Aug 31, 2009

போலி விமான பயணச்சீட்டு உருவாக்க வேண்டுமா வாருங்கள் இங்கே

நண்பர்களே  150வது பாலோயராக திரு. ஷண்முகப்பிரியன் இணைந்து நம் வலைப்பதிவை பெருமைப்படுத்திருக்கிறார் இவர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  இவர் ஒரு திரைப்பட எழுத்தாளன்! இயக்குனர்! வெற்றிவிழா, சின்னத்தம்பி பெரிய தம்பி, பிரம்மா போன்று 30 படங்களை எழுதியதும், ஒருவர் வாழும் ஆலயம் போன்று நான்கு படங்களை எழுதி இயக்கியதும் இவரது அனுபவங்கள்.
 
ஷண்முகபிரியனின் படித்துறை என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறார்.  அவருக்கு நன்றி. இவரை போன்ற பெரியவர்கள் என்னை பின் தொடர்வதற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. தொழில்நுட்ப பதிவுகளுக்கு இப்படி ஒரு பெருமையா என்று புளகாங்கிதம் அடைகிறேன்.  மிகவும் குறுகிய நாட்களில் அலெக்ஸா ரேங்கில் நான்கு லட்சத்துக்குள் நம் வலைப்பதிவும் வந்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது நன்றி. பின் தொடர்ந்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கூகிள் ரீடர் மூலமும் மற்ற திரட்டிகளின் மூலம் படிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் ஒரு லட்சத்துக்குள் வர உங்கள் பேராதரவை தொடர்ந்து அளிக்கவும்.  நாளை என்னுடைய முப்பதாவது பிறந்த நாள் அனைவரும் வாழ்த்துங்கள் வளர்கிறேன்.



நாம் இதுவரை யூட்யுப் தரவிறக்க எத்தனை இணையதளங்கள் பயன்படுத்தியிருப்போம்.  அதில் இதுவும் ஒன்று ஆனால் இதில் ஒரு சிறப்பு இந்த இணையத்தளத்தின் மூலம் Facebook, MySpace போன்ற சமூகதளங்களிலிருந்தும் வீடியோக்களை தரவிறக்கலாம் என்பதே அது.

இந்த தளத்திற்கு செல்லுங்கள் சுட்டி

நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் சுட்டியை கொடுங்கள். அந்த சுட்டிகள் இப்படி இருக்க வேண்டும்.

Youtube Link

http://www.youtube.com/watch?v=wcdl0BOwpeQ

MySpace Link

http://vides.myspace.com/index.cfm?fuseaction=vids.individual&videoid=58793690

Facebook Link

http://www.facebook.com/video/video.php?v=37511833824

இணையத்தள சுட்டி


இதுவரை விமான பயணம் எல்லோருக்கும் கிடைத்திருக்குமா! என்பது சந்தேகமே சிலர் விமான பயணச்சீட்டைக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.  ஆனால் உங்கள் பெயரிலே ஒரு விமான பயணச்சீட்டை வாங்க வேண்டும் என்றால் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

அதற்காக போலி விமான பயணச்சீட்டை உருவாக்க இந்த தளம் உங்களுக்கு உதவுகிறது.  உங்கள் நண்பர்களிடம் போலி விமான பயணச்சீட்டு அச்சடித்து காட்டலாம் ஆனால் இதை வைத்து விமான நிலையத்திற்குள் செல்ல முயற்சிக்காதீர்கள் அது பெரிய பிரச்சனைக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு உருவாகலாம்.   பார்ப்பதற்கு விமான பயணச்சீட்டு போலவே இருக்கும் விமான பயணச்சீட்டை உருவாக்க ஒரு தளம் சுட்டி



உங்கள் புகைப்படத்தை கண்ணாடியில் பிம்பம் தெரிவது போல மாற்ற இங்கே செல்லவும் சுட்டி
 
கண்ணாடி எபெக்டில் மாற்றிய என் மகனின் புகைப்படம் 

நன்றி மீண்டும் வருகிறேன்




13 comments:

  1. Happy birthday friend. and congrats for ur alexa ranking. keep it up

    ReplyDelete
  2. இவ்வளவு இன்றியமையாத கணிணித் தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்,வடிவேலன்.

    நாளை முப்பதாவது பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    உங்கள் பெயரிலேயே இருக்கும் வடிவேலன் உங்களுக்கு எல்லா நலங்களையும் அருளட்டும்.

    ReplyDelete
  3. மீண்டும் பயனுள்ள தகவல்கள் நன்றி

    ReplyDelete
  4. 150வது பாலோயர் திரைப்பட அனுபவஸ்தர்... அவரை பற்றி கார்த்தி சொல்லிக்கேள்வி பட்டு இருக்கின்றேன்...

    நல்ல பல தகவல்கள் துரும் உங்கள் சேவை தொடரட்டும்....

    ReplyDelete
  5. 30 வயதில் காலடி எடுத்து வைக்கப்போகும் உங்களை மனமார வாழ்த்துகிறேன்.

    உங்கள் சேவை போற்றப்பட்டத்தக்கது.
    ஒரு பதிவை எழுதுவதே பெரும் சிரமமானது. இத்தனை பதிவையும் அதுவும் அனைத்தும் பயனுள்ள, அனைவருக்கும் பயன்படத்தக்க குறிப்புகளை எழுதுவரும் உங்களை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

    உங்கள் ஒருபதிவையும் நான் தவறவிடுவதில்லை.

    இறைவன் உங்களை மென்மேலும் ஆசிர்வதித்து உங்கள் புகழை ஓங்கச் செய்வார்.

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே

    அன்புடன்
    கொல்வின்
    இலங்கை

    ReplyDelete
  6. 150க்கு வாழ்த்துக்கள்!

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை!

    ReplyDelete
  7. நாளை முப்பதாவது பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.

    மனமார்ந்த வாழ்த்துகள், உங்கள் சேவை தொடரட்டும்....

    ReplyDelete
  8. அன்புடன் அன்வர்August 31, 2009 at 10:51 PM

    30 வது பிறந்தநாள் காணும் இனிய நண்பருக்கு நல்வாழ்த்துக்கள். பல காலம் ஆரோக்யமாக வாழ வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  9. இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு ஒரு இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது

    இனையமுகவரி :
    டெக்னாலஜி.காம்

    ReplyDelete
  10. 30 வது பிறந்தநாள் காணும் இனிய நண்பருக்கு நல்வாழ்த்துக்கள். பல காலம் ஆரோக்யமாக வாழ வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  11. நல்ல தகவல்கள்.
    நான் நாளை அமெரிக்கா போகிறேன்...

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்