டினை கூகிள் ப்ளே என்று பெயர் மாற்றியது சில நாட்களுக்கு முன்புதான் என்பதையும் அறிவீர்கள்.  சரி இந்த வகை ஆன்ட்ராய்ட் இயங்குதள போன்களுக்கு கூகிள் ப்ளே மட்டும்தான் உள்ளதான் என்று பார்த்தால் கூகிளை போன்ற சில தளங்கள் இருக்கதான் செய்கின்றன இதில் ஒரு தளத்தின் எப் ட்ராய்டு  F-Droid.     F-Droid
இந்த தளத்தில் என்ன ஒரு சிறப்பு என்று பார்த்தால் இதில் உள்ள அனைத்து அப்ளிகேசன்களும் இலவசமானவை மட்டுமே.  அதுவும் அனைத்தும் Full Version ஆக கிடைக்கிறது. 


அது மட்டுமல்லாமல் F-Droid நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் பிரவுஸர் வழியாக F-Droid இணையத்தளத்தில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை தேடி உங்கள் மொபைலுக்கு தரவிறக்க  முடியும்.
Android Vs F-Droid
இந்த தளத்தின் மூலம் வெளியிடப்படும் அப்ளிகேசன்கள் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலுக்குள் நிறுவி விட்டாலே ஒவ்வொரு முறையும் தானாக அப்டேட் செய்து கொள்ளும்.

 இந்த தளத்திற்கு செல்ல சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

1 comment:

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்