Oct 6, 2009

கணிணிக்கு தேவையான அடிப்படையான அனைத்து மென்பொருட்களும் ஒரே இடத்தில்

நண்பர்களே சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்று பழமொழி அறிந்திருப்பீர்கள். அது போல சிறு மென்பொருளும் உங்கள் கணிணியை பாதுகாக்கும்.

உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு பெரிய கோப்பினை தரவிறக்கம் செய்கிறீர்கள். அது தரவிறக்கம் ஆகும் வரை உங்களால் காத்திருக்க முடியாது உங்களுக்கு பல வேலைகள் இருக்கும்.கணிணியை அணைக்கவும் வேண்டும் தரவிறக்கமும் முழுதாக முடிய வேண்டும் என்றால் உங்களுக்கு இந்த ஆடு ஆன் கை கொடுக்கும். சுட்டி



இது தரவிறக்கம் முடிந்தவுடன் ஒலி கொடுக்கும் பிறகு கணிணியை அணைக்கத்துவங்கும்.


கணிணிக்கு கேடு விளைவிக்கும் ஆபாச தளங்களுக்கு செல்வதை தடுக்க இந்த ஆடு - ஆன் உதவும். சுட்டி இந்த ஆடு ஆன் மூலம் ஆபாச தளங்கள் உங்கள் குழந்தைகளை தவிர்க்கலாம்.




உங்கள் கணிணியில் டாட் நெட் பிரேம்வொர்க் எந்த பதிப்பு நிறுவப்பட்டுள்ளது தெரிந்து கொள்ள உதவும் ஒரு சிறு மென்பொருள் சுட்டி



உங்கள் கணிணியில் உள்ள தற்காலிக டெம்ப் கோப்புகளை அழிக்க இந்த மென்பொருள் உதவுகிறது. மென்பொருள் தரவிறக்க சுட்டி


விண்ஜிப் போன்ற ஒரு மென்பொருள் 7ஜிப் என்பதாகும்.  இது பலவகையான சுருக்கப்பட்ட கோப்புகளை ஆதரிக்கிறது. இந்த மென்பொருளினால் சுருக்கப்பட்ட கோப்புகள் 7zip என்று இருக்கும். இதே மென்பொருள் இதை விரிக்கவும் தேவைப்படும். அது போல் இல்லாமல் இதை ஒரு EXE கோப்பாக அனுப்பினால் அந்த மென்பொருள் தேவையில்லை. இந்த 7zip கோப்பினை EXE கோப்பாக மாற்ற ஒரு சிறு மென்பொருள் சுட்டி


யூட்யூபினுள் படம்  பார்த்தால் சிறு பெட்டியுனுள் படம் தெரியும் அது போல் இல்லாமால் திரை முழுவதும் பார்க்க பெரிது படுத்தி பார்த்தால் அதனுடைய தரம் நன்றாக இருக்காது. திரை முழுவதும் அதே தரத்துடன் யூட்யூப் வீடியோவினை பார்க்க இந்த ஆடு - ஆன்


நம் கணிணியில் அடிப்படையான சில மென்பொருட்களை தரவிறக்க ஒவ்வொரு முறையும் தரவிறக்க ஒவ்வொரு தளங்களில் சென்று தரவிறக்க வேண்டியிருக்கும் அது போல் இல்லாமல் ஒரு மென்பொருள் வழியாக நமக்கு தேவையான அனைத்து மென்பொருட்களும் நிறுவ இந்த மென்பொருள் உதவும். சுட்டி




இதுவரை பின் தொடரும் தொடரப்போகும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இதுவரை 194 பாலோயர்கள் என்னை பின் தொடர்கின்றனர். இது என்னுடைய 295வது பதிவு 300வது பதிவு எழுதும் முன் என்னை பின் தொடர்பவர்கள் 300 ஆக வேண்டும் என்பது விருப்பம்.







நன்றி மீண்டும் வருகிறேன்

6 comments:

  1. யூ டியுப் விடியோவை பெரிதாக பார்க்க இருக்கும் ஆட் ஆன் ரொம்ப உதவியாக இருக்கும் தல!

    ReplyDelete
  2. யூடியுப் மேட்டர் அருமைங்க.. தொடரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  3. பயனுள்ள அருமையான அனைவரும் அறியவேண்டிய பதிவு . தற்போது எல்லாம் ஒரே பதிவில் மிக அதிகமான செய்திகளை வழங்கும் உங்களின் பெரும் முயற்சிக்கு எங்களின் வாழ்த்துக்கள். உங்கள் சேவை எங்களுக்கு என்றும் தேவை.

    ReplyDelete
  4. வடிவேலன்,

    அருமையான உதவி அனைத்தும் ஒரே இடத்தில் எதை எடுப்பது எதை விடுப்பது என்று தெரியவில்லை.

    வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  5. நன்றிங்க. உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துகள்

    Sundhar Raman,R.

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்