நண்பர்களே நாம் அனைவரும் விண்டோஸில் Run வழியே நிறைய ப்ரோகிராம்கள் இயக்கியிருப்போம். அது போன்று நாம் நமக்கு பிடித்த ப்ரோகிராம்கள் அல்லது விளையாட்டுகள் எப்படி கொண்டுவருவது என்பது குறித்து பார்ப்போம்.
அதற்கு இந்த மென்பொருளை நீங்கள் முதலில் தரவிறக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருள் இலவச மென்பொருள்.
இங்கு இருந்து சுட்டி தரவிறக்கிய பின்னர் அந்த மென்பொருள் 7zip என்ற பார்மெட்டில் இருக்கும் அதை விரிப்பதற்கு இந்த மென்பொருள் தேவைப்படும் சுட்டி.
பின்னர் இந்த மென்பொருள் மூலம் விரித்த பின்னர் அந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை நிறுவ வேண்டிய அவசியமில்லை அப்படியே நேரடியாக திறந்து கொள்ளலாம்.
திறந்த பிறகு Select the Program என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான ப்ரோகிராம் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கு எந்த பெயர் தேவையோ அந்த பெயரை Alias என்ற இடத்தில் கொடுத்து விட்டு Add என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் முடிந்தது பின்னர் நீங்கள் Run பகுதிக்கு சென்று நீங்கள் கொடுத்த பெயர் டைப் செய்து என்டர் தட்டியவுடன் உடனே திறக்கும்.
இதே முறையை கையாண்டு நீங்கள் அந்த பெயரை எடுக்கவும் செய்யலாம்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி
7zip மென்பொருள் தரவிறக்க சுட்டி
இன்றைய இணையப்பக்கம்
நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இணையத்தில் பைல்கள் பகிர்வதாக இருந்தால் இந்த தளத்தில் பகிரலாம். இந்த தளம் ஏன் என்றால் ஒரே நேரத்தில் ஏழு தளங்கள் தரவேற்றப்படுகின்றது. சில நாடுகளில் சில தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த தளம் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இணைய தள சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
No comments:
Post a Comment
வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்