Dec 8, 2009

அனானியின் கேள்விக்கு பதில்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே ஒரு அனானி நண்பர் என்னை ஒரு கேள்வி கேட்டுள்ளார்.  இதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது.


Anonymous has left a new comment on your post "டிஜெயுவி என்ற கோப்பும் அதன் பயன்களும்":

சிலநாட்களுக்குமுன் திரு சைபர்சிம்மன் தனது பதிவுகள் அப்படியே பிறர் வலைத் தளங்களில் பதிவு செய்யப்படுவதைப் பற்றி எழுதியிருந்தபோது அதை வன்மையாகக் கண்டித்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால், நீங்கள் இடும் பதிவுகள் பல ஆங்கிலத்தில் வரும் தொழில்துட்ப பதிவுகளின் தமிழாக்கம்தானே! அவற்றைத் தமோழில் நீங்கள் தருவதைக்கூடப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆந்த ஆங்கிலப் பதிவுகளுக்கு நீங்கள் நன்றி கூடச் சொல்வதில்லயே! அதுவும் அந்தப் பதிவுகளில் உள்ள படங்களைக்கூட உங்கள் பதிவுகளில் அப்படியே பயன்படுத்தும்போது! உதாரணமாக இன்று நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த DJVU பதிவு இன்று வந்திருக்கும் www.tothepc.com பதிவின் நகல்தானே!


ஆனால் அவர் கூறுவது உண்மைதான்!!!   இது மற்ற வலைத்தளங்களின் தமிழாக்கம் மட்டுமல்ல!! என் கணிணியில் உபயோகித்து பார்த்து விட்டு எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றவர்களுக்கு சிறந்தது என்று கூறுகிறேன் இது தவறா ?? இது தவறில்லை என்றே தோன்றுகிறது.  கருத்துகளை காப்பி அடிப்பதற்கும் வேறு மொழியில் மொழிபெயர்த்து எம் மொழி மக்களுக்கு கூறுவதற்கும் வித்தியாசம் நிறைய உண்டு.   இந்த மென்பொருள் நமக்கு சொந்தம் என்று நாம் இதுவரை எந்த மென்பொருளை கூறியதில்ல  உதாரணத்திற்கு ஒரு திரைப்படம் முதல்தர தியேட்டருக்கு வந்துவிட்டு இரண்டாம் தர தியேட்டருக்கு வருவதில்லையா?? அதுபோல் வேற்று மொழி திரைப்படங்கள் இங்கு திரையிடுவதில்லையா?? ஒரு நல்ல திரைப்படம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு மொழிகளில் மாற்ற்ப்படுவதில்லையா இதனால் திரைப்படம் எடுத்தவருக்கு மட்டுமே பெருமை அவரவர் மொழிகளில் எடுப்பதால் அவரவருக்கு பெருமை. எப்படி பார்த்தாலும் அனைவருக்கும் அந்த திரைப்படம் பெயரை பெற்றுக் கொடுப்பதில்லையா ஒரு திரைப்படம் நூறு நாட்கள் ஒடினால் திரைப்படத்தை கூறுவோமே தவிர ஒடுகின்ற திரையரங்கை கூறுவதில்லை அதுபோல ஒரு மென்பொருள் பற்றி விளக்கி எம் மொழி மக்களுக்கு தெரிவதால்தான் வடிவமைத்தவருக்கு மட்டுமே நான் எழுதும் பெருமை அனைத்தும் போய் சேருமே தவிர மொழி மாற்றம் செய்து எழுதும் என்னை சேராது.  அதை மொழி மாற்றுவதால் என் மொழி மக்கள் என்னை பாராட்டுகிறார்கள் அதனால் ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள் உலகத்தில் உள்ள அனைவரையும் சென்றடைகிறது.  எம் மொழியில் எழுதுவதால் எம் மொழி மக்கள் அனைவரையும் சென்றடைகிறது.  எம் மொழி மக்கள் வேண்டும் என்பதால்தான் இப்பொழுது உருவாக்குகிற மிக முக்கிய மென்பொருட்கள் அனைத்தும் தமிழ் மொழியை தாங்கி வருகிறது.  மொழி மாற்றம் செய்யும் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. நிறைய ஆங்கில பதிவுகள் வேறு வெளி நாட்டு தளங்களை பார்த்து படித்தே எழுதுகிறார்கள் சொந்தமாக தேடி எழுதுவதில்லை அது எத்தனை பேருக்கு தெரியும்.  சொல்லுங்கள்
      
