Mar 16, 2010

எனது விருப்ப இணையதளங்கள் & மென்பொருட்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே இன்று நான் படிக்கும் விரும்பி படிக்கும் தளங்கள் சிலவற்றை கொடுக்க போகிறேன்.  இதன் மூலம் சில நல்ல விஷயங்கள் நகைச்சுவைகள் அனைத்தும் என் உடன் வரும் நண்பர்கள் வாசகர்கள் படிக்கட்டுமே என்ற எண்ணத்தில் தொகுத்து வழங்க போகிறேன்.  முடிந்தவரை மாதம் ஒரு முறை இது போல் கொடுக்க முயற்சிக்கிறேன்.

தமிழ் மருத்துவம்

நமக்கு தெரிந்தும் தெரியாத ரகசிய கேள்விகளுக்கு  விடை  இங்கே கிடைக்கிறது முயற்சித்து பாருங்கள்.
வலைப்பூ மயான அமைதி என்று இருக்கிறது.  கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தளம்
தமிழில் மிகவும் அருமையான மருத்துவ தளம்.


க'விதை'07

இவர் மிக அழகாக ஒரு தொடர்கதையை எழுதி வருகிறார்.  மிக அருமையான நடை உண்மை வாழ்க்கையில் நடப்பது போல எழுதி வருகிறார்.  நீங்களும் படித்து பாருங்கள் தலைப்பு உனக்கு 22 எனக்கு 32  அத்துடன் நிறைய ஜோசியம் குறித்து எழுதி வருகிறார்.  படித்து பாருங்கள்

கோகுலத்தில் சூரியன்

இந்த வலைப்பூவை வெங்கட் என்பவர் எழுதி வருகிறார்.  மிகவும் அருமையான நகைச்சுவையான வலைப்பதிவாளர்.  இவர் எழுதிய வலைப்பதிவுகளாஇ ஒரே நாளில் அமர்ந்து படித்து விட்டேன் என்றால் பாருங்கள்.  அந்த அளவுக்கு நகைச்சுவை கடியுடன் எழுதியுள்ளார்.  உதாரணத்திற்கு அவர் எழுதிய கல்யாண பத்திரிகை பதிவு


பாட்டி சொல்லும் கதைகள்

நாம் நம்முடைய பாட்டி கதைகள் கேட்டிருப்போம் நகரத்து வாழ்க்கையில் இருக்கும் பலர் பல குழந்தைகளுக்கு பாட்டியின் கதைகள் கிடைப்பதில்லை.  அந்த குறையை போக்க இந்த பாட்டியின் கதைகள் உதவும்.  படித்து நீங்களும் குழந்தையாகுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் கூறி மகிழ்ச்சி அடையுங்கள்.



நம்ம விஷயத்துக்கு வருவோம்.  உங்களிடம் ஒரு போல்டரில் ஆயிரம் கோப்புகள் உள்ளது என வைத்துக் கொள்வோம்.  அதை பத்து பத்தாக ஒரு போல்டரில் போட வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்  ஒவ்வொரு போல்டர் கிரியேட் செய்து அதனுள்ளே போட வேண்டும்.  இவ்வாறு செய்வதன் மூலம் நிறைய நேரம்தான் விரயமாகும்.   இவ்வாறு போட இந்த சிறு மென்பொருள் உதவும்.  இது ஒரு இலவச மென்பொருள்.  மென்பொருள் சுட்டி



அத்துடன் படித்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.  பிடித்தவர்கள் விளம்பரங்களையும் பின்னூட்டங்களையும் வாரி வழங்குங்கள்.  நன்றி


நன்றி மீண்டும் வருகிறேன்

2 comments:

  1. தளங்கள் அறிமுகத்திற்கும், தொழில் நுட்ப தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. வடிவேலன் ஆர்..,
    மிகவும் நன்றி..,
    நான் Blog எழுத ஆரம்பித்த பிறகு
    எந்த எதிர்பார்ப்பும் இன்றி
    எனக்கு நிறைய நண்பர்கள்
    கிடைத்து உள்ளனர்..,

    எனக்கு பெருமையாக இருக்கிறது.
    என் Blog-ஐ பற்றிய உங்கள்
    விமர்சனமும் மிகவும் அருமை..,
    இன்னும் நிறைய நண்பர்கள்
    கிடைப்பார்கள்..

    வாழ்த்துக்கள்.. தொடரட்டும்
    உங்கள் பணி..

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்