Dec 11, 2009

சட்டரீதியான அபி பைன் ரீடர் மென்பொருள் மற்றும் ஆன்டிவைரஸை நீக்கும் மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி


நண்பர்களே சில நேரங்களில் நாம் உபயோகிக்கும் ஆன்டி வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் லைசென்ஸ் முடியும் பொழுது புதியதாக புதுப்பிக்க சொல்லி வரும் ஆனால் நாம் வேறொரு மென்பொருளுக்கு தாவ காத்துக் கொண்டிருப்போம்.  அந்த மாதிரி நேரத்தில் ஆன்டிவைரஸை அன் இன்ஸ்டால் செய்தால் சரியாக அன் இன்ஸ்டால் ஆகாமால் ரெஜிஸ்டரிக்குறிப்புகள் மற்றும் டிஎல்எல் கோப்புகள் அமர்ந்து விடும். இதனால் நம்மல் புதிய ஆன்டி வைரஸ் பதிய பெரிய தடங்கலாக இருக்கும்.  இது போன்ற ஆன்டி வைரஸ்களை நீக்க ஒரு மென்பொருள் சுட்டி  இது போல் அனைத்து வகையான மென்பொருட்களையும் நீக்கலாம்.



ஒசிஆர் ( OCR ) என்பது ஒரு மென்பொருள் அந்த மென்பொருள் நீங்கள் வாங்கும் ஸ்கேனருடன்  இணைந்து தரப்படும்.  இந்த மென்பொருள் ஒரு நிறுவனம் பல காலமாக தனியாக தயாரித்து விற்பனை செய்துவருகிறது அந்த மென்பொருளின் பெயர் அபி பைன் ரீடர்.  இந்த மென்பொருள் இலவசமாக சட்டரீதியாக தரப்படுகிறது இந்த மென்பொருளை பெற நீங்கள் செய்ய வேண்டியது கீழே தருகிறேன் பின்பற்றுங்கள்.   இந்த சலுகை எவ்வளவு நாட்கள் என்று தெரியாது அதனால் முடிந்தவரை விரைவாக செயல்படுங்கள்.

முதலில் இங்கே செல்லுங்கள்  சுட்டி

பிறகு அங்கே கீழே பார்த்தால் ஒரு விண்ணப்பம் இருக்கும் அங்கு உங்கள் பெயர் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்.  உடனே உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அபிபைன் ரீடரின் சீரியல் கீ வந்துவிடும்.  அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.  மிக முக்கியம் இங்கு கொடுக்கப்படும் பெயர் முகவரி மின்னஞ்சல் மென்பொருள் நிறுவும் பொழுது கொடுக்க வேண்டியிருக்கும். பத்திரமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த சுட்டியை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்குங்கள். சுட்டி பிறகு மென்பொருளை நிறுவிய பிறகு எப்படி ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை கீழ் உள்ள படங்கள் விளக்கும். 









இருநூறு வகையான போர்டபிள் மென்பொருட்கள் உங்களுக்காக இங்கே ஒருங்கிணைந்த மென்பொருளுக்குள் கிடைக்கிறது.  சுட்டி இதில் இரண்டு வகையான மென்பொருள் உள்ளது லைட் மற்றும் புல் இதில் உங்களுக்கு எது உதவுமோ அதை எடுத்துக் கொண்டு எங்கு வேண்டுமானலும் சென்று உபயோகப்படுத்தலாம். 


இதில் இணைந்துள்ள மென்பொருட்களின் அணிவரிசையை இங்கு காணலாம்.  சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

6 comments:

  1. மிக்க நன்றி திரு.R.வடிவேலன், நல்ல தகவலுக்கு.

    ReplyDelete
  2. போடுங்க நல்ல நல்ல பதிவா தொடர்ந்து போடுங்க . நாங்க இருக்கோம் ஆதரவு தர.. ஓகே?

    ReplyDelete
  3. dear,
    how r u?
    Pls help me for this ques....
    01. If i'm chating with some one that time how do i find the person location?
    02. pls give good solution for download the files from rapidshare for free
    my mail id : eliltanr@gmail.com

    ReplyDelete
  4. your presentation is fine. keep it up. how to send appreciation in tamil

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்