என் வலைப்பதிவுகளை படித்து இதுவரை மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் கூட ஒரளவுகு புரிந்து கொண்டுள்ளார்கள்.   நான் கூறும் மென்பொருள்கள் அதிகபட்சம் அனைவரும் எடுத்தாளக்கூடிய உரிமம் கொண்ட சுதந்திர இலவச கட்டற்ற மென்பொருளாகதான் இருக்கிறது.  அது மட்டுமில்லை சட்டரீதியான இலவச மென்பொருட்கள் மட்டும்தான் கொடுக்கிறேன். அவர் கூறியுள்ள DJUV என்ற வகை கூட சுதந்திர இலவச கட்டற்ற மென்பொருள்தான்.

அவருக்கு நன்றி கூறவில்லை என்பதுதான் பிரச்சனை என்பதால் இதுவரை உதவிய அனைத்து இணையத்தளங்களுக்கும் இணைய எழுத்தாளர்களுக்கும் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கும் இனிமேல் உதவ போகிற அனைத்து இணையத்தளங்களுக்கும் இணைய எழுத்தாளர்களுக்கும் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி போதுமா? அனானி அவர்களே!!!



நன்றி மீண்டும் வருகிறேன்

9 comments:

  1. சரியா தான் சொல்லியிருக்கிங்க!

    ReplyDelete
  2. வேலன் நீங்க அதைப்போல பயன்படுத்தினால் அதே பதிவில் நன்றி கூறலாம் என்பது என் கருத்து.

    இதற்க்கு சம்பந்தம் இல்லாதது

    உங்கள் பதிவில் "Google Connect" window அதிக நபர்களை காட்டுவதாக உள்ளது, பார்க்க அழகாக உள்ளது, இதை எப்படி அமைப்பது என்று கூற முடியுமா?

    ReplyDelete
  3. நன்றி வேலன் Google connect லியே அந்த வசதி உள்ளது.

    ReplyDelete
  4. சரியா தான் சொல்லியிருக்கிங்க

    thanks

    ReplyDelete
  5. இதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை

    ReplyDelete
  6. தொடருங்கள் நண்பரே....

    ReplyDelete
  7. இதில் தவறு ஏதும் இல்லை. நீங்கள் உங்கள் பணிகளை தொடருங்கள்.

    ஒரு லட்சம் ஹிட்ஸ் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அவுரு சொன்ன அந்த www.tothepc.com ல அத எழ்திய நண்பர் ஒரு எடத்துல கூட அந்த கம்பனிக்கி நன்றி சொல்லி போடலியே ? அது ஏன் ?

    அப்பிடி பாத்தா அவுரு செஞ்சதும் தப்பு தானே ? அட அத உடுங்க நம்ப தமிழ் பதிவுலயே காப்பி பண்ணி போடுராங்கோ அதத் தான் ஜீரணிக்க முடியல , மத்த படி சரி ,

    யப்பா !! இது மூலமா எல்லா கம்பனிக்கும் இனிமேட்டு வரப் போற கம்பனிக்கும் சேத்து அவுங்க கண்டு புட்ச இனி மேட்டு கண்டு புடிக்கப் போற எல்லாத்துக்கும் நன்றி நன்றியோ நன்றி .

    ReplyDelete
  9. கட் அண்டு பேஸ்ட்க்கும் சோதித்து பார்த்து எழுதுவதற்கும் நிரம்ப வித்தியாசம் உள்ளது என்பதை அந்த அனானி தெரிந்து கொண்டிருப்பார் என்று நிணைக்கிறேன்.

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்