Oct 1, 2009

அனைத்து வகையான மின் புத்தகங்களை படிக்க உதவும் மென்பொருள்

நண்பர்களே கணிணி வந்தபிறகு புத்தகங்கள் படிப்பது வெகுவாக குறைந்திருப்பதாக ஒரு ஆய்வில் கூறப்படுகிறது.  ஆனால் கணிணியில் மின் புத்தகங்கள் படிப்பது அதிகரிப்பது ஒரு ஆறுதல் அளிக்கும் தகவலாகும்.  இவ்வாறு மின் புத்தகங்கள் படிப்பவர்களுக்காக ஒரு மென்பொருள்.  இந்த மென்பொருள் CBZ, CBR, CBC, EPUB, FB2, HTML, LIT, MOBI, ODT, PDF இது போன்ற பார்மெட்டுகளை ஆதரிக்கிறது. இதனால் கணிணியில் சேமித்து வைத்துக் கொண்டு இணையத்தில் உலாவராமால் இந்த மென்பொருள் மூலம் படிக்க முடியும். இது ஒர் ஆர் எஸ் எஸ் ஒடையாகவும் செயலாற்றுகிறது.



மென்பொருள் சுட்டி

நண்பர் ஒருவர் கணிணியில் உள்ள முகவரி புத்தகங்கள் அந்த அளவுக்கு பயனில்லை என்று கூறினார். அவருக்காக இந்த மென்பொருள் இந்த மென்பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட தனித்தனி கணக்குகள் மூலம் நம் முகவரிகளை சேமிக்கலாம்.  இந்த மென்பொருளில் உள்ள Sync மூலம் அவர்களுடைய சர்வரில் நேரடியாக சேமித்துக் கொள்ளலாம். மென்பொருள் சுட்டி




இதே போன்ற இன்னொரு மென்பொருள் சுட்டி

மைக்ரோசாப்டின் புதிய ஆன்டி வைரஸ் இணையம் இல்லாத கணிணியில் நிறுவ சுட்டிகள்.

விண்டோஸ் எக்ஸ்பி 32 பிட்

விண்டோஸ் 7 & விஸ்டா 32 பிட்

விண்டோஸ் 7 & விஸ்டா 64 பிட்

குறிப்பு : நிறுவிய பிறகு கட்டாயம் இணைய இணைப்பு தேவை அப்பொழுதுதான் புதிய பதிப்புகள் புதுப்பிக்கப்படும்.


ராபிட்சேர், மெகா அப்லோடு, மற்றும் டெபாசிட் பைல்ஸ் போன்ற தளங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான கோப்புகள் தரவிறக்கப்படுகிறது.  ஆனால் நாம் தரவிறக்கும் போது இந்த நாட்டில் தரவிறக்கும் வரைமுறை தாண்டிவிட்டது என்று கூறி தரவிறக்கம் மட்டுப்படுத்தப்படுகிறது.  இது போன்ற சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மென்பொருளில் ஒரே நேரத்தில் பல தளங்களில் இருந்து தரவிறக்க முடிகிறது.  மென்பொருள் சுட்டி




உங்கள் கணிணி ஒவ்வொரு முறை ஆன் செய்யும்பொழுது ஒரே சத்தத்தை கேட்டு போரடித்து விட்டதா? உங்களுக்காக ஒரு மென்பொருள் இந்த மென்பொருள் மூலம் முடியும் புதிய உங்களுக்கு பிடித்த சத்தங்களை இதில் கேட்கலாம்.

முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணிணியில் ஏதாவது ஒரு இடத்தில் சேமியுங்கள். பின்னர் இந்த சுருக்கப்பட்ட கோப்பினை விரியுங்கள்.

அதனுள் StartSoundRandomizer என்ற கோப்பில் வலது கிளிக் செய்து SendTo என்பதனை தேர்வு செய்து அதில் Desktop (create Shortcut) என்பதனை தேர்வு செய்யுங்கள்.

பின்னர் அந்த மென்பொருளை இயக்கி அதில் எங்கு .wmv கோப்புகள் சேமித்து வைத்துள்ளீர்களோ அதை செலக்ட் செய்யுங்கள். 

