Mar 29, 2012

BSNL பிராண்ட்பேண்ட் இணைய வேகத்தை கண்டறிய

நண்பர்களே இந்தியாவில் இணைய சேவை கொடுப்பதில் முண்ணணி நிறுவனமாக BSNL இருக்கிறது. இதன் இணைய சேவையை பயன்படுத்தும் பலருக்கு இதன் வேகம் நாம் தேர்வு செய்த திட்டத்தின் படி வருகிறதா என்பது தெரியாது. இணைய வேகம் என்பது சர்வரின் செயல்திறன், இணைந்துள்ள கணிணிகள், நமது கணிணியின் ஹார்ட்வேர் போன்றவற்றைப் பொறுத்து சில நேரம் கூடலாம் அல்லது குறையலாம். இணைய வேகத்தை அளவிட Speedtest.net போன்ற இணையதள சேவைகளைப் பயன்படுத்திப் பார்ப்போம்.

ஆனால் இணைய வேகத்தை அளவிட BSNL சர்வர்களை வைத்தே சரிபார்த்தால் வேறு வழிகளில் அளவிடுவதை விட துல்லியமாக இருக்குமல்லவா? இதற்கு தான் BSNL தற்போது Bandwidth Meter என்ற இணைய சேவையை கொண்டு வந்துள்ளது. இதில் நீங்கள் இணைய வேகத்தை அளவிட உங்கள் இணையக் கணக்கு பற்றிய விவரங்களை ஏதும் கொடுக்கத் தேவையில்லை. கீழிருக்கும் மூன்று சுட்டிகளில் கிளிக் செய்தாலே உங்கள் இணைய வேகம் அளவிடப்படும்.



இதில் உங்கள் ஐபி எண் (IP number) ,  கொடுக்கப்படும் Bandwidth அளவு, ஒரு விநாடியில் கிடைக்கும் டவுன்லோடு வேகம் ஆகியவை பட்டியலிடப்படும். இதன் மூலம் உங்களின் சரியான இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் எங்கிருப்பினும் BSNL இணையம் வைத்திருப்பவர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.



இன்றைய பதிவினை எழுதியிருப்பது  செல்வி. பொன்மலர் அவர்கள்  நம் தளத்தில் அவ்வப்போது புதிய பதிவுகள் மற்றும் புதிய எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  இவரை பற்றியும் இவர் வலைபதிவை பற்றியும் தெரியாதவர்கள் யாரும் அறியாமல் இருக்க முடியாது.  இவர் எழுதிய பல பதிவுகள் பலருக்கு மிகவும் உபயோகமாக இருக்குமாறுதான் இவர் எழுதுவார்.  இவர் வலைப்பூவிற்கு செல்ல சுட்டி


இந்த வலைமனை தொடர்ந்து எழுதுவதும் எழுதவைப்பதும் உங்களின் தொடர்ந்து ஆதரவினால் மட்டுமே. உங்கள் ஆதரவும் பின்னூட்டங்கள்  தொடர்ந்து எங்களுக்கு வேண்டும். 


விரைவில் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி மீண்டும் வருகிறேன்

4 comments:

  1. உபயோகமான தகவல்...

    ReplyDelete
  2. ஐயா
    லேபிள் என்று பேண்ட்வித். பேண்ட் வித் மீட்டர் பிராட்பேண்ட். பிஎஸ்என்எல் என்று பட்டியல் நீண்டுள்ளதே எதற்காக என்று விளக்குவீர்களா? கூகுளில் இதை டைப் செய்து தேடினால் இந்த மேட்டர் வருவதற்காகவா? தயவு செய்து விளக்கம் தரவும்.

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்