Mar 15, 2010

விண்டோஸ் சிடி கீ அந்த சிடிக்குள்ளே இருக்கிறது

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே இப்பொழுதெல்லாம் அனைத்தும் கணினி மயம் வீட்டிலிருந்தபடியே வங்கி பரிவர்த்தனை, மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் இது போன்று அனைத்து கணினி வழியாக மேற்கொள்ளும் பொழுது சில நேரங்களில் நம் கணினி வழியாக பணம் பரிவர்த்தனை செய்து இருப்போம் பிறகு சிறிது நாட்களுக்கு பிறகு நம் பணம் நம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கும்.  இவ்வாறு நடப்பது எதனால் சில நேரங்களில் நமது ஆன்டி வைரஸ் மென்பொருள் சரிவர இயங்கமால் தடைப்பட்டிருக்கும் காலங்களில் ஏதாவது ஒரு இணையத்தளம் வழியாக நம் கணினிக்கு கீலாகர் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கும்.  இதன் வேலை என்ன தெரியுமா.  நம் கணினியில் நாம் தட்டச்சு செய்யும் அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கும்  இதை நிறுவிய நபருக்கு இதனால்தான் நாம் வங்கி பரிவர்த்தனை செய்தவுடன் நம் வங்கி கணக்கின் முழு தகவல்களையும் சேமித்து அதன் மூலம் அவர்கள் நம் கணக்கிலிருந்து பணம் எடுத்து விடுவார்கள்.  இது போல நடக்காமல் இருக்க ஆன்டி கீ லாகர் மென்பொருள் உபயோகிக்கலாம்.  இதற்கான சட்டரீதியான இலவச மென்பொருள் Zemana நிறுவனத்தினர் தருகிறார்கள்.  இந்த சட்டரீதியான இலவச சலுகை எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கும் என்று தெரிகிறது. முடிந்தவரை தரவிற்க்கிக் கொள்ளுங்கள்.

மென்பொருளை நேரடியாக தரவிறக்க சுட்டி

மென்பொருளை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இணைய தள சுட்டி

ஒலி ஐகான் மாற்ற

உங்கள் கணினியில் ஒலியை குறைக்கும் ஐகான் விண்டோஸில் இணைந்து வரும் ஒரே மாதிரி பார்த்து போரடித்து போயிருக்கும் .
இணையத்தள சுட்டி

இந்த வலைத்தளத்தில்  நமக்கு தேவையான ஐகானை தேர்ந்தெடுத்து அந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவினால் போதும். உங்கள் ஒலியை குறைக்கும் ஐகான் விண்டோஸில் மாறியிருக்கும்.


விண்டோஸ் சிடி கீ சிடிக்குள்ளே இருக்கிறது

உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி சிடி ஒரிஜினல் இருக்கிறது அதனுடைய ப்ரோடக்ட்  ( சிடி)  கீ தொலைந்துவிட்டதா கவலை வேண்டாம்.  அதை மீட்டெடுக்க எளிய வழி உள்ளது.   அந்த விண்டோஸ் சிடியை வேறொரு சிஸ்டத்தின் சிடி ட்ரைவில் போடுங்கள்.  பிறகு மை கம்ப்யூட்டர் சென்று அங்கு அந்த சிடியை எக்ஸ்ப்ளோரர் வழியாக திறக்கவும்.  பிறகு அதற்குள் i386  போல்டரினுள் சென்று  Unattend.txt என்ற கோப்பினை திறக்கவும் பிறகு அந்த கோப்பின் கீழே கடைசியாக செல்லுங்கள் அங்கு அந்த சிடிக்கான கீ இருக்கும் குறித்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள்.  ( இந்த குறிப்பு ஏற்கனவே எழுதி ட்ராப்டில் இருந்தது இன்று காலை தினமலரில் பார்த்தவுடன் ஞாபகம் வந்து இன்றைய பதிவுடன் சேர்த்துவிட்டேன்.)

அத்துடன் படித்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.  பிடித்தவர்கள் விளம்பரங்களையும் பின்னூட்டங்களையும் வாரி வழங்குங்கள்.  நன்றி


நன்றி மீண்டும் வருகிறேன்

14 comments:

  1. நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அந்த முதலாவது விஷயம் மிகவும் அவசியமான தகவல், நன்றி வடிவேலன்.

    ReplyDelete
  3. Very Nice Friend,MY Great Wishes

    ReplyDelete
  4. நன்றி சசிகுமார் சைவகொத்துபரோட்டா Sri

    ReplyDelete
  5. நல்வாழ்த்துகள். தொடர்பவர்களின் அணிவகுப்பு மிரளவைக்கின்றது.

    ReplyDelete
  6. உபயோகமான தகவல் தொடரட்டும்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு நண்பரே தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  8. அருமை. என் நண்பர்கள் அனைவருக்கும் உடனே மின் அஞ்சலில் தெரியப் படுத்தி விட்டேன்.
    நன்றி
    தொடருங்கள் உங்கள் பயனுள்ள பதிவுகளை.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. thanks for the information about the cd key.

    ReplyDelete
  10. Hello Friend,  Hope everything is fine.
    I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

     
    Meharunnisha
    Doctoral Candidate
    Dept of Psychology
    Bharathiar University
    Coimbatore - 641046
    Tamil Nadu, India
    meharun@gmail.com
     
     
    (Pls ignore if you get this mail already)

    ReplyDelete
  11. "பிறகு அதற்குள் i386 போல்டரினுள் சென்று Unattend.txt என்ற கோப்பினை திறக்கவும் பிறகு அந்த கோப்பின் கீழே கடைசியாக செல்லுங்கள் அங்கு அந்த சிடிக்கான கீ இருக்கும் குறித்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள்".

    நல்ல படைப்பு... ஆனால் தாங்கள் குறிப்பிடும் அந்த unattended.txt கோப்பு விண்டோஸ் தொகுப்பின் OEM எடிஷனில் மட்டும் தான் வர வாய்ப்பு இருக்கின்றது. OEM என்பது கணினி தயாரிப்பளர்களே அளிப்பது.அப்படி unattended.txt கோப்பில் licence இல்லையென்றால் winnt.sif என்ற auto installation கோப்பாக அளித்திருப்பார்கள். ex:DEll,HP,Unika அவ்வாறு அவர்கள் ஆட்டோ இன்ஸ்டாலேஷனை உருவாக்காமல் இருந்திருந்தால் இந்த சிடியிலும் எண்ணைகண்டு பிடிக்க இயலாது.

    அவ்வாறு ஆட்டோ இன்ஸ்டாலேஷன் செய்யாத சிடியில் இருக்கும் unattended கோப்பானது Sample கோப்பேயன்றி உண்மையான எண் கிடையாது. முயற்சித்து பாருங்கள்!

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்