பின்னர் அதை Start பட்டனை கிளிக் செய்து Programs என்பதனை தேர்வு செய்து Startup என்பதனை வலது கிளிக்செய்து Open கொடுங்கள்.

அந்த போல்டரினுள் இந்த ஷார்ட்கட்டினை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள் முடிந்தது.



நெருப்பு நரியில் உலாவும் நண்பர்க்ள் கூகிள் சென்றால் ஒரே வெள்ளை பிண்ணியை பார்த்து போரடித்துவிட்டதா. இந்த ஆடு ஆனை இணைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்த பிண்ணை புகைப்படத்தை மாற்றலாம்.  ஆடு ஆன்



தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தேவையான ஒன்று இந்த குட்டி மென்பொருள் அதன் பெயர் ரீ எனபிள். Re Enable இதன் மூலம் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டால் டாஸ்க்மேனஜர் டிசபிள், ரெஜிஸ்டரி எடிட் டிசபிள்ட் இது போன்று பிழைச் சொற்கள் வரும்.  அந்த நேரத்தில் வைரஸ் சோதனை செய்தாலும் வேலைக்கு உதவாது.  இந்த மென்பொருள் அனைத்து கணிணி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் கணிணியை உபயோகிப்பவர்களுக்கும் இது மிகவும் உபயோகமான மென்பொருள்.  தரவிறக்க சுட்டி


யோகாவில் விருப்பமுள்ளவர்கள் வருகிற அக்டோபர் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் சென்னை தீவுத்திடலில் பிரம்மாகுமாரிகள் சார்பில் நடத்தும் உலகத்திருவிழாவில் கலந்து கொள்ளலாம். இரண்டு நாட்களும் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் வடிவமைப்பை உருவாக்கி கண்காட்சிக்கு வைத்துள்ளார்கள் மற்றும் யோகா தொடர்பான அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



அனைவருக்கு ஓர் வேண்டுகோள் உங்கள் ஆதரவினால் தான் இவ்வளவு பதிவுகள் என்னால் பகிர்ந்து கொள்ள முடிந்தது. நீங்கள் நினைத்தால் தினம் படிக்கும் நீங்கள் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்தால் எமக்கு உதவியாக இருக்கும். அத்துடன் ஒரு பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்துங்கள். உங்கள் ஆதரவு மட்டுமே என்னை 300வது பதிவை நோக்கி அழைத்து சென்று கொண்டிருக்கிறது.  நன்றி


நன்றி மீண்டும் வருகிறேன்

13 comments:

  1. இ-புத்தகங்கள் படிப்பது சம்பந்தமான சுட்டி மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி

    டிரை பண்ணி பார்க்கிறேன் :))

    ReplyDelete
  2. ரொம்ப ரொம்ப நல்ல பதிவு வடிவேலன்..இன்னும் அதிக உபயோகமான தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..


    அன்புடன்,

    அம்மு.

    ReplyDelete
  3. வணக்கம் வடிவேலன், உங்கள் பதிவுகள் மிக அருமை.
    நான் புதிதாக வலைப்பதிவு ஒன்றை துவங்கி உள்ளேன்.
    உங்கள் வருகைக்கு வரவேற்பு அழைப்பாக கருதி ஒரு நோட்டம் இட்டு உங்கள்
    மேலான கருத்துகளை தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்.
    நன்றி.
    அஷ்வின் ஜி
    www.vedantavaibhavam.blogspot.com

    ReplyDelete
  4. good anna.
    http://biz-manju.blogspot.com

    ReplyDelete
  5. nice work...but ur pure tamil is makes me to read little difficult.say technical words in tamil as well as english with brackets.

    ReplyDelete
  6. Very fine. Can include good dictionary for tamil-english in your s/w collections.

    ReplyDelete
  7. என் நண்பன் சொன்னான் இந்த தளம் பற்றி..இது என்னுடைய முதல் வருகை...
    என் ஆதரவு எப்பவும் இருக்கும் உங்களுக்கு...

    ReplyDelete
  8. என் ஆதரவு எப்பவும் இருக்கும் உங்களுக்கு...

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்