Dec 15, 2009

2009ல் மிகவும் பிரபலமான அதிகம் பேர் தரவிறக்கிய மென்பொருட்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

 நண்பர்களே 2009ல் மிகவும் பிரபலமாகவும் நிறைய பயனாளர்கள் தரவிறக்கம் செய்த மென்பொருட்களை பற்றி இங்கு பட்டியலிடப்படுகிறது.  இது என் சொந்த கருத்து அல்ல ஒரு இணையத்தளத்தின் கருத்து.

உபுண்டு எல்லோருக்கும் தெரியும் அதை விண்டோஸுக்குள் நிறுவி உபயோகிக்க இந்த போர்டபிள் உபுண்டு சுட்டி




விண்டோஸ் எக்ஸ்பியை விண்டோஸ் 7 போல உருமாற்றம் செய்ய மென்பொருள் சுட்டி

ஒரு கணிணிக்கு தேவையான அடிப்படையான அனைத்து மென்பொருட்களையும் ஒரே மென்பொருள் மூலம் நிறுவ இந்த வலைத்தளம். சுட்டி


ஒரு கணிணிக்கு இலவசமாக தரும் முதல்தர ஆன்டிவைரஸ் ஏவிஜி ஆன்டி வைரஸ் சுட்டி


வந்த வேகத்திலேயே வெற்றி பெற்ற வேகமான உலாவியாக இது கருதப்படுகிறது கூகிள் நிறுவனத்தின் வெளியீடான கூகிள் குரோம் உலாவி  சுட்டி




வலை உலாவியின் ராஜாவாக திகழும் நெருப்பு நரி உலாவி சுட்டி


மைக்ரோசாப்டின் அவுட்லுக்குக்கு மாற்றாக திகழும் தண்டர்பேர்டு மின்னஞ்சல் கிளையன்ட் மென்பொருள் சுட்டி



 இது மட்டுமல்லாமல் வின் ஜிப், வின் ஆம்ப், இது போன்ற நிறைய மென்பொருட்கள் உள்ளது நேரம் இல்லாததால் இத்துடன் முடிக்கிறேன்.


ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளனர் கூகிள் தேடுபொறியில் அது என்ன புத்தாண்டு பிறக்க சிறிது நாளே உள்ள நிலையில் கூகிள் தன்னுடைய தேடுபொறியில் புத்தாண்டு பிறக்க எவ்வளவு நேரம் உள்ளது என்பதை ஈஸ்டர் எக் என சொல்லப்படும் நிலையில் மறைத்து வைத்துள்ளனர்.  அதை கண்டுபிடிக்க கூகிள் முகப்பு பக்கத்தை திறந்து வைத்துக் கொண்டு I'm Feeling lucky என்ற பொத்தானை ஒரு முறை அமுக்குங்கள் ஒரு புதிய உதவி பக்கம் திறக்கும் பிறகு பின்னால் சென்ற பிறகு மீண்டும் ஒரு முறை I'm Feeling Lucky என்ற பொத்தானை அழுத்துங்கள் இப்பொழுது கீழே கவுண்ட் டவுன் தெரியும்.




உங்களிடம் ஒரு புகைப்படம் அதன் பின்புலம் உங்களுக்கு புகைப்படவில்லை எப்படி நீக்க முடியும் ஒன்று அடோபின் போட்டோஷாப் மென்பொருள் தேவை அல்லது இந்த மென்பொருள் உங்களுக்கு தேவை இந்த மென்பொருள் மூலம் ஒரு புகைப்படத்தின் பின்புலம் சுலபமாக நீக்கலாம்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

3 comments:

  1. Wow! New year count down is superb.. from whr u r getting these inforamtion. Really very useful and intersting ur blog is.. Thank you for these kind of valuable posts..

    ReplyDelete
  2. அன்பின் வேலன்

    அரிய தகவல்கள் - பகிர்ந்தமைக்கு நன்றி

